அஜித் ரசிகர்களுக்கு வினோ(த)த் விருந்து..; வலிமை விமர்சனம் (3/5)

அஜித் ரசிகர்களுக்கு வினோ(த)த் விருந்து..; வலிமை விமர்சனம் (3/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…
போதை பொருள் கடத்தலை மையப்படுத்தி அதில் பைக் சாகசங்களுடன் துப்பறியும் போலீஸ் அஜித்தை வைத்து வலிமையாக கொடுக்க முயற்சித்துள்ளார் வினோத்.

கதைக்களம்..
மதுரையில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் அர்ஜீன் (அஜித்). அம்மா, அண்ணன், தம்பி என குடும்பத்துடன் சந்தோஷமாக வசிக்கிறார்.

கொலம்பியா நாட்டில் இருந்து பாண்டிச்சேரிக்கு போதைப் பொருட்களை ஒரு கும்பல் கடத்துகிறது. பின்னர் அதை சென்னைக்கு சில மர்ம இளைஞர்கள் பைக்கில் கடத்தி வருகின்றனர்.

இது போலீஸ்க்கு தலைவலியாக அமைய அதை துப்பறிய திறமையான போலீஸ் அஜித் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்படுகிறார்.

இதனிடையில் ஒரு தற்கொலை வழக்கை அஜித் விசாரிக்க அதன் பின்னணியில் கொள்ளை, போதை பொருட்கள் கடத்தல் தலைவன் கார்த்திகேயா உள்ளதை கண்டுபிடிக்கிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? அஜித் அந்த கும்பலை கைது செய்தாரா? போதை கும்பலை அழித்தாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அஜித்தின் ஆரம்பமே அசத்தல். படு ஸ்மார்ட்டாக இருக்கிறார். பைக் ஆக்சன் காட்சியில் மிரட்டி இருக்கிறார். அதே சமயம் அம்மா மற்றும் தம்பி பாசத்தில் உருகவும் வைத்துள்ளார் அஜித். ஓரிரு காட்சிகளில் அஜித்தின் உடல்வாகு மாறி மாறி வருகிறது.. (சூட்டிங் தாமதம் பிரச்சனையோ..?)

காலா படத்தில் ரஜினியின் காதலியாக வந்தாரே ஹுமா குரேஷி அவர்தான் அஜித்தின் ஜோடி. இவர்களுக்குள் ரொமான்ஸ் இல்லை. ஆனால் ஆக்சன் உள்ளது. கொடுத்த வேலையை கச்சிதமாக கொடுத்துள்ளார்.

படத்தில் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயா செம மாஸ். பைக் ரேஸர் கேரக்டருக்கு ஏற்றபோல கம்பீரமான உடற்கட்டு. நடிப்பில் நல்ல முதிர்ச்சி உள்ளது. ஆனால் சில காட்சிகளில் இவரின் லிப் சிங் செட்டாகவில்லை.

அஜித்தின் அம்மாவாக சுமித்ரா.. நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ளார். ஓரிரு காட்சியில் வரும் சரண்யா ரவி கேரக்டர் கவனிக்க வைக்கிறது.

இவர்களுடன் போலீஸாக வரும் செல்வா, ஜி.எம்.சுந்தர், தினேஷ் ஆகியோர் சிறப்பு.

டெக்னிஷியன்கள்..

யுவன் சங்கர் ராஜா இசையில் வேற மாறி பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும். ஆனால் டான்ஸ் மாஸ்டர் இன்னும் கவனம் செலுத்தி நல்ல மூவ்மெண்ட்ஸ் கொடுத்திருக்கலாம்.

அம்மா சென்டிமெண்ட் பாடல் கேட்கும் வகையில் உள்ளது. நாயகியுடன் ஒரு ரொமான்ஸ் சாங் வைத்திருக்கலாம்.

பின்னணி இசையில் அதிகமாகவே ஸ்கோர் செய்துள்ளார் யுவன்.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்தின் ப்ளஸ். திரைக்கதை ஓட்டத்திற்கும் காட்சிகளின் தரத்திற்கும் பெரிதும் உதவியுள்ளது.

நல்ல ஆக்சன் இருக்கும்போது திடீரென சென்டிமெண்ட் வருவது செட்டாகவில்லை. அது படத்தின் ஸ்பீடை குறைக்கும் வகையில் உள்ளது. வினோத் அனைத்தையும் கலந்து கொடுக்க முயற்சித்துள்ளார் போல.

அஜித்தின் நிஜ திறமையான பைக் சாகசத்தை படத்தின் கதை ஓட்டத்திற்கு ஏற்றபோல் பயன்படுத்திருப்பது சிறப்பு.

போதை பொருள் கடத்தல் கும்பல்… குடும்ப சென்டிமெண்ட்.. பைக் சாகசங்கள்.. என கலந்து அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் வினோத்.

ஆக.. வலிமை… அஜித் ரசிகர்களுக்கு வினோத்தின் விருந்து..

Ajiths Valimai review rating

நம்மை சீட்டில் கட்டிப்போடும் கை-விலங்கு….; விலங்கு விமர்சனம் 4/5

நம்மை சீட்டில் கட்டிப்போடும் கை-விலங்கு….; விலங்கு விமர்சனம் 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்..
விமல், இனியா, முனீஸ்காந்த், பால சரவணன், ரேஷ்மா, நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி, ஆர்என்ஆர் மனோகர்
ஒளிப்பதிவு: தினேஷ்குமார் புருஷோத்தமன்
இசை: அனீஸ்
இயக்கம்: பிரசாந்த் பாண்டிராஜ். (புரூஸ்லி பட இயக்குனர்)
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிப்பு
வெளியீடு: Zee5
Zee5 ஓடிடி தளத்தில் பிப்ரவரி 18ல் ரிலீசாகியிருக்கும் இந்த வெப் சீரிஸில் மொத்தமாக 7 எபிசோடுகள்.

ஒன்லைன்..
திருச்சி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் நடக்கும் க்ரைம் த்ரில்லர் விசாரணை தான் இப்படம்.

கதைக்களம்…

திருச்சி மாவட்ட ஒரு கிராமத்தில் உள்ள காவல் எல்லைக்குள் அடையாளம் தெரியாத ஒரு சடலம் கிடைக்கிறது.

இந்த தகவலை போலீசுக்கு ஒரு நபர் சொல்ல சப் இன்ஸ்பெக்ட்ர் விமல் மற்றும் காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைகின்றனர்.

விசாரணை நடைபெறும் அதே சமயத்தில் போலீஸ் கவனிக்காத சயயத்தில் அந்த சடலத்தின் தலை காணாமல் போகிறது. முண்டம் மட்டுமே கிடக்கிறது.

இதனால் காவல்துறைக்கு பெரும் சவாலாக மாறுகிறது இந்த வழக்கு.

இது தொடர்பாக விசாரணைகளை தோண்ட தோண்ட பூதம் கிளம்பிய கதையாக பல அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கிறது. சொல்லப்பட்ட ட்விஸ்ட்டுக்கள் அனைத்தும் வேற லெவல்.

இறுதியில் கொலைக்காரன் யார்? கொலைக்கான காரணம் என்ன? தலை கிடைத்ததா.? என்பதே மீதி எபிசோடுகள்.

கேரக்டர்கள்…

இதில் விமல் முதன்முறையாக போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். அதற்காக பறந்து பறந்து ஓங்கி அடிப்பது… கண்ணை காட்டி மிரட்டுவது என எந்தவிதமான கமர்ஷியல் போலீஸ் ஆக இல்லாமல் நாம் அன்றாடம் பார்க்கும் போலீசாக நடித்துள்ளார். இது விமலுக்கு நிஜமான ரீஎன்ட்ரி தான்.

விமலின் மனைவியாக வரும் இனியாவுக்கு இனிமையான இதமான கேரக்டர். மிகையில்லாத யதார்த்த நடிப்பு.
பால சரவணன் ‘அடி பின்னியிருக்கிறார்’. முற்றிலும் மாறுப்பட்ட கேரக்டரில் வந்துள்ளார். ஆனால் தேவையில்லாமல் கெட்ட கெட்ட வார்த்தைகளை பேசி பெண்களை முகம் சுளிக்க வைத்துவிட்டார்.

கிச்சா என்ற பாத்திரத்தில் வரும் ரவியின் நடிப்பு வேற லெவல். அவர் இயக்குனர் பிரசாந்தின் சொந்த மாமா என்பது குறிப்பிடத்தக்கது. இது அவருக்கு முதல்படம் என்று சொன்னால் நம்பமாட்டீர்கள். கிச்சாவுக்கு நிறைய வாய்ப்புகள் வரும். அப்பாவி முகத்தை வைத்துக் கொண்டு இவர் செய்யும் ஒவ்வொன்றும் நம்மை மிரட்டியுள்ளது.

பிற அதிகாரிகளாக வரும் ஆர்என்ஆர் மனோகர், சக்ரவர்த்தி ஆகியோரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். (அண்மையில் கொரோனா லாக்டவுன் சமயத்தில் மனோகர் மரணமடைந்துவிட்டார்)

டெக்னீசியன்கள்..

திரில்லர் கதைக்கு ஏற்ற தரமான ஒளிப்பதிவு, இசை, கலை என அனைத்துமே சிறப்பு. தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

80% காட்சிகள் போலீஸ் ஸ்டேஷனில் நடைபெறுகின்றன. அதற்காக போடப்பட்ட செட் மிகக் கச்சிதம். கலை இயக்குனர் தன் பணியில் கச்சிதம்.

பாடல்கள் இல்லாத படம். எனவே மொத்த கவனத்தையும் அஜீஸ் தன் பின்னணி இசையில் கொடுத்து மிரட்டியிருக்கிறார்.

எடிட்டர் கணேஷ் சிவா முதல் 2 எபிசோட்டில் சில காட்சிகளை வெட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

மைனஸ்..

வெப்சீரிஸ்களுக்கு சென்சால் இல்லை. ஆனால் அதற்காக இத்தனை கெட்ட வார்த்தைகளா? உச்சகட்ட எரிச்சல் இது. அதை மியூட் கூட செய்யல.

மொத்தமுள்ள 7 எபிசோடுகளில் இறுதியாக வரும் 3-4 எபிசோடுகளுக்கு விறுவிறுப்பாக செல்கிறது. முதல் இரண்டில் கட்டிங் போட்டு இருக்கலாம்.

தன் மனைவி கர்ப்பமாக இருப்பதால் விமல் தாடி வைத்திருக்கலாம். ஆனால் பாலசரவணன்..? விமல் எஸ்ஐ வருகிறார். ஆனால் பாலசரவணன் யார்? அவர் போலீஸ் என்றாலும் ஒரு காட்சியில் கூட யூனிபார்மில் இல்லையே அது ஏன்?

இயக்கம் பற்றிய அலசல்…

ஜிவி. பிரகாஷ் நடித்த புரூஸ்லீ என்ற படத்தை இயக்கிய பிரசாந்த் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். முற்றிலும் வித்தியாசமாக படமாக்கி ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.

ஆண்களின் சபலத்தை தூண்டி லட்சக்கணக்கில் பணம் பறிப்பது.. அப்பாவி என நினைப்பவர்கள் செய்யும் அட்டூழியங்கள்… என பல விஷயங்களை இயக்குனர் அலசியிருக்கிறார். நாம் ஏளனமாக பார்க்கும் சாமானியனின் மனதில் எவ்வளவு வன்மம் இருக்கும்? என்பதை காட்டி நம்மை எச்சரிக்கை செய்துள்ளார்.

ஆக.. இந்த விலங்கு… நிச்சயம் நம்மை சீட்டில் விலங்கு போட்டு கட்டி வைக்கும்.

Vimals Vilangu review rating

மோதல் நிறைந்த புரம்.; வீரபாண்டியபுரம் விமர்சனம் 3.25/5

மோதல் நிறைந்த புரம்.; வீரபாண்டியபுரம் விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

ஒரு காதல் ஜோடியால் இரு கிராமத்து பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல். என வழக்கமான கிராமத்து பாணியிலான கதை.

கதைக்களம்…

வீரபாண்டியபுரம் மற்றும் நெய்க்காரப்பட்டி என்ற இரு கிராமங்களிடையே தீராத பகை இருந்து வருகிறது. நெய்க்காரப்பட்டி தலைவர் ஜெயபிரகாஷ்.

இதில் வீரபாண்டியபுரம் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் சரத். இவரின் மகள் நாயகி மீனாட்சி.

நாயகன் ஜெய் மற்றும் நாயகி மீனாட்சி இருவரும் காதலிக்கின்றனர். ஜெய்க்கு யாருமில்லை. ஆனால் மீனாட்சியின் அப்பா ஊர் பெரியவர். ஜாதி வெறியர். இதனால் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்கிறார் நாயகி.

திருட்டுத்தனமாக திருமணம் செய்தால் என்னால் யாருக்கும் பாதிப்பில்லை. ஆனால் நீ இப்படி செய்தால் உன் குடும்பத்திற்கு அவமானம் என்கிறார் நாயகன்.

இதனால் நாயகியை அழைத்துக் கொண்டு அவளின் வீட்டுக்கே செல்கிறார். முதலில் சம்மதிக்கும் நாயகியின் அப்பா.. பின்னர் ஜெய்யை போட்டுத் தள்ள ப்ளான் போடுகிறார். அதுபோல் ஜெய்யும் சில திட்டங்கள் போடுகிறார்.

அதன்பிறகு என்னானது.? ஜெய் போட்ட திட்டம் என்ன? திட்டம் போட என்ன காரணம்.? காதல் என்ன ஆச்சு? இறுதியில் வென்றது யார்? எப்படி? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

இதுநாள் வரை நாம் ஜெய்யை ஹீரோவாக மட்டுமே பார்த்து இருக்கிறோம். இதில் இசையமைப்பாளராகவும் உயர்ந்து இருக்கிறார். மனதை வருடும் பாடல்களை கொடுக்கவில்லை என்றாலும் சில பாடல்கள் கேட்கும்படியே கொடுத்து ஜெயித்து இருக்கிறார் ஜெய். அடி அவரா..? என்ற பாடல் தாளம்போட வைக்கிறது.

வழக்கமான துள்ளல் இல்லாமல் ஏதோ அமைதியாகவே நடித்துள்ளார் ஜெய். நாயகியுடன் பெரிதாக ரொமான்ஸ் இல்லை. ஆனால் அதற்கு ப்ளாஷ்பேக்கை ஒரு காரணமாக வைத்துவிட்டார் டைரக்டர்.

ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் மீனாட்சி மின்னுகிறார். ப்ளாஷ்பேக்கில் வரும் டீச்சர் கேரக்டர் கச்சிதம். அகன்ஷா சிங்க்கு பெரிய ஸ்கோப் இல்லை.

அன்னபாரதி சிறிய கேரக்டரில் நடித்துள்ளார்.

பாலசரவணன் காமெடி பெரிதாக கை கொடுக்கவில்லை என்றாலும் கொஞ்சம் கலகலப்புக்கு உதவியிருக்கிறது. காளிவெங்கட் நடிப்பு கவனிக்க வைத்துள்ளது. சென்டிமெண்டிலும் கவர்ந்துள்ளார்.

படத்தில் இரு கோஷ்டி என்பதால் நிறைய வில்லன் அடியாட்கள் உள்ளனர். அதில் சரத் (இரு வேடங்களில்), ஜெயபிரகாஷ், ஹரிஷ் உத்தமன், அர்ஜெய் உள்ளிட்டோர் கவனம் பெறுகின்றனர். அருள்தாஸ் கேரக்டர் தேவையா?

டெக்னீஷியன்கள்..

மலைவாழ் மக்கள் வசிக்கும் இயற்கை பகுதி காட்சிகள் ஒளிப்பதிவிற்கு சிறப்பு சேர்த்துள்ளது. வேல்ராஜ் தன் பணியில் சிறப்பு. திண்டுக்கல் மாவட்ட அழகை திகட்ட திகட்ட தந்திருக்கிறார்.

படத்தின் நீளம் மொத்தம் 2 மணிநேரம்தான் என்பதால் பிரச்சினையில்லை.

படத்தின் டைட்டில் கார்டு போடும் நேரத்தில் வரும் அஜய்யின் பின்னணி இசை எரிச்சலை தருகிறது. டைட்டில் கார்ட்லும் பெரிய சுவாரஸ்யம் இல்லை. ஆக்சன் காட்சிகளில் பின்னணி இசை ஓகே ரகம்.

வழக்கமான கிராமத்து கதையை சில ட்விஸ்ட்டுக்களுடன் கொடுத்துள்ளார் சுசீந்திரன். ஆனால் விறுவிறுப்பு கூட்டி கொடுத்திருக்கலாம்.

ஆனால் இது வழக்கமான சுசீந்திரன் படம் போல் இல்லை. ஏனென்றால் அதிகமாகவே வன்முறை உள்ளது. அதிலும் தலை துண்டிப்பு, கை கால் துண்டிப்பு,.. உயிரோடு எரித்தல் என நிறைய கலவரங்களை காட்டியுள்ளது ஏனோ. சிவ.. சிவா…

ஆக வீரபாண்டியபுரம்… காதலும் மோதலும் நிறைந்த புரம்

Veera Pandiyapuram movie review and rating in Tamil

மைண்ட் ரீடர்..; கூர்மன் விமர்சனம்

மைண்ட் ரீடர்..; கூர்மன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

ஒருவரின் மனதில் உள்ளதை அவரை பார்க்கும் சில நொடிகளில் சொல்லிவிடும் மைண்ட் ரீடர் என்பதை தான் கூர்மன் என தமிழில் ஒரு திருக்குறள் உடன் சொல்லியிருக்கிறார்கள்.

அதாவது சந்திரமுகி படத்தில் வடிவேலு நினைப்பதை எல்லாம் ரஜினி சொல்வாரே.. அதுபோல..

கதைக்களம்..

ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள பங்களா வீட்டில் வாழ்ந்து வருகிறார் நாயகன் ராஜாஜி. இவர் முன்னாள் போலீஸ். ஒருவரிடம் பேசும் சில நிமிடங்களிலேயே அவர் மனதில் நினைப்பதை சொல்லும் திறமை கொண்டவர்.

இதனாலேயே போலீஸ் விசாரணையில் இவருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒரு கட்டத்தில் இவரின் காதலி ஜனனி ஐயர் கொல்லப்படுகிறார்.

ஜனனியின் முறைமாமன் ராஜாஜியையும் தலையில் அடித்து விடுகிறார். நாயகி இறந்துவிடுகிறார். நாயகன் மட்டும் உயிருடன் இருக்கிறார்.

இந்த பிரச்சினையில் மனதளவில் கொஞ்சம் பாதிக்கப்பட காவல்துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் ராஜாஜி. எங்கும் வெளியில் செல்லாமல் அந்த வீட்டிலேயே தனிமையில் இருக்கிறார். இவரின் வீட்டில் உதவியாளராக பால சரவணன்.

ராஜாஜியின் திறமையை அறிந்த இன்ஸ்பெக்டர் ஆடுகளம் நரேன் குற்றவாளிகளை ராஜாஜி பண்ணை வீட்டுக்கு அனுப்பி விசாரணையில் உண்மைகளை அறிகிறார். ஆனால் ஒரு குற்றவாளி ராஜாஜியின் வீட்டில் இருந்து தப்பி விடுகிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? ராஜாஜி வீட்டை விட்டு வெளியே வந்தாரா.? குற்றவாளியை கண்டு பிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நிறைய படங்களில் பார்த்த ராஜாஜி இந்த கூர்மன் படத்தில் முற்றிலும் மாறுப்பட்ட கேரக்டரில் தோன்றியுள்ளார். நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது.

தர்மதுரை படத்தில் ரஜினி வருவாரோ அதுபோல… தாடி வைத்தும் ப்ளாஷ்பேக்கில் ஷேவிங் செய்தும் அதற்கேற்ப உடல்மொழியும் கொடுத்துள்ளார். பாசம், ஆக்ரோஷம் என வித்தியாசம் காண்பித்திருக்கிறார்.

2வது நாயகனாக பிரவீன், நடிப்பில் கவனிக்க வைத்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நடிப்பு சிறப்பு. ஆனால் பால சரவணன் கண்களுக்கு தெரியாத மறைந்த ஜனனி ஐயர் இவர் கண்களுக்கு தெரிவது எப்படின்னு தெரியல…

பாலசரவணன் கொஞ்சம் வயதான கேரக்டரில் நடித்துள்ளார். எனவே கொஞ்சம் நையாண்டியை குறைத்துள்ளார் போல.

ஜனனி ஐயர் கேரக்டரில் இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கலாம். நாயகனுக்கு அட்வைஸ் செய்வது மட்டுமே இவரின் வேலை.

ஆடுகளம் நரேன் வழக்கமான போலீஸ் கேரக்டரில் கச்சிதம்.

சுபு என்னும் கேரக்டரில் ஜெர்மன் ஷேப்பர்ட் என்ற நாய் நடித்துள்ளது.

டெக்னீஷியன்கள்..

சக்தி அரவிந்த்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். நேர்த்தியான ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. படத்தில் உள்ள பண்ணை வீடும் அதன் சுற்றியுள்ள பகுதிகளும் அழகு.

ஒரு திரில்லர் பட ஓட்டத்திற்கு தேவையான பின்னணி இசையை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ.

கோபி கருணாநிதியின் அரங்க அமைப்பு நம்மை கவர்கிறது.

வித்தியாசமான கதைக்களத்தை வைத்து இப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் பிரயான் பி ஜார்ஜ். மேக்கிங்கிலும் வித்தியாசம் காட்டியுள்ளார்.

போலீஸ் கேரக்டரில் வருகிறார் ராஜாஜி. அவர் போலீசாக இருக்கும்போதும் ஓய்வில் இருக்கும்போது ஆர்மி ஜீப்பிலேயே சுத்துகிறார். அதற்கான காரணம் என்னவோ? இயக்குனரே…

பாலியல் வன்கொடுமை படத்தின் கரு. ஆனால் அதை அழுத்தமாக பதிவு செய்யாமல் விட்டுள்ளார் இயக்குனர். உணர்வுப்பூர்வமாக சொல்லியிருந்தால் இந்த கூர்மன் இன்னும் கவனிக்கப்பட வைத்திருப்பான்.

கூர்மன்… மைண்ட் ரீடர்

Koorman movie review and rating in tamil

கஷ்டகர்மா…; அஷ்டகர்மா விமர்சனம்

கஷ்டகர்மா…; அஷ்டகர்மா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்… செய்வினை வைப்பதும் அதை வைத்தவருக்கே திருப்பி விடும் பழகிய நகரத்து கதை.

கதைக்களம்..

நாயகன் டாக்டர் கிஷன் ஒரு மனத்தத்துவ நிபுணர். இவர் கனவு தொல்லையால் பாதிக்கப்படும் ஸ்ரீதா சிவதாஸுக்கு சிகிச்சை அளிக்கிறார்.

அதாவது ஸ்ரீதாவின் வாய் பேசாத முடியாத மகன் ஓவியமாக வரையும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு நிகழ்வாக நிஜத்தில் நடக்கிறது. தன் அப்பாவுக்கு ஒரு கள்ள உறவு இருக்கிறது என்பது வரை வரைகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். (அதில் ஒரு ட்விஸ்ட்)

ஒரு கட்டத்தில் பேய் இருக்கா இல்லையா என்ற டி.வி. ஷோவில் கலந்துக் கொள்கிறார் நாயகன் கிஷன்.

அப்போது பேய் இருக்கும் என்று சொல்லும் எதிர் அணியுடன் இவருக்கு ஒரு சேலஞ்ச் ஏற்படுகிறது. அதன்படி ஒரு பங்களாவில் தங்க வேண்டும் என்கின்றனர்.

ஆனால் அந்த வீட்டு ஓனரோ தங்க விட முடியாது என மறுக்கிறார். ஏன்? என்பதுதான் மற்றொரு கதை.

இறுதியில் பேய் இருக்கும் வீட்டில் கிஷன் தங்கினாரா? சவாலில் வென்றாரா? பேய் இருக்கா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஸ்மார்ட் ஹீரோவாக சாக்லேட் பாயாக வருகிறார் ஹீரோ கிஷன். இவர்தான் படத்தின் தயாரிப்பாளரும் கூட. ஆக்சன் ரொமான்ஸ் எனவும் எதுவும் இல்லாமல் ஜஸ்ட் லைக் தட் என வருகிறார்.

லட்டு போல பெண் கிடைச்சா.. தட்லாம்.. தட்லாம்.. என டிஆர் பாடிய பாடலுக்கு ஆடுகிறார். பாடல் வரிகள் இவருக்கு லிப்சிங் ஆகவில்லை.

இவரின் உதவியாளராக தோழியாக வருகிறார் நாயகி நந்தினி ராய். மற்றொரு நாயகியாக ஸ்ரீதா சிவதாஸ். ஆனால் நாயகியுடன் கிஷனுடன் எந்த வேலையும் இல்லை.

ஸ்ரீதா சிவதாஸ் அம்மா கேரக்டர் மற்றும் அவரது குடும்பம் ஒரு ட்விஸ்ட் ப்ளாஷ்பேக் எனலாம். அந்த கதையுடன் நாயகியை கனெக்ட் செய்திருப்பது இரண்டாம் பாகத்துக்கான லீட் என சொல்லியுள்ளனர்.

டெக்னீஷியன்கள்..

முத்து கணேஷ் இசையில் டி.ராஜேந்தர் பாடிய தட்டலாமா.. தட்டலாமா.. என்ற பாடல் ஆட்டம் போட வைக்கும். ஆனால் நாயகனின் நடனம் தான் ஒன்றும் சொல்வதற்கில்லை.. படத்தின் ஒரே ஆறுதல் குரு தேவின் ஒளிப்பதிவு. தரமாக கொடுத்திருக்கிறார்.

பல கிராமத்து படங்களில் நாம் பார்த்த செய்வினை வைப்பதுதான் இந்த படத்தின் கதை. ஆனால் அதை நகரத்து பாணியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய் தமிழ்செல்வன்.

ஆனால் இது பேய் படமா… மந்திரவாதி படமா.? என குழப்பம் ரசிகர்களுக்கு வரலாம். திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

மிஷ்ரி என்டெர்ப்ரைசைஸ் சார்பில் C.S.பதம்சந்த், C.அரிஹந்த் ராஜ் C.S.கிஷன் இணைந்து தயாரித்துள்ளனர். ஜெய்ஹிந்தி உள்ளிட்ட பிரபல படங்களை தயாரித்த ஒரு பிரபல நிறுவனம் தரமான படத்தை தயாரித்து இருக்கலாமே..

ஆக…. அஷ்டகர்மா.. ஒரு கஷ்டகர்மா

Astakarma movie review and rating in tamil

கேங்ஸ்டர் ட்ரீட் .. மகான் விமர்சனம் 3.25/5

கேங்ஸ்டர் ட்ரீட் .. மகான் விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

தவறு செய்ய அனுமதிக்காத சுதந்திரம், சுதந்திரமே அல்ல என்ற மகாத்மா காந்தியின் வசனத்துடன்தான் படம் தொடங்குகிறது. காந்தி மகான் என்பதுதான் விக்ரம் கேரக்டர் பெயர்.

ஒரு தாதாவுக்கும் ஒரு போலீசுக்கும் நடக்கும் பாச போராட்டமே இப்படத்தின் ஒன்லைன்.

கதைக்களம்..

சுதந்திர போராட்ட தியாகி குடும்பம். காந்தியக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றும் குடும்பத்தில் பிறந்தவர் காந்தி மகான் என்ற விக்ரம்.

குழந்தை பருவம் முதலே மது ஒழிப்பு, அகிம்சை என வளர்க்கப்படுகிறார்.

அதன்படி அரசுப் பள்ளியில் ஆசிரியராகவும் பணிக்கு சேர்கிறார்.

மனைவி சிம்ரன்.. ஒரு மகன் துருவ் (தாதா பாய் நவ்ரோஜி) என பிடிக்காத வாழ்க்கையை நகர்த்துகிறார். 40 வயதாகியும் ஒரு கட்டுப்பாடிலேயே செல்கிறார். மனைவி வேற பிடிவாத குணம் கொண்டவர்.

ஒரு நாள் மனைவி , மகன் வெளியூர் செல்ல தனியாக இருக்கும் விக்ரம் சரக்கடிக்கிறார். சிகரெட் பிடிக்கிறார். இன்று ஒருநாளாவது சுதந்திரமாக தனக்கு பிடித்தப்படி வாழ நினைக்கிறார்.

சாராயக்கடையில் பால்ய நண்பன் சத்யவான் (பாபி சிம்ஹா) சந்திக்க அன்று இரவே அவரின் வாழ்க்கை தடம் மாறுகிறது.

மறுநாள் குடும்பத்தில் பிரச்சினை எழ, சிம்ரன் இவரை பிரிந்து தன் மகனுடன் வட இந்தியா செல்கிறார்.

வேறுவழியில்லாமல் தனியாக இருக்கும் விக்ரம் தன் நண்பனுடன் இணைந்து ஜாலியாக வாழ்கிறார். பார்களை திறக்கின்றனர். தங்கள் கம்பெனி சார்பாக சரக்குகளை விற்கின்றனர். கோடிக்களில் புரளுகின்றனர்.

இவர்கள் அந்த ஏரியாவின் தாதா போல உருவாகுகின்றனர். அரசியல்வாதிகள் வரை இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

20 – 25 வருடங்களுக்கு பிறகு என்கௌண்டர் ஸ்பெஷல் போலீஸ் ஆபிசராக வருகிறார் விக்ரம் மகன் துருவ்.

அன்றுமுதல் அப்பா மகன் போராட்டம் வெடிக்கிறது. பாபி சிம்ஹா ஆட்களை என்கௌண்டரில் போடுகிறார் துருவ்.

நண்பனா..? மகனா-..? என்ன செய்தார் விக்ரம்..? அப்பா.? கடமையா..? என்ன செய்தார் துருவ்..? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

படம் முழுக்க விக்ரமின் ராஜ்ஜியம் தான். காந்தி மகான் கேரக்டரில் கச்சிதம். நண்பன் மகன் என க்ளைமாக்சில் இவர் நகர்த்தும் விஷயங்கள் வேற லெவல். விக்ரமுக்கு உண்மையான கம்பேக்.. ஜாலியாக ஒரு வாழ்க்கை.. த்ரில்லாக ஒரு வாழ்க்கை… பாசமாக ஒரு வாழ்க்கை என வெரைட்டி காட்டியுள்ளார்.

தாதா பாய் நவ்ரோஜியாக வருகிறார் துருவ். அப்பாவுடன் போட்டி போட்டு நடித்துள்ளார். ஒரு வேளை குட்டி 16 அடி பாயும் என நினைத்து பல இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்துள்ளார். திடீரென திடீரென கத்துகிறார். இது எரிச்சலை ஏற்படுத்துகிறது.

மற்றபடி பக்கா ஷேவிங் செய்து மாணவன்.. தாடி வைத்த என்கௌண்டர் போலீஸ் என மிரட்டியிருக்கிறார் துருவ் விக்ரம்.

கார்த்திக் சுப்பராஜ் படம் என்றால் பாபி சிம்ஹா வேற மாரி.. வேறமாரி.. ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை அசத்தியிருக்கிறார் சிம்ஹா.

சிம்ரன் பெரிதாக கவரவில்லை. வாணிபோஜன் படத்தில் நடித்திருக்கிறார் என்ற செய்தி வந்தது.? ஆனால் எங்கு என்றுதான் தெரியவில்லை.

டெக்னிஷியன்கள்..

விக்ரமின் வளர்ச்சி, மதுபான தயாரிப்பு என கதை செல்வது சலிப்பை தட்டுகிறது. பாடல்கள் தேவையில்லாத ஆணிகள்.. ஒரு பாடல் கூட உருப்படியாக இல்லை. முதல்பாதி முடிவதற்குள் நமக்கு சோர்வு வருகிறது

துருவ் வந்த பிறகுதான் படத்தின் கதை சூடுபிடிக்கிறது.

ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு அசத்தல் ரகம். 1968 முதல் 2018 வரை காட்சிகளை வேறுப்படுத்தி காட்டியிருப்பது சிறப்பு.

எடிட்டர் பல காட்சிகளை வெட்டி எறிந்திருக்கலாம். படத்தின் நீளம் பெரிய குறையாக உள்ளது.

அப்பா – மகன் போட்டியில் வெல்வது யார்.? என்ற சுவாரசியமான கதையை வைத்து மூன்று மணி கொடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

மேலும் வழக்கமான அவரது பாணியில்தான் இப்படம் நகர்கிறது. சில ட்விஸ்ட் ரசிக்கும்படி உள்ளதை பாராட்டலாம். ஆனால் கேங்ஸ்டர் கதையில் சில மாற்றங்களை இனிவரும் காலங்களில் கார்த்திக் சுப்பராஜ் செய்தால் பல வெற்றிகளை பெறலாம்.

ஆக… இந்த மகான்.. கேங்ஸ்டர் ட்ரீட்

Mahaan movie review and rating in Tamil

More Articles
Follows