‘விருமன்’-ல் வராத காட்சியை பகிர்ந்து சூரியை வாழ்த்திய ரோபோ சங்கர் மகள்

‘விருமன்’-ல் வராத காட்சியை பகிர்ந்து சூரியை வாழ்த்திய ரோபோ சங்கர் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.

விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

அண்மையில் வெளியான விருமன் படத்தில் நாயகி அதிதியின் தோழியாக நடித்திருந்தார்

இந்த நிலையில் நேற்று ஆகஸ்ட் 27ஆம் தேதி நடிகர் சூரியன் பிறந்தநாளை முன்னிட்டு ‘விருமன்’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில்…

சூரியை தன் இடுப்பில் தூக்கி வைத்து கொண்டிருப்பது போன்ற படம் உள்ளது.

பிறந்தநாள் வாழ்த்துகள் சூரி மாமா. உங்களின் கைகளில் வளர்ந்து, இன்று உங்களுடனேயே நடித்திருப்பது பாக்கியம்.. குத்துக்கல்லு.. கொலவிக்கல்லு…’ என குறிப்பிட்டுள்ளார்.

குத்துக்கல்லு.. சூரி கேரக்டர் பெயர்.. கொலவிக்கல்லு.. இந்திரஜா பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளாசிக் கிரிமினல் ஜார்ஜ் குட்டி மீண்டும் வருகிறார்.; ‘த்ரிஷ்யம்’ பட ரசிகர்கள் குஷி

கிளாசிக் கிரிமினல் ஜார்ஜ் குட்டி மீண்டும் வருகிறார்.; ‘த்ரிஷ்யம்’ பட ரசிகர்கள் குஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பார்கள்… அது போல ஒரு சில இயக்குனர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள்.

ஆனால் அரிதாக ஒரு சில படங்களுக்கு மட்டுமே ரசிகர் இருப்பார்கள். எனவேதான் அந்தப் படத்தின் தொடர்ச்சி பாகங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டு இருக்கும்.

அந்த வரிசையில் மலையாளத்தில் சிபிஐ டைரி குறிப்பு மற்றும் த்ரிஷ்யம் ஆகிய படங்களை சேர்க்கலாம்.

கடந்த 2015ல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. இதில் ஜார்ஜ் குட்டி என்ற கேரக்டர் பெயரில் மோகன்லால் நடித்திருந்தார்.

இப்படம் சூப்பர் ஹிட் ஆகவே தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றிகளைப் பெற்றது.

எனவே ‘த்ரிஷ்யம் 2’ உருவாகி கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்தப் படமும் வெற்றி பெற்றது.

இதனையடுத்து த்ரிஷ்யம் 3 பாகம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் ’த்ரிஷ்யம் 3’ படத்தின் பணிகள் தொடங்கிவிட்டதாக அப்பட தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் கேரளாவில் நடந்த ஒரு விழாவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனால் கிளாசிக் கிரிமினல் ஜார்ஜ் குட்டி இஸ் பேக் என இப்பட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

‘கேப்டன்’ விஜயகாந்த் பிறந்தநாளில் நடிகர் விஷால் செய்த நல்ல விஷயம்

‘கேப்டன்’ விஜயகாந்த் பிறந்தநாளில் நடிகர் விஷால் செய்த நல்ல விஷயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக மக்களால் ‘கேப்டன்’ என அன்போடு அழைக்கப்படுபவர் விஜயகாந்த்.

சினிமாவில் பல சாதனைகளை படைத்த இவர் தற்போது அரசியலில் இருக்கிறார்.

ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவரால் முன்பு போல ஆக்டிவாக செயல்பட முடியவில்லை.

இந்த நிலையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடிகர் விஜயகாந்த் தன் பிறந்த நாளை கொண்டாடினார்.

அவரது பிறந்தநாளில் நடிகர் விஷால் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பொதுவாக விஷால் தனது நண்பர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்த மதிக்கத்தக்க பெரியோர்களின் பிறந்தநாள் என்றால் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தவிர்த்து அவர்களின் பெயரில் தனது தேவி அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உணவு அளித்து அவர்களின் வாழ்த்தை நண்பர்களுக்கும் மதிக்கத்தக்க பெரியவர்களுக்கும் பரிசாக வழங்குவது வழக்கம்.

அதேபோன்று விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளிலும் பல ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உணவளித்தது குறிப்பிடத்தக்கது.

இச்செயல் அனைவரையும் வியப்படைய செய்தது. மேலும் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களும் விஷால் செயலால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த தலைமுறையை காப்போம்.; செல்வராகவனை மானசீக குருவாக ஏற்ற மோகன் ஜீ

அடுத்த தலைமுறையை காப்போம்.; செல்வராகவனை மானசீக குருவாக ஏற்ற மோகன் ஜீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

’பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G. ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அவர் அடுத்ததாக தயாரித்து இயக்கும் படம் ’பகாசூரன்’.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார்.

‘கர்ணன்’ படத்திற்கு பிறகு நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல் சுரேஷ், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர்.

’பகாசூரன்’ உருவான விதம் பற்றி இயக்குனர் மோகன்.ஜியிடம் பேசியபோது…

“வடமாவட்ட வாழ்வியலை மையமாக கொண்ட கதைகளைதான் இதுவரை நான் இயக்கி வந்துள்ளேன். இந்தப்படத்தின் கதை களமும் அப்படிதான் அமைந்துள்ளது.

கடலூர், சேலம், ஏற்காடு, திருச்சி ஆகிய இடங்களிலேயே ‘பகாசூரன்’ கதை நகர்கிறது. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மகாபாரத கதாபாத்திரங்களுடன் தொடர்புள்ளதாக இருக்கும்.

படத்திற்கு ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர் என்னுடன் கைக்கோர்க்கும் மூன்றாவது படம் இது. ‘விக்ரம் வேதா’, ‘கைதி’ படங்களுக்கு இசையமைத்த சாம் சி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இவரது இசையில் பாபநாசம் சிவனின் ஒரு பாடல், படத்தில் முக்கிய அம்சமாக இருக்கும். படத்திற்கு எஸ்.தேவராஜ் எடிட்டிங் செய்ய, கலை இயக்குனராக எஸ்.கே பணியாற்றுகிறார். மிரட்டல் செல்வா சண்டை பயிற்சி செய்ய, ஜானி மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.”

இயக்குனரான செல்வராகவனை பற்றி…

“செல்வராகவன் இயக்கிய ’காதல் கொண்டேன்’ படம் பார்த்த பின் தான் சினிமா மீது எனக்கு காதல் ஏற்பட்டது..

யாரிடமும் பணியாற்றாமல் நேரடியாக இயக்குனர் ஆனாலும் செல்வராகவன் அவர்களையே மானசீக குருவாக ஏற்றுக்கொண்டேன்..

என் முதல் படமான ‘பழைய வண்ணாரப்பேட்டை’ பட டைட்டிலும் அதில் வரும் வில்லன் கதாபாத்திரமான பட்டறை குமாரும் இவருடைய தாக்கம்தான்.

பின் ’திரெளபதி’ படத்திலிருந்து எனக்கென ஒரு பாணியை தேர்வு செய்து கொண்டேன்.. குருவாக ஏற்றுக் கொண்டவரையே என் இயக்கத்தில் நடிக்க வைப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

அவருடன் ‘பகாசூரன்’ படத்தில் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். அவரை ரசித்து ரசித்து இயக்கி உள்ளேன். அவரும் நடிகராக மட்டும் இருந்தாரே தவிர ஒரு நொடிகூட தன்னை இயக்குனராக காட்டிக் கொள்ளவில்லை..

சின்ன கருத்து கேட்டால் கூட உங்க முடிவே இறுதியானது என நடிகராக மட்டுமே இருந்து படத்தை வேகமாக முடித்து தந்தார்.
பீஸ்ட்’, ‘சாணிக்காயிதம்’ படங்களில் கவனம் ஈர்த்த செல்வராகவன் இதில் கட்டைக்கூத்து கலைஞனாக வருகிறார்.
அவர் நடிப்பை பற்றி நான் சொல்வதை விட டீசர் பார்த்து நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.

குருவாக, அண்ணனாக என் மீது உள்ள விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு ‘பகாசூரன்’ கதைக்காக இதில் நடித்த செல்வராகவன்க்கு இந்த நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

செல்வராகவன்க்கு இருக்கும் கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவருக்கு என்னுடைய அன்பளிப்பு இந்த ’பகாசூரன்’ திரைப்படம்.”

என நெகிழ்கிறார் மோகன்.ஜி.

Protect our Next Generation ?

Here is the Teaser of #Bakasuran

▶️ https://youtu.be/ClpvXCV2QFo

@selvaraghavan @natty_nataraj @mohandreamer @SamCSmusic @Gmfilmcorporat1 @ProBhuvan @Mrtmusicoff

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா ? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா ? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ஜெயிலர்.

சில தினங்களுக்கு முன் சென்னையில் இப்படத்தின் சூட்டிங் தொடங்கியது .

சமீபத்தில் ரஜினி பாரிலிருந்து வருவது போன்ற பட காட்சி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது .

இந்நிலையில் ரஜினியின் 170 வது படத்தை இயக்கும் வாய்ப்பை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லைக்கா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேக்ஸ் வாத்தி கம்மிங்.; ‘கோப்ரா’ பட சென்சார் & ரன்னிங் டைம் அப்டேட்

மேக்ஸ் வாத்தி கம்மிங்.; ‘கோப்ரா’ பட சென்சார் & ரன்னிங் டைம் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விக்ரம் நடிப்பில் உருவான படம் ‘கோப்ரா’.

இந்த படத்தில் கணித வாத்தியராக விக்ரம் நடித்திருக்கிறார். அவரது வாழ்வில் வில்லன் குழுவினர்களால் ஒரு விபரீதம் நடக்கிறது. அதனை தன் கணித மூளையால் எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை எனத் தெரிகிறது.

இதில் நடிகர் விக்ரம் ஏழு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார்.

ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி, மிருணாளினி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த வாரம் ஆகஸ்ட் 31ல் படம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது.

இப்படத்தின் நீளம் மொத்தம் 3 மணி நேரம், 3 நிமிடங்கள், 3 நொடிகள் என தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

More Articles
Follows