கார்த்தி – சிவகார்த்திகேயனை தொடர்ந்து பிரபல நடிகரின் தம்பிக்கு ஜோடியாகும் அதிதி

கார்த்தி – சிவகார்த்திகேயனை தொடர்ந்து பிரபல நடிகரின் தம்பிக்கு ஜோடியாகும் அதிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமெரிக்காவில் டாக்டர் படிப்பு படித்தாலும் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் நடிக்க துவங்கினார் அதிதி.

இவர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் ஆவார். என்னதான் அமெரிக்காவில் படித்து நாகரீக பெண்ணாக வளர்ந்தாலும் தன்னுடைய முதல் படத்தில் கிராமத்து பெண்ணாகவே அச்சு அசலாக மாறி இருந்தார்.

‘விருமன்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த அதிதி சமீபத்தில் வெளியான மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 3வது வெற்றிக்காக காத்திருக்கிறார்.

இந்த நிலையில் அதிதியின் 3வது படத்தின் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படத்தை விஷ்ணுவர்தன் இயக்குகிறார்.

இதில் ஆகாஷ் முரளி ஜோடியாக அதிதி நடிக்க இப்படத்தை சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதன் முதல் ஷெட்யூல் சென்னையில் நடந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு போர்ச்சுக்கல் நாட்டில் நடந்து வருகிறதாம்.

எனவே விரைவில் போர்ச்சுகல் நாட்டிற்கு அதிதி செல்ல உள்ளார் என்றும் அங்கு நடைபெற உள்ள சூட்டிங்கில் கலந்து கொள்வார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

ஆகாஷ் முரளி

Actress Aditi Shankars 3rd movie update

தொடரும் தலைவர் அலப்பறை.; ‘ஜெயிலர்’ 3வது சிங்கிள் தானே வேணும்; அதெல்லாம் JUJUBEE

தொடரும் தலைவர் அலப்பறை.; ‘ஜெயிலர்’ 3வது சிங்கிள் தானே வேணும்; அதெல்லாம் JUJUBEE

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘ஜெயிலர்’ படத்தின் மூன்றாவது பாடலான “ஜுஜுபி” என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது என படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், அதில் மூன்றாவது சிங்கிள் தான வேணும்? அதுலாம் ஜுஜுபி மேட்டர்.. என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர்

Third single, Jujubee from Rajni’s Jailer will be out tomorrow

OFFICIAL : உலகளவில் வசூல் வேட்டை செய்த ‘மாவீரன்’

OFFICIAL : உலகளவில் வசூல் வேட்டை செய்த ‘மாவீரன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘மாவீரன்’.

இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘மாவீரன்’ படம் உலக அளவில் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மாவீரன்

Sivakarthikeyan’s ‘Maaveeran’ rakes in Rs 75 crores at the box office

‘லியோ’ இசை வெளியீடு எப்போ.? விமான நிலையத்தில் விஜய்.. தளபதி 68 அப்டேட்

‘லியோ’ இசை வெளியீடு எப்போ.? விமான நிலையத்தில் விஜய்.. தளபதி 68 அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து, வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 68’ படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘லியோ’ படத்தின் தொடர் படப்பிடிப்புகளுக்குப் பிறகு நடிகர் விஜய் ஓய்வுக்காக வெளிநாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவர் விமான நிலையத்திற்கு வந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

மேலும் விஜய், சுற்றுலா முடிந்த பிறகு ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்

vijay going for short vacation to abroad

Lets Get Married தெலுங்கு ரிலீஸ் அப்டேட் இதோ..

Lets Get Married தெலுங்கு ரிலீஸ் அப்டேட் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM)) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ‘எல்.ஜி.எம்’ படத்தின் புது ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) திரைப்படம் தெலுங்கில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

‘எல்.ஜி.எம்’ படத்தின் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வெளியீட்டு உரிமையை ஜே.பி.ஆர் பிலிம்ஸ், திரிபுரா புரொடக்ஷன்ஸ் கைப்பற்றியுள்ளது.

மேலும், இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

எல்.ஜி.எம்

‘Let’s Get Married’ telegu releasing on August 4th

பிரபல நடிகர் ஜெயந்த் சவார்கர் மரணம்.; திரையுலகினர் இரங்கல்!

பிரபல நடிகர் ஜெயந்த் சவார்கர் மரணம்.; திரையுலகினர் இரங்கல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏராளமான மராத்தி மற்றும் ஹிந்தி சினிமாவில் நடித்து பிரபலமானவர் பழம்பெரும் நடிகர் ஜெயந்த் சவார்கர்.

ஆரம்ப காலத்தில் மேடைக்கலைஞராக இருந்த ஜெயந்த் பின்னர் மராத்தி, இந்தி மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார்.

குறிப்பாக ‘ஹரி ஓம் விதாலா’, ’66 சதாசிவ்’, ‘சிங்கம்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்

சினிமா மட்டுமின்றி, சின்னத்திரையிலும் அவர் நடித்து இருக்கிறார்.

இவர் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இருந்து வருகிறார்.

வயது முதிர்வு மற்றும் ரத்த அழுத்தம், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன் ஜெயந்த் தானேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கபப்ட்டு வந்த நிலையில் ஜெயந்த் நேற்று காலை 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 87.

மேலும், நடிகர் ஜெயந்த் சவார்கர் மறைவிற்கு பாலிவுட் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Famous Marathi actor Jayant Savarkar dies at 87

More Articles
Follows