நன்றி மறவாமல் சூர்யா – கார்த்தி செய்த காரியத்தை பார்த்தீர்களா.??

நன்றி மறவாமல் சூர்யா – கார்த்தி செய்த காரியத்தை பார்த்தீர்களா.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்த ‘விருமன்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 12-ல் வெளியானது.

கிராமத்து செண்டிமெண்ட் மற்றும் ஆக்ஷன் கலந்த இந்த படத்தை இயக்கியிருந்தார் முத்தையா.

விருமன்

இதில் கார்த்தி உடன் அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

இந்தப் படத்தின் வெற்றியை முன்னிட்டு சூர்யா, கார்த்தி, முத்தையா உள்ளிட்டோருக்கு விநியோகஸ்தர் சக்திவேலன் வைரக் காப்பு பரிசளித்திருந்தார்.

விருமன்

இந்த நிலையில் இந்த படம் வெளியாகி ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில் படத்தின் வெற்றிக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்து அவர்களது புகைப்படங்களை போஸ்டர்களில் படக்குழு வெளியிட்டுள்ளது.

விருமன்

Suriya Karthi thanks each and everyone of Viruman team

‘சந்திரமுகி 2’க்கு சிக்ஸ்பேக்.; அறக்கட்டளைக்கு நன்கொடை வேண்டாம் – ராகவா லாரன்ஸ்

‘சந்திரமுகி 2’க்கு சிக்ஸ்பேக்.; அறக்கட்டளைக்கு நன்கொடை வேண்டாம் – ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டான்ஸ் மாஸ்டர் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் ஆன்மீகவாதி சமூக சேவையாளர் என பன்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ்.

இவர் சற்றுமுன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…

தனது ( Larencce Charitable trust ) அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்க வேண்டாம் என நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்…

அனைவருக்கும் வணக்கம், இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலாவதாக, சந்திரமுகி 2 படத்திற்காக எனது உடலை மாற்றுவதற்கு நான் எடுக்கும் ஒரு சிறிய முயற்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்த எனது பயிற்சியாளர் சிவா மாஸ்டருக்கு நன்றி. உங்கள் அனைவரின் ஆசியும் எனக்கு வேண்டும்.

இரண்டாவதாக, இத்தனை ஆண்டுகளாக என்னுடைய ( Larencce Charitable trust ) அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக நின்று உங்கள் நன்கொடைகளால் எனது சேவைக்கு ஆதரவளித்தீர்கள். என்னால் இயன்றதைச் செய்துள்ளேன், தேவைப்படும் போதெல்லாம் உங்களிடமிருந்து உதவியைப் பெற்றுள்ளேன். இப்போது, ​​நான் நல்ல இடத்தில் இருக்கிறேன், மேலும் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறேன்.

இனி மக்களுக்குச் சேவை செய்யும் முழுப் பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். எனவே, ( Larencce Charitable trust ) அறக்கட்டளைக்கு உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் ஆசிர்வாதம் மட்டும் எனக்கு போதும். இத்தனை வருடங்களாக நான் பெற்ற ஆதரவுக்கும் அன்புக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

எனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை விரைவில் ஏற்பாடு செய்கிறேன்!

அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.

#சேவையே கடவுள்

அன்புடன்
ராகவா லாரன்ஸ்.

No need of donation any more says Raghava Lawrence

கூல் சுரேஷின் ரசிகையாக மாறிய ‘வெந்து தணிந்தது காடு’ பட ஹீரோயின்

கூல் சுரேஷின் ரசிகையாக மாறிய ‘வெந்து தணிந்தது காடு’ பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு எவருமே எதிர்பாராத வகையில் விளம்பரங்களை செய்தவர் நடிகர் கூல் சுரேஷ்.

தீவிர சிம்பு ரசிகரான இவர் பல படங்களில காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார்.

இவர் எது பேசினாலும் ‘வெந்து தணிந்தது காடு… வணக்கத்தை போடு..” என்று படத்தின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்பார்.

இதன் மூலம் இவருக்கும் படத்திற்கும் ஏகப்பட்ட பப்ளிசிட்டி கிடைத்தது.

செப்டம்பர் 15ஆம் தேதி ‘வெந்து அணிந்தது காடு’ படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் நாயகி சித்தி இதானி ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அதில்… “கூல் சுரேஷ் இந்த படத்திற்கு அதிக அளவில் பிரமோஷன் செய்துள்ளார். நான் அவருடைய ரசிகை ஆகிவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.

Heroine of ‘Vendhu Tananthana Kadu’ became cool Suresh’s fan

பிரபலங்கள் முன்னிலையில் நடிகர் வின் ஸ்டார் விஜய் நடத்திய முப்பெரும் விழா

பிரபலங்கள் முன்னிலையில் நடிகர் வின் ஸ்டார் விஜய் நடத்திய முப்பெரும் விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை சாலிகிராமம் குமரன் காலணியில் உள்ள சிகரம் ஹாலில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

பாக்கியம் சினிமா 11ஆம் ஆண்டு விழா – முள்ளும் மலரும் 6ஆம் ஆண்டு விழா, – சாண்டோ சின்னப்பா தேவர் பட திறப்பு விழா மற்றும் பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கும் விழா என இந்த நிகழ்ச்சி வெகு விமரிசையாக பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நீதி அரசர் ஜோதிமணி, இயக்குனர் பேரரசு, இயக்குனர் அரவிந்தராஜ், தயாரிப்பாளர் சிகரம் சந்திரசேகர், தயாரிப்பாளர் விஜய் முரளி, பிஆர்ஓ பெரு துளசி பழனிவேல், மக்கள் குரல் ராம்ஜி, மியூசிக் யூனியன் தலைவர் தீனா, பொறியாளர் தா மணிமாறன், இலக்கிய திறனாய்வாளர் கொடைக்கானல் காந்தி அட்வகேட் நீதி செல்வன், தயாரிப்பாளர் காந்திமதி, இயக்குனர் ஹாருன், நடிகை அபிராமி, டாக்டர் அக்பர் கான், நடிகை டயானா ஸ்ரீ
ருத்ர மனோகரன் முள்ளும் மலரும் ஆசிரியர் பொறியாளர் பன்னீர் ராமச்சந்திரன் ஆகியோர்
கலந்து கொண்டனர்.

இயக்குனரும் நடிகருமான பாக்கியம் சினிமா இதழ் ஆசிரியரும் வெளியீட்டாளருமான விண் ஸ்டார் விஜய் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தனுஷுக்கு தமிழகத்தில் முதல் இடம்.; தென்னிந்திய அளவில் 2வது இடம்

தனுஷுக்கு தமிழகத்தில் முதல் இடம்.; தென்னிந்திய அளவில் 2வது இடம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நவீன டிஜிட்டல் காலத்தில் நமக்கு பிடித்த சினிமா நடிகர் நடிகைகளை தொடர்பு கொள்வது மிக எளிதான ஒன்றாகி விட்டது.

நடிகர்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்த சமூக வலைத்தளங்கள் ஓர் எளிய சாதனமாகி விட்டது.

பேஸ்புக் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சமூகவலைத்தளங்களில் முன்னணி நடிகர்கள் ஆக்டிவாக உள்ளனர்.

தங்களின் புகைப்படங்களை.. தங்களைப் பற்றி தகவல்களை அதில் அதிகம் பகிர்கின்றனர்.

எனவே பொதுமக்களும் அவர்களை சமூக வலைத்தளங்களில் பின் தொடங்கினர்.

இந்த நிலையில் நடிகர் தனுஷின் twitter பக்கத்தை 11 மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்கின்றனர்.

இதன் மூலம் தமிழ் சினிமா நடிகர்களில் தனுஷ் முதலிடத்தை பெறுகிறார். தென்னிந்திய அளவில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.

ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட நடிகராக தனுஷ் உய(வள)ர்ந்து நிற்கிறார்.

தனுஷின் 3 படம் ரீ-ரிலீஸ்.; ஸ்ருதிஹாசனை கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்

சிவகார்த்திகேயன் சந்தானம் யோகிபாபு வரிசையில் சித்து சித்

சிவகார்த்திகேயன் சந்தானம் யோகிபாபு வரிசையில் சித்து சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்கள் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம் , யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள்.

நாம் மேலே சொன்ன மூவர்கள் டிவியில் நடைபெற்ற ரியால்டி ஷோக்கள் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள்.

ஆனால் தற்போது டிவி சீரியல்கள் மூலம் பிரபலமான ஒரு நடிகர் வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார்.

அவர்தான் நடிகர் சித்து சித். அதன் விவரம் வருமாறு…

சின்னத்திரை மூலம் மக்களால் கொண்டாடப்பட்ட பலர் தற்போது வெள்ளித்திரை நட்சத்திரங்களாக ஜொலித்துக்கொண்டிருப்பதால், சின்னத்திரையில் முகம் காட்டுவது என்பது மிகப்பெரிய சவலாக இருக்கிறது. அந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஜெயிப்பது சிலர் மட்டுமே. அந்த சிலரில் ஒருவர் தான் நடிகர் சித்து சித்.

சித்து சித்

‘திருமணம்’ என்ற தொடர் மூலம் மக்களிடம் பிரபலமான சித்து சித், தற்போது ’ராஜா ராணி 2’ தொடரில் ஹீரோவாக நடித்து வருவதோடு, தமிழ் ரசிகர்களின் பேவரைட் சின்னத்திரை ஹீரோவாகவும் உயர்ந்துள்ளார்.

இந்த இடத்தை பிடிக்க சித்து சித், பல வருடங்கள் கடுமையாக உழைத்திருக்கிறார். சுமார் 6 வருடங்களாக நடன கலைஞராக பணியாற்றிய பிறகே நடிகர் வாய்ப்பை பெற்றவர், திருமணம் தொடர் மூலமாக மக்களிடம் பிரபலம் ஆனார்.

சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு திருவண்ணாமலையில் இருந்து வந்து இன்று தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருக்கும் சித்து சித், நடிக்கும் தொடர்கள் அத்தனையும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் பெற்று வருவதால், இவருக்கான ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, இவரை வெள்ளித்திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.சித்து சித்

சின்னத்திரையில் வெற்றி பெற்ற சித்து சித்தும் தனது அடுத்த இலக்காக வெள்ளித்திரையை நோக்கி பயணிக்க ரெடியாக இருப்பதோடு, சில திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே விரைவில் வெள்ளித் திரையில் சித்து சித் ஹீரோவாக களம் இறங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் சித்து சித், சமீபத்தில் எடுத்த தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையதளம் மற்றும் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

சித்து சித்

Sidhu sid will make his debut as a  hero on the silver screen

More Articles
Follows