விஜய் படம் எப்படி இருக்கு.?… ‘பீஸ்ட்’ விமர்சனம்

விஜய் படம் எப்படி இருக்கு.?… ‘பீஸ்ட்’ விமர்சனம்

ஒன்லைன்…

கோலமாவு கோகிலா, டாக்டர் என இரு டார்க் காமெடி படங்களை கொடுத்த நெல்சன் ‘பீஸ்ட்’ படத்திலும் டார்க் காமெடியை கொடுத்திருக்கிறார்.

கதைக்களம்…

இந்திய ராணுவத்தின் உளவாளியாக இருக்கிறார் விஜய். ஒரு கட்டத்தில் தீவிரவாதியை பிடிக்கும் பொழுது தவறுதலாக ஒரு குழந்தை இறந்துவிடுகிறது.

இதனால் விரக்தியில் தனது வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் இருக்கிறார்.

ஒரு சூழ்நிலையில்… நாம் ஏற்கனவே சொன்னது போல ‘கூர்கா’ படம் போல சிட்டியில் உள்ள ஒரு Complex Mallஐ தீவிரவாதிகள் ஹைஜாக் செய்கின்றனர். அங்கு மக்கள் & முதல்வரின் மனைவி குழந்தைகள் என பெரும்பாலானோர் சிக்கிக் கொள்கின்றனர்.

ஏப்ரல் 13 ‘பீஸ்ட்’ ரிலீசில் சிக்கல்.; அரசு தடையால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

மேலும் ரா ஏஜெண்ட்டாக பணிபுரிந்த வீரராகவன் (விஜய்)யும் இதற்குள் இருக்கிறார்.

அவர் எப்படி மக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார் என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

விஜய் தன் பணியை சிறப்பாக செய்துள்ளார். டான்ஸ் கலகலப்பு ரொமான்டிக் என ரசிக்க வைத்துள்ளார். ஆக்சனிலும் அசத்தியுள்ளார்.

டாமினிக் செக்யூரிட்டி சர்வீஸில் பூஜா ஹெக்டே ப்ரீத்தியாக அறிமுகமாகிறார். அழகாக இருக்கிறார் பூஜா.

விவேகம் பட வில்லன் போல விஜய்க்கு பில்டப் கொடுத்துள்ளார் செல்வராகவன். (ஹி..ஹி..) அல்தாஃப் உசைன் என்பவராக இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளார்.

டாம் ஷைன் சாக்கோ வில்லனாக மிரட்டுவார் என எதிர்பார்த்தால் அதில ஒரு ட்விஸ்ட் வச்சிருக்காரு.

ஆகஸ்ட் டார்கெட்.. தீபாவளி ரிலீஸ்..; விஜய் 66 படக்குழுவின் பக்கா ப்ளான்

விஜய் உடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விடிவி கணேஷ் & பூஜா ஹெக்டே காம்போவில் காமெடி நல்லாவே வொர்க்கவுட் ஆகியுள்ளது.

டெக்னீஷியன்கள்…

டாக்டர் பட கடைசி சாங் போல… ஜாலியோ ஜிம்கானா பாடல் படம் முடிந்த பின்பு வருகிறது.

அனிருத்தின் இசை படத்திற்கு பெரும் பலம். ‘அரபிக்குத்து…’ மற்றும் ‘ஜாலியோ ஜிம்க்கானா…’ ஆகிய பாடலுக்கு ஆட்டம் போடாதே ரசிகர்களே இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு குத்தாட்டத்தை காணலாம்.

மனோஜ் பரமஹம்சரின் ஒளிப்பதிவு சூப்பர். காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார். படத்துடன் ஒன்ற வைக்க உதவியுள்ளது.

எடிட்டிங் கச்சிதமாக அமைந்துள்ளது.

ட்ரைலர் ஒரு மாரி. படம் வேற மாரி.; ‘மணி ஹெய்ஸ்ட்’ & ‘கூர்கா’ மாதிரியா..? – நெல்சன் விளக்கம்

நெல்சன் வழக்கமான டார்க் காமெடியை இதிலும் வழங்கியுள்ளார். விஜய்க்காக எக்ஸ்ட்ரா சீன்களை வைத்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள் அனல் தெறிக்கின்றன.

ஆனால் டார்க் காமெடி & லாஜிக் ஒர்க் அவுட் ஆகவில்லை. யோகிபாபு கிங்ஸ்லி ஆகியோரின் காமெடி சில இடங்களில் மட்டுமே செட்டாகிறது. விடிவி கணேஷ் காமெடி ரசிக்க வைக்கிறது.

கமர்ஷியல் படங்களில் லாஜிக் தேவையில்லை. அதை மனது வைத்தால் இந்த படத்தை விஜய் ரசிகர்கள் ரசிக்கலாம்.

நெல்சன் படம் என்றால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இதில் மிஸ்ஸிங். மேலும் விஜய்யே நன்றாக காமெடி செய்ய தெரிந்த மாஸ் ஹீரோ தான். அவரையும் பயன்படுத்தி இருக்கலாம்.

அதிகார வெறி காவலர்கள்…; ‘டாணாக்காரன்’ விமர்சனம் 4/5

அதிகார வெறி காவலர்கள்…; ‘டாணாக்காரன்’ விமர்சனம் 4/5

ஒன்லைன்..

காவலர் பயிற்சி மையத்தில் நடக்கும் கொடுமைகளை அப்பட்டமாக தோலுத்துரிள்ள படம் ‘டாணாக்காரன்’. சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தில் கொடூர காவலராக நடித்த தமிழ் என்பவர் இந்த டாணாக்காரன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

கதைக்களம்..

1998 காலக்கட்டத்தில் போலீஸ் பயிற்சி மையத்தில் நடக்கும் கதை இது. அந்த இளைஞர்கள் பட்டாளத்தில் விக்ரம் பிரபு, பாவல் நவநீதன் ஆகியோரும் உண்டு.

இந்த பயிற்சி குழுவுடன் 1982ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் இணைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

1982 குழுவுக்கு 15 வருடங்களுக்கு பிறகு பயிற்சி அளிக்கப்படுவதால் அவர்களின் தற்போதைய வயது 40 முதல் 50 வயது வரை உள்ளது.

பயிற்சி குழுவின் ஆசிரியர்களாக லால், எம் எஸ் பாஸ்கர் உள்ளனர். இவர்களின் மேல் அதிகாரிகளாக மதுசூதனன் மற்றும் போஸ் வெங்கட் ஆகியோரும் உள்ளனர்.

லால் கொடுக்கும் டார்ச்சரான பயிற்சியினால் பலர் ஓடி விடுகின்றனர். பலர் தற்கொலை செய்துக் கொள்கின்றனர்.

கள்ளக்-காதல் மன்னன்..; மன்மத லீலை விமர்சனம் 3.5/5

லால் மற்றும் மதுசூதனன் தரும் டார்ச்சர்களை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்கிறார் விக்ரம் பிரபு. (உதாரணத்திற்கு 350 பேர் உள்ள விடுதியில் 5 டாய்லெட் மட்டுமே உள்ளது.)

இதனால் பயிற்சியில் இன்னும் பல டார்ச்சர் கொடுக்கிறார் லால்.

இறுதியில் என்ன ஆனது? பயிற்சியை முடித்தாரா? விக்ரம் பிரபு, தற்கொலைக்கு தீர்வு உருவானதா? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

கம்பீரம் கலந்த கண்ணியம் மிக்க நடிப்பை கொடுத்துள்ளார் விக்ரம் பிரபு. கும்கி படத்திற்கு பிறகு அவரது சினிமா வாழ்க்கையில் மைல்கல் படமாக டாணாக்காரன் அமையும் எனலாம்.

எங்குமே மிகைப்படுத்தாத நடிப்பை கொடுத்துள்ளார். காட்சிகளில் அளவோடு பேசி தன் நடிப்பை பேச வைத்துவிடுகிறார். தண்டனைக்காக எக்ஸ்ட்ரா டிரில் போடும் காட்சிகளில் கண்களை குளமாக்கிவிடுவார்.

அழகான நாயகியாக அஞ்சலி நாயர். இவர் டேய்.. வாடா போடா என விக்ரம் பிரபுவை அழைக்கும் போது ரசிக்க வைக்கிறார். கட்டிக்கோடா.. கட்டிக்கோடா என்ற பாடலில் உணர்வுப்பூர்வமான காதலை கண்களால் காட்டியுள்ளார்.

தரங்கெட்ட தரகர்களின் குரூப் போட்டோ..; செல்ஃபி விமர்சனம் 3.75/5

சித்தப்பா என்ற கேரக்டரில் நடித்துள்ள நபரின் நடிப்பு அனைவரையும் கவரும். 4 பெண் குழந்தைகளை பெற்ற பின் போலீஸ் பயிற்சி மையத்தில் இணைந்த இவரின் நடிப்பு போற்றும்படி உள்ளது.

இவர்களுடன் பாவல் நவகீதன் மற்றும் லிங்கேஷ் ஆகியோரின் நடிப்பும் கவனிக்கத்தக்க வகையில் உள்ளது. இவர்கள் உயர் அதிகாரிகளை எதிர்க்கும்போது நம்மை அறியாமலே சூப்பர்யா என்ற சொல்லத் தோன்றும்.

கொடூர வில்லனாக லால். யப்ப்ப்பா… என்ன நடிப்புய்யா.. லால் வேற லெவல்.

15 வருடங்களாக புரோமோசன் இல்லாமல் ஏட்டய்யா பதவி வகிக்கும் எம்எஸ் பாஸ்கர் நடிப்பு கச்சிதம். க்ளைமாக்ஸில் அசத்தல்.

அதுபோல் முருகன் கேரக்டரில் வரும் அந்த குண்டர் சூப்பர் நடிப்பு.

டெக்னீஷியன்கள்..

ஜிப்ரானின் பின்னணி இசை மிரட்டல். சென்டிமெண்ட் காட்சிகளில் கதையோடு பயணித்து நம்மையும் இழுத்து செல்கிறது.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். எல்லா காட்சியிலும் 300 பேர்களை வைத்து படமாக்கியுள்ளது சிறப்பு.

போலீஸ் பயிற்சி மையத்தில் கொடுக்கப்படும் பயிற்சிகளை அவலங்களுடனும், ரணகளத்துடனும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் தமிழ்.

காவலர் ஆவதற்கு இத்தனை கஷ்டங்களா என கண்கலங்க வைத்துள்ளார். காரணம் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இவரும் போலீஸாக இருந்துள்ளார். அந்த அனுபவத்தை சரியாக கொடுத்துள்ளார் எனலாம்.

டாணாக்காரன் படத்தை காவலர்கள் சல்யூட் அடித்து பார்க்கலாம். அதே சமயம் காவலர்கள் இடையே உள்ள ஈகோ பொறாமைகள் தவிர்த்தல் நலம்.

அப்பாவிகளிடையே காவலர்களின் அதிகாரத்தை காட்டாமல் குற்றவாளிகள் மீது அதிகார வெறியை காட்டினால் இந்த நாடு நாடாக இருக்கும் என்பதை தைரியமாக சொன்ன இயக்குனர் தமிழுக்கு தமிழ் சினிமா தலை வணங்கும்.

இதுவரை எத்தனையோ போலீஸ் படங்களை கமர்ஷியலோடு கண்டு இருக்கிறோம். ஆனால் முழுக்க முழுக்க பயிற்சி மையத்திலேயே நடக்கும் கொடுமைகளை காட்டியிருப்பது சிறப்பு.

ஆனால் கடைசியில் போலீஸ் அதிகாரமே ஜெயிக்கிறது என்பதை காட்டியிருக்கிறார். அப்படி என்றால் நேர்மைக்கும் கண்ணியத்திற்கு காலமே இல்லையா-? என்ற கேள்வியும் எழுகிறது.

ஒருவேளை டாணாக்காரன் 2ஆம் பாகத்தில் சொல்வாரோ? இயக்குனர் தமிழ்.?

Taanakkaran movie review and rating in tamil

கள்ளக்-காதல் மன்னன்..; மன்மத லீலை விமர்சனம் 3.5/5

கள்ளக்-காதல் மன்னன்..; மன்மத லீலை விமர்சனம் 3.5/5

ஒன்லைன்…

காதல் மன்னன் ஆடும் மன்மத லீலைகளே கதை.

கேரக்டர்கள்…

2010 முதல் 2020 வரை உள்ள 10 ஆண்டுகளில் நடக்கும் கதை இது. அதையும் இதையும் மாற்றி மாற்றி காட்டியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

2010ல் சம்யுக்தாவுடன் உடலுறவு கொள்கிறார் திருமணமாகாத அசோக் செல்வன்.. அப்போது ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார்.

2020ல் ரியா சுமனுடன் உடலுறவு கொள்கிறார் திருமணமான (அதே) அசோக் செல்வன்.. அப்போதும் ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார்.

இரண்டு பிரச்சினைகளில் இருந்தும் மீண்டாரா.? என்ன செய்தார்.? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

சத்யா கேரக்டரில் படு ஸ்மார்ட்டாக இருக்கிறார் அசோக் செல்வன். கொஞ்சம் கமல்… கொஞ்சம் சிம்பு என அசத்தியிருக்கிறார் அசோக்செல்வன்.

ரெண்டு ஹீரோயின்களுடன் லிப்லாக்கில் டாப் ஹீரோவாகிவிட்டார். இதான் வெங்கட்பிரபுவின் ஹாலிவுட் ஹாட் டச் போல…(ஹி..ஹி.. செம மூட்)..

2 ஹாட்டான நாயகிகள் சம்யுக்தா ஹெக்டே & ரியா சுமன். போட்டி போட்டு கவர்ச்சி காட்டியுள்ளனர். நல்லாவே மூட் ஏத்துறீங்க.

க்யூட்டான ஹீரோயின் ஸ்மிருதி வெங்கட். இந்த அழகான அன்பான மனைவிக்கு எப்படியா துரோகம் செய்ற.? என கேட்கிற அளவுக்கு சீன் வச்சிருக்காரு… (ஆனா… Boys always Boys.. தானே.)

அப்பாவி கேரக்டரில் நடிகர் ஜெயபிரகாஷ். முதிர்ச்சியான நடிப்பு. கயல் சந்திரன் சிறிய வேடத்தில் கலக்கல்.

பிரேம்ஜி & வைபவ் & கருணாகரன் பெயரளவில் வருகின்றனர்.

டெக்னீஷியன்கள்…

அடல்ட் காமெடி படத்துக்கு ஏற்ற கிளுகிளுப்பை தன் பின்னணி இசையில் கொடுத்துள்ளார் பிரேம்ஜி. 3 ஹீரோயின் இருந்தும் ஒரு கிக்கான சாங் கொடுத்து இருக்கலாமே ப்ரோ. இவரின் இசை கூடுதல் பலம்.

பெரும்பாலும் இரண்டு வீடுகளிலும் ஒரு பண்ணை வீட்டிலும் தான் கதையே நடக்கிறது. இதை போரடிக்காமல் வித்தியாசமான கேமரா ஆங்கிள் வைத்து ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ அழகன்.

முதல்பாதி முழுவதும் அசோக் செல்வன் சம்யுக்தா ரியா சுமன் ஸ்மிருதி வெங்கட் ஆகியோரை மட்டுமே மாறி மாறி காட்டியிருப்பது சலிப்பை தருகிறது. ஆனால் 2ம் பாதியில் தன் லீலையை காட்டியிருக்கிறார் வெங்கட்பிரபு.

கொரோனா காலத்தில் 2 வீட்டில் மட்டும் சூட்டிங்கை முடித்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.

க்ளைமாக்ஸில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்து ஸ்கோர் செய்துவிட்டார் வெங்கட் பிரபு. ஆனால் க்ளைமாக்ஸ் சட்டென கன் ஷாட் போல முடிந்துவிடுகிறது.

ஆக இளைஞர்களை ஜாலியா ஒரு படத்தை பார்க்க அழைக்கிறார் டைரக்டர்.

ஆக.. கள்ளக்காதல் மன்னன்.. மன்மத லீலை.

Manmatha Leelai movie review and rating in Tamil

தரங்கெட்ட தரகர்களின் குரூப் போட்டோ..; செல்ஃபி விமர்சனம் 3.75/5

தரங்கெட்ட தரகர்களின் குரூப் போட்டோ..; செல்ஃபி விமர்சனம் 3.75/5

நடிப்பு – ஜிவி பிரகாஷ்குமார், வர்ஷா பொல்லம்மா, கௌதம் மேனன், வித்யா பிரதீப், சந்திரசேகர், குணாநிதி
இயக்கம் – மதிமாறன்
இசை – ஜிவி பிரகாஷ்குமார்
தயாரிப்பு – டிஜி பிலிம் கம்பெனி

ஒன்லைன்…

தமிழ் சினிமாவில் இதுவரை எவராலும் சொல்லப்படாத கதை. இன்ஜினியரிங் & மருத்துவக் கல்லூரிகளில் ‘மேனேஜ்மென்ட் சீட்’ என்ற காலி இடங்களுக்காக தரகர்கள் முதல் படத்தின் கதை.

கதைக்களம்..

வாகை சந்திரசேகர் கட்டளைப்படி கட்டாயத்தின் பெயரில் ஊரிலிருந்து சென்னைக்கு வந்து இன்ஜினீயரிங் படிக்கிறார் நாயகன் ஜிவி. பிரகாஷ்.

சில நேரம் கல்லூரி கட்டணம் கட்டவே அவஸ்தைப்படுகிறார். எனவே பார்ட் டைம் ஜாப் போக சொல்கிறார் அப்பா சந்திரசேகர்.

எனவே உடனே பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, கல்லூரியில் மாணவர்களை சேர்த்துவிடும் புரோக்கர் வேலை பார்க்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

ஒரு சீட்டுக்கு இவ்வளவு என நிர்ணயித்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

இதே வேலையை தான் முன்னாள் இன்ஜினியரிங் ஸ்டூடண்ட் கௌதம் மேனன் பெரிய கும்பலுடன் செய்து வருகிறார். இதற்கு பின்னால் ஒரு பெரிய யூனிவர்சிட்டியே நிற்கிறது.

ஒரு கட்டத்தில் நண்பர்களால் பெரிய லாபத்திற்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

இந்த பிரச்னை கௌதம் மேன்னுக்கு தெரிய வருகிறது.

ஜிவி. பிரகாஷை என்ன செய்தார் கௌதம் மேனன்.? சிக்கலில் இருந்து விடுபட்டாரா நாயகன்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கல்லூரி மாணவனாக கனல் கேரக்டரில் கணமாக வேடத்தை எடுத்து அதை 100% சரியாக செய்துள்ளார் ஜிவி. பிரகாஷ்.

நண்பனுக்காக உருகி, அப்பாவிடம் கோபித்து, காதலியிடம் சண்டையிட்டு என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

என் அப்பாவ நாட்டின் கோவம் வரது என சொன்னாலும் ஒரு கட்டத்தில் அப்பாவைப் பற்றி தெரிந்தவுடன் வருந்துவது செம.

இறந்து போன நண்பன் நசீருக்காக உருகி நட்புக்காக சம்பாதித்து கைதட்டல் பெற்றிருக்கிறார்.

ஸ்டைலிஷ் வில்லனாக இந்த படத்திலும் ரவிவர்மா கேரக்டரில் அசத்திருக்கிறார் கவுதம் மேனன். அசத்தலான பின்னணி இசையை அவருக்கு போட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.

இரண்டு நாயகிகள் வர்ஷா பொல்லம்மா & வித்யா பிரதீப். இருவருக்கும் கண்கள் ப்ளஸ்.. டயலாக்கை கூட கண்களாலே பேசிவிடுகிறார்கள். நடிப்பில் கச்சிதம்.

ஜி.வி.பிரகாஷின் நண்பராக வரும் நசீர் (டி.ஜி.குணாநிதி) சென்டிமெண்ட் நடிப்பில் கவர்கிறார். இவர் எடுக்கும் முடிவு பல இளைஞர்களுக்கு பாடமாக அமையும்.

குணாநிதியின் தாயாக ஸ்ரீஜா நம்மை கவர்கிறார்.

வாகை சந்திரசேகர் அனுபவ நடிப்பை வழங்கியிருக்கிறார்.

தங்கதுரை, சாம் பால் ஆகியோர் கதை ஓட்டத்திற்கு உதவியுள்ளனர். கல்லூரி அதிபராக ஈஸ்வரமூர்த்தி கேரக்டரில் சங்கிலி முருகன் நல்ல தேர்வு. இவரின் மருமகனும் கச்சிதம்.

டெக்னிஷியன்கள்…

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம். படத்துடன் ரசிகனை ஒன்ற வைக்கும். போஸ்மேன் பாடலை தவிர பாடல்கள் பெரிதாக இல்லை.

பின்னணி இசை – ஜி.வி.பிரகாஷ். ஒளிப்பதிவு – விஷ்ணு ரங்கசாமி.

படத்தின் எடிட்டரும் (இளையராஜா) பாராட்டுக்குரியவர்தான். தேவையற்ற காட்சிகள் இல்லை எனலாம்.

தனியார் கல்வி நிறுவன முறைகேடுகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்ட இயக்குனர் மதி மாறனுக்கு பாராட்டுகள். யூகிக்க முடியாத திரைக்கதை அமைத்திருக்கிறார்.

இன்ஜினியரிங் & மருத்துவக் கல்லூரிகளில் ‘மேனேஜ்மென்ட் சீட்’ எனப்படும் காலி இடங்களுக்காக தரகர்கள் நன்கொடையை எப்படி வசூலிக்கிறார்கள்.

இந்த ஆட்டத்தில் யாரால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை துணிவோடு ஆணித்தரமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் மதிமாறன். இவர் இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர்.

பல கல்வி நிறுவனங்கள் மக்களின் பணத்தை சுரண்டும் வேளையில் தைரியமாக படத்தை எடுத்த தயாரிப்பாளர் சபரீஷ்-ஐ வெகுவாக பாராட்டலாம்.

ஆக… இந்த செல்ஃபி… தரங்கெட்ட கல்வி தரகர்களின் குரூப் போட்டோ..

Selfie movie review and rating in tamil

மலைக்க வைத்த மலேசிய நாணயம்..; பூ சாண்டி வரான் விமர்சனம் 3.25/5

மலைக்க வைத்த மலேசிய நாணயம்..; பூ சாண்டி வரான் விமர்சனம் 3.25/5

ஒன்லைன்

நம் அம்மாக்கள் குழந்தைக்கு சோறு ஊட்டும் போது பூச்சாண்டி கிட்ட புடிச்சி கொடுத்துடுவேன் என பயமுறுத்தி உணவளிப்பார்கள்.. ஆனால் பூச்சாண்டி என்றால் யார்? என்றே நமக்கே தெரியாது. ஆனால் நம்முடைய முன்னோர்கள் அதற்கான காரணத்தை வைத்திருப்பார்கள். அது என்ன என பூச்சாண்டிக்கு அழகான விளக்கம் கொடுத்து நம்மை அசர வைத்துள்ளனர்.

மதுரையில் இருந்து மலேசியா நோக்கி கதை நகர்கிறது. படத்தின் கதை முழுவதும் மலேசியாவில் மலேசிய மக்களுடன் படமாக்கப்பட்டுள்ளது.

கதைக்களம்..

சங்க கால வரலாறுகளை தெரிந்துக் கொள்வதிலும் ஆர்வம் உள்ளவர் முருகன். மேலும் அமானுஷ்ய சக்திகளை பற்றி அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் மலேசியா மக்களை சந்திக்கிறார்.

அங்கு சங்கர் என்பவரை சந்தித்து அவர் சந்தித்த அமானுஷ்யத்தை பற்றி கேட்கிறார். சங்கர் தனது நண்பர்கள் அன்பு மற்றும் குருவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரிக்கிறார்.

அதில்… நாங்கள் ஆவியுடன் பேச ஒரு முறை முயற்சித்தோம். சங்க கால நாணயத்தை வைத்து எங்கள் விளையாட்டை ஆரம்பித்தோம். ஒரு கட்டத்தில் விளையாட்டு விபரீதமாகி அந்த மல்லிகா ஆவி எங்கள் நண்பன் குருவை கொன்றுவிட்டது.

அந்த நாணயம்தான் எங்கள் வாழ்க்கையில் விளையாடியது. எனவே அந்த நாணயம் ரகசியம் தெரிய வேண்டும். அப்படி என்றால் நாங்கள் மல்லிகாவின் மரணத்திற்கு யார்? காரணம் என்பதை அறிய வேண்டும் என்கின்றனர் மற்ற நண்பர்கள்..

அதன்படி முருகனுடன் இணைந்து சங்கர் அன்பு ஆகிய மூவரும் ஆவியின் உண்மைகளை கண்டறிய முற்படுகின்றனர்.

அதன்பின்னர் என்ன ஆனது? ஆவி யார்? அதை குருவை கொல்ல என்ன காரணம்.? யார் அந்த மல்லிகா? அவரின் மரணம் எப்படி நிகழ்ந்தது.? என்பதே இந்த பூச்சாண்டியின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

முருகனாக மிர்ச்சி ரமணா நடித்துள்ளார். இவர் மட்டும்தான் மதுரையை சேர்ந்தவர். மற்ற நடிகர்கள் அனைவரும் மலேசியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் நாம் தினம் பார்க்கும் நண்பர்களை போல யதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஆவியுடன் பேசும்போது கலகலப்பாக தொடங்கி பின்னர் திகிலாக மாறும்போது நம்மையும் சீட் நுனிக்கே கொண்டு வந்துள்ளனர்.

தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன் மூவரும் நண்பர்களாக நடித்துள்ளனர்.

சங்கர் கேரக்டரில் நடித்தவர் (தினேஷ்) சபாஷ் போட வைத்துள்ளார். உயிர் நண்பனை இழந்துவிட்ட சோகத்தை உணர்ந்து நடித்திக்கிறார். அதே சமயம் உயிருடன் இருக்கும்போது அவரை கலாய்ப்பதிலும் குறையில்லை. அதுபோல் மல்லிகாவின் கணவனுடன் நண்பனுக்காக சண்டை போடுவதிலும் கைத்தட்டல் பெறுகிறார்.

மாற்றுத் திறனாளியான லோகன் நாதன். நீங்க எல்லாம் ஒரு நாள் எங்களை போல வாழ முடியுமா?. மலம் கழிக்க கூட அடுத்தவரை நாங்கள் எதிர்பார்க்க வேண்டியுள்ளது. எழுந்து நடந்துவிட மாட்டோமா? என ஏங்குகிறோம் என பேசும்போது நம்மை அறியாமல் கண்கள் குளமாகும். க்ளைமாக்ஸில் இவரது ட்விஸ்ட் ஹைலைட்.

மல்லிகா வேடத்தில் வரும் ஹம்சினி பெருமாள் கொஞ்சம் நேரமே என்றாலும் கேரக்டரின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் ஒரு காட்சியில் சொல்லப்படுவது போலவே சில காட்சிகளில் சமந்தாவின் சாயலில் உள்ளார்.

டெக்னிஷியன்கள்…

பேய் படங்களுக்கு பாடல்கள் தேவையில்லை என்பதை உணர்ந்து இருக்கிறார் டைரக்டர். அதே சமயம் க்ளைமாக்ஸில் புரோமோ சாங் வைத்து படத்தின் உயிரோட்டத்தை சொல்லியிருப்பது சிறப்பு. இசையமைப்பாளர் டஸ்டின் ரிதுவன் ஷா தன் பணியில் பாராட்டைப் பெறுகிறார்.

அசல் இஸம் பின் முகமது அலியின் ஒளிப்பதிவு படத்தின் பலம். மலேசிய அழகையும் இருளையும் காட்டியிருப்பது சிறப்பு. கிளைமாக்ஸ் காட்சியில் இன்னும் கவனம் செலுத்தி படமாக்கியிருக்கலாம்.

சங்க கால நாணயம் முதன்முறையாக மல்லிகாவின் கையில் கிடைக்கும்போது ஏதோ கீழே போட்டு எடுத்தது போல உள்ளது. மண் கிடந்த நாணயம் கரை கூட இல்லாமல் போனது ஏனோ..?

அதே சமயம் ஒரு நாணயத்தில் உள்ள வரைப்படங்கள் குறித்து முருகனின் அப்பா பேசும் வசனங்கள் ஆச்சரியப்பட வைக்கிறது.

வழக்கமான பேய் படமாக இல்லாமல் ராஜேந்திர சோழன் மற்றும் களப்பிரர் ஆட்சிக் காலத்தையும் நமக்கு புரியும் படி சொல்லிருப்பது இயக்குனர் ஜேகே விக்கியின் நல்லதொரு முயற்சி.

ஒரு சின்ன பட்ஜெட்டில் அமானுஷ்ய சக்திகளின் நிராசைகளை சொல்லிய விதம் அருமை.

இந்த படம் மலேசியாவில் ‘பூச்சாண்டி’ என்ற பெயரில் ரிலீசாகிவிட்டது. தமிழகத்தில் பூ சாண்டி வரான் என தலைப்பு வைத்துள்ளனர்.

யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ஏற்கெனவே ‘பூச்சாண்டி’ என தலைப்பு வைத்துவிட்டதால் இங்கு இந்த படப்பெயர் மாற்றப்பட்டுள்ளது.

விரைவில் தமிழ்நாட்டிலும் காணலாம்.

ஆக.. இந்த பூ சாண்டி வரான்.. பயத்துடன் பார்க்க தகுந்தவன் தான்…

Poochandi Varaan movie review and rating in tamil

Quit OTT.. RRRun to theatRRRe..; ஆர்ஆர்ஆர் விமர்சனம் 4.25/5

Quit OTT.. RRRun to theatRRRe..; ஆர்ஆர்ஆர் விமர்சனம் 4.25/5

ஒன்லைன்…

fiRe… wateR… stoRy.. இது மூன்று R தான் RRR… நெருப்பை போன்ற அனலாக ராம்சரண்… தண்ணீரை போன்ற இளகிய ஜூனியர் என்டிஆர்.. ஆகியோரை இணைக்கும் கதை.

1920 ஆண்டுளில் சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து நின்ற அல்லூரி சீதாராம ராஜு (ராம்சரன்) கொமாரம் பீம் (ஜூனியர் என்டிஆர்) இருவரின் வாழ்க்கையை மட்டும் மையப்படுத்தி இதில் தன் பிரம்மாண்ட கற்பனையை கலந்துள்ளார் ராஜமௌலி.

கதைக்களம்…

பழங்குடியினரின் இனத்தில் உள்ள ஒரு சிறுமியின் கலை ஆர்வத்தால் கவரப்பட்ட வெள்ளைக்கார துரையின் மனைவி அந்த சிறுமியை அவளின் பெற்றோர் அனுமதியில்லாமல் தன் கணவர் துணையுடன் டெல்லிக்கு கொண்டு செல்கிறார்.

எனவே அந்த இனத்தின் காப்பான் கொமரம் பீம், அவளை மீட்க தன் நண்பர்களுடன் டெல்லி வருகிறார்.

பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அடிமையான போலீஸ் அதிகாரியாக அல்லூரி சீதாராம ராஜு (ராம்சரண்).

சிறுமியை மீட்க கொமரம் பீம் வந்துள்ளதை அறிந்த வெள்ளையர்கள் அதிகாரி.. எவரேனும் கொமரம் பீமை கொன்றால் உயர்பதவி தருவதாக அறிவிக்கிறார். இந்த சவாலை ஏற்கிறார் ராம்சரண்.

இதனை அறியாமலே ஒரு கட்டத்தில் ராமனும், பீமனும் சந்தித்து நண்பர்களாக மாறுகின்றனர்.

சிறுமி விவகாரத்தில் நண்பர்கள் எதிரிகள் ஆனார்களா.? சிறுமியை காப்பாற்றினாரா ஜூனியர் என்டிஆர்.?? சிறுமியை வெள்ளையர்கள் சிறையில் கைதியாக்கினாரா ராம்சரண்.? இறுதியில் வென்றவர் யார்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ராம் சரண் & ஜூனியர் என்.டி.ஆர்.. இருவருமே ஆந்திர சினிமாவில் மிகப்பெரிய நடிகர்கள். எனவே இரண்டு ஹீரோக்களில் யாருக்கு முக்கியத்துவம் என நம்மை கணிக்க முடியாதபடி ராஜமௌலி காட்டியிருக்கிறார்.

இரு கேரக்டர்களையும் சில காட்சிகளில் எதிரிகளாக்கி… சில நேரம் நண்பர்களாக்கி.. இருதரப்பு ரசிகர்களுக்கும் மாறி மாறி மாஸ் ட்ரீட் கொடுத்துள்ளார்.

‘நாட்டுக் கூத்து’ பாடலில் ஹீரோக்களை ஆட விட்டு நம்மையும் எழுந்து ஆட வைத்துள்ளார். மரண மாஸ் குத்தாட்டம்.

ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா ஆகியோருக்கு பெரிய ஸ்கோப் இல்லை. ஆனாலும் நடிப்பில் ஓகே்

என்டிஆரின் வெள்ளைக்கார காதலியாக வரும் ஜெனிஃபராக வரும் ஒலிவியா மோரிஸுக்கு க்யூட்டான வேடம்.

அஜய் தேவ்கன் பிளாஷ்பேக் காட்சிகளில் வருகிறார். அவர் போடும் துப்பாக்கிச் சண்டையில் லாஜிக் பார்க்கக்கூடாது.

வில்லன் ஸ்காட் துரையாக ரே ஸ்டீவன்சன் என்பவர் மிரட்டியிருக்கிறார். பார்வையே பட்டாசுதான். ஆனால் ஒரே வசனத்தை மட்டுமே இவர் அடிக்கடி பேசுவது போரடிக்கிறது.

இவரின் மனைவியாக மனைவியாக அலிசன் டூடி. சாந்தமாக காணப்பட்டாலும் என்டிஆர் அடிக்க சொல்லும் காட்சிகளில் டெரர்ர் வில்லிதான்.

டெக்னீஷியன்கள்…

எல்லாமே மிரட்டலான பைஃட் என கொடுத்துள்ளனர் ஸ்டன்ட் இயக்குநர்களான சாலமன் மற்றும் நிக் பவல். 2 ஹீரோக்கள் சந்தித்து சிறுவனைக் காப்பாற்றும் சீன்.. ஹீரோக்கள் மோதும் இடைவேளை பிரமாண்ட சண்டைக் காட்சி மோதல், (கொடிய மிருகங்கள் நுழையும் காட்சி) ராம் சரண் – ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து கிளைமேக்ஸில் போடும் சண்டை என அனைத்தும் வேற லெவல்.

மரகதமணியின் (எம்.எம்.கீரவாணி) பின்னணி இசை மிரட்டல். ஒவ்வொரு காட்சியையும் ரசித்து உயிர் கொடுத்துள்ளார்.. ஆனால் பாடல்கள் பெரிதாக கவரவில்லை.

கே.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

விசுவல் எஃபக்ட்ஸை பிரம்மாண்டமாக கொடுத்த ஶ்ரீனிவாஸ் மோகனையும் பாராட்டிக் கொண்டே இருக்கலாம்.

மைனஸ்…

ஜூனியர் என்.டி.ஆர் அடிவாங்கும் போது அவர் பாடும் பாடல் ஓகே.. ஆனால் அப்படி பாட முடியாது என்பது லாஜிக் மீறல். அதுபோல் துப்பாக்கிகள் விரட்ட வில் அம்பு சண்டை போடும் ராம்சரண் கொஞ்சம் ஓவர். ஆனால் நம்பும்படியாக கொடுத்துள்ளார் டைரக்டர் ராஜமௌலி. சென்டிமென்ட் காட்சிகள் பெரிதாக கவரவில்லை.

இயக்கம்…

பிரம்மாண்ட பட்ஜெட் கமர்ஷியல் படத்தில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளார். ஆனால் இனியாவது இன்னும் அழுத்தமான கதைகளை ரஜமௌலி கொடுக்க வேண்டும்.

டபுள் ஹீரோ, பிரம்மாண்டம், ஆக்சன், நடிப்பு, மேக்கிங் என மாஸ் ட்ரீட் கொடுத்துள்ளார் ராஜமௌலி. 3 மணி நேரம் என்றாலும் அதையும் பிரம்மிக்கும் வகையில் கொடுத்துள்ளார். இதுபோன்ற இயக்குனர்களால் மட்டுமே இந்திய சினிமா உலகளவில் உயர்ந்து நிற்கும்.

ஆர்ஆர்ஆர். படத்தை குடும்பத்தினர் தியேட்டரில் மட்டுமே படத்தை பார்த்து ரசிப்பது நல்லது.

லாஜிக் பார்க்காதீங்க… ராஜமௌலியின் மேஜிக் பாருங்க…

ஓடிடியில் இருந்து தியேட்டருக்கு ஓடி வாங்க என அழைக்கிறது… RRR இரத்தம் ரணம் ரௌத்திரம்.

RRR movie review and rating in Tamil

More Articles
Follows