கார்த்தி – சிவகார்த்திகேயனை அடுத்து அதிதி ஷங்கரின் 3வது ஹீரோ இவரா.?

கார்த்தி – சிவகார்த்திகேயனை அடுத்து அதிதி ஷங்கரின் 3வது ஹீரோ இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விருமன்’ படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியானார்.

தற்போது நிறைய விளம்பர படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அதிதி ஷங்கரின் அடுத்த பட ஹீரோ யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இவரது அடுத்த பட நாயகன் விஷ்ணு விஷால் என தெரியவந்துள்ளது.

‘முண்டாசுப்பட்டி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராம்குமார் & விஷ்ணு விஷால் இணைந்த படம் ‘ராட்சசன்’.

ராம்குமார் – விஷ்ணு கூட்டணி 3வது முறையாக மீண்டும் தற்போது இணைந்துள்ளனர்.

இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில்தான் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

Is he Aditi Shankar’s 3rd hero after Karthi , Sivakarthikeyan?

சூர்யா – தனுஷ் – சிவகார்த்திகேயன் – ஜெயம் ரவி வரிசையில் அசோக் செல்வன்

சூர்யா – தனுஷ் – சிவகார்த்திகேயன் – ஜெயம் ரவி வரிசையில் அசோக் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என்னடா.! இது இப்படி ஒரு தலைப்பா? அப்படின்னு உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்.. சரி விடுங்க சந்தேகத்தை கிளியர் பண்ணிடுவோம்.

இவங்க எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.. என்னனு கேட்டீங்கன்னா.. எல்லாருமே 30 – 35 வயதை கடந்த ஹீரோக்கள் தான்.

அப்படி இருந்தாலும் இவங்க எல்லாரும் இப்ப கூட ஸ்கூல் பையனா நடிக்கிறதுக்கு ரெடியா இருக்காங்க..

அந்த அளவுக்கு தங்களுடைய உடலை இளைத்து ஒரு பள்ளி மாணவன் தோற்றத்தில் நடிக்கவும் தயாராக இருந்தவர்கள் தான் இவர்கள்.

(96 என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு பள்ளி மாணவன் கேரக்டர் இருந்தாலும் அதில் வேறு ஒரு நபர் தான் நடித்திருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.)

‘வாரணம் ஆயிரம்’ படத்தில் பள்ளி மாணவன் போல 20 வயது இளைஞனாக நடித்திருந்தார் சூர்யா.

அதுபோல 3 படத்தில் தனுஷ்.. ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன்.. ‘கோமாளி’ படத்தில் ஜெயம் ரவி ஆகியோர் பள்ளி மாணவராக நடித்திருந்தார்கள்.

அந்த வரிசையில் தற்போது அசோக் செல்வனும் இணைகிறார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சபாநாயகன்’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் + டீசர் நேற்று ஏப்ரல் 25ல் வெளியானது.

இந்தப் படத்தை சி எஸ் கார்த்திகேயன் என்பவர் இயக்க அரவிந்த் ஜெயபாலன் ஐயப்பன் ஞானவேல் உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர்

இதில் பள்ளி மாணவனாக அசோக் செல்வன் நடிக்க அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

இவர்களுடன் சாந்தினி, மயில்சாமி, மைக்கேல், தங்கதுரை உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைக்க பாலசுப்பிரமணியம் தினேஷ் புருஷோத்தமன் பிரபு ராகவ் உள்ளிட்டோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

https://www.filmistreet.com/video/saba-nayagan-official-teaser/

Ashok selvan’s SabaNayagan first look and teaser released

நடிகர் விஜய் பிறந்தநாளில் சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படம்.? டைரக்டர் யார்.?

நடிகர் விஜய் பிறந்தநாளில் சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படம்.? டைரக்டர் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கிவரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.

தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை கோபி சந்த் இயக்குவார் எனத் தகவல்கள் வந்தன.

மேலும் விஜய்யின் 68வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாகவும் வந்த தகவல்களை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்தப் படத்தை பிரபல சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அந்த நிறுவனத்திற்கு இந்த படம் 100வது திரைப்படமாகும்.

எனவே இந்த படத்தின் அறிவிப்பை ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்த நாளில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் நடித்த பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஜில்லா என பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijay to headline the 100th film of super good films?

ஒரே ஒரு இந்திய நடிகருடன் இணைய ஆசைப்படும் Guardians of the Galaxy பட டைரக்டர்

ஒரே ஒரு இந்திய நடிகருடன் இணைய ஆசைப்படும் Guardians of the Galaxy பட டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸியின் மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதி கிட்டத்தட்ட வந்துவிட்டது.

படம் மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்குள் ரசிகர்களும் உலக அளவில் உள்ள விமர்சகர்களும் படம் குறித்தான தங்களது எதிர்பார்ப்பை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

இது MCU உடன் இயக்குநர் ஜேம்ஸ் கன்னின் கடைசி பயணம். ஆனால், இதன் மூலம் அவர் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் மறக்கமுடியாத பயணத்தை உருவாக்கியுள்ளார்.

இந்திய ஊடகங்களுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், ஜேம்ஸ் கன் நம் இந்திய நடிகர் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறினார்.

கார்டியன்ஸ் பிரபஞ்சத்தில் ஒரு இந்திய நடிகரை அறிமுகப்படுத்த முடிந்தால் அது யாராக இருக்கும் என்று இயக்குநரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த இயக்குநர், ‘RRR’ படத்தில் இருந்து, ஜூனியர் என்டிஆர் உடன் வேலை செய்ய தனது விருப்பத்தை தெரிவித்தார்.

மேலும், அவரைப் பற்றி கூறும்போது, ‘அந்தப் படத்தில் அவர் அற்புதமாகவும் நேர்மறைத் தன்மையுடனும் இருந்தார்’ என்றும் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் கன்னின் இந்த அறிக்கை, உலக அளவில் இந்திய சினிமா பிரபலமடைந்து வருவதற்கும், சர்வதேச பார்வையாளர்களிடம் அது ஏற்படுத்தும் தாக்கத்துக்கும் சான்றாகும்.

Guardians of the galaxy director wants to join with junior NTR

BREAKING NEWS : ‘கேப்டன் மில்லர்’ சூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இன்று தொடங்கியது

BREAKING NEWS : ‘கேப்டன் மில்லர்’ சூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இன்று தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் வெடிகுண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படப்பிடிப்பு தொடர்பாக படக்குழு மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பபை அப்பகுதியில் நடத்த தடை விதித்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு, அதே இடத்தில் இன்று மீண்டும் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்புக்காக அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் மில்லர்

dhanush’s captain miller shoot resumes with proper permission

தனுஷ் படத்தில் இணையும் பிரபல அமெரிக்க நடிகர்

தனுஷ் படத்தில் இணையும் பிரபல அமெரிக்க நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கேப்டன் மில்லர்’.

இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார்.

கன்னட நடிகர் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

‘கேப்டன் மில்லர்’ படத்தின் மூலம் தனுஷுக்கு ஐந்தாவது முறையாக ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், பிரபல அமெரிக்க நடிகர் எட்வர்ட் சோனென்ப்ளிக் (Edward Sonnenblick) இணைந்துள்ளார்.

இவர் பல இந்தி படங்களில் நடித்துள்ளார்.

மேலும், இவர் இராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edward Sonnenblick joins dhanush’s captain miller film

More Articles
Follows