முத்தையா இயக்கத்தில் ஆர்யாவுக்கு ஜோடியான சிம்பு பட நடிகை

முத்தையா இயக்கத்தில் ஆர்யாவுக்கு ஜோடியான சிம்பு பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்த ‘விருமன்’ படத்தை இயக்கியவர் முத்தையா.

இவர் தனது அடுத்த பட அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். இந்தப் படமும் வழக்கம் போல கிராமத்து மண்வாசனை கலந்த மசாலா திரைப்படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்தையா இயக்கவுள்ள இந்த படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ பட நடிகை சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ஆரியா 34 என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைக்க ஒளிப்பதிவு செய்கிறார் வேல்ராஜ்.

இந்த படத்தை ட்ரம்ப் ஸ்டிக் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

இத்தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

ஆரியா 34

Arya 34 mass rural action movie shooting started with pooja today.

@arya_offl @SiddhiIdnani @dir_muthaiya @VelrajR @gvprakash #AnalArasu @DrumsticksProd @ZeeStudiosSouth @teamaimpr

நிவின்பாலி – அஞ்சலி பட டைட்டிலுக்கு நேரம் குறித்த ‘மாநாடு’ தயாரிப்பாளர்

நிவின்பாலி – அஞ்சலி பட டைட்டிலுக்கு நேரம் குறித்த ‘மாநாடு’ தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நிவின்பாலி.

இவர் ‘நேரம்’, ‘பிரேமம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர்.

தற்போது நேரடியாக ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘தங்க மீன்கள், பேரன்பு’ புகழ் ராம் இயக்கி வருகிறார்.

இதில் நாயகியாக அஞ்சலி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார்.

‘மாநாடு’ படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில், புரொடக்‌ஷன் நம்பர் -7 ஆக இந்தப் படத்தை தயாரித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தனுஷ்கோடி, கேரளா, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

சென்னை – கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் பெரிய ரயில் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த நிலையில், படத்தின் டைட்டில் அக்டோபர் 11-ம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Nivin Pauly Anjali movie title announcement updates

மீண்டும் மீண்டும் விஜய்யுடன் இணையும் சூர்யா; லோகேஷ் போடும் மாஸ்டர் பிளான்?

மீண்டும் மீண்டும் விஜய்யுடன் இணையும் சூர்யா; லோகேஷ் போடும் மாஸ்டர் பிளான்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதனையடுத்து மீண்டும் ‘மாஸ்டர்’ பட இயக்குனருடன் கை கோர்க்கிறார் விஜய்

விஜய்யின் 67வது படமாக உருவாகும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இதில் விஜய்யுடன் வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய் தத், பிருத்விராஜ், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்து திருப்புமுனை ஏற்படுத்தியவர் சூர்யா.

இவை மட்டுமல்லாமல் நடிகர் விஜய் உடன் ‘நேருக்கு நேர்’ & ‘ப்ரண்ட்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay and Suriya teams up again for Lokesh

சிறந்த நடிகருக்கான விருது வென்ற குருசோமசுந்தரம்.; எந்த படத்திற்கு தெரியுமா.?

சிறந்த நடிகருக்கான விருது வென்ற குருசோமசுந்தரம்.; எந்த படத்திற்கு தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆசிய திரைப்படங்களுக்கான ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட் 2022 விருதுகள் அறிவிப்பில்
நடிகர் குருசோமசுந்தரத்திற்கு சிறந்த முன்னணி நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

ஆசிய நாடுகளின் திரைப்படங்களுக்கான விருதுகள் ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்’ இந்த வருடம் வழங்கப்பட்டது.

இதில் 16 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு மொழிப் படங்கள் கலந்துகொண்டன.

சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவிலிருந்து சிறந்த நடிகருக்கான விருது நடிகர் குருசோமசுந்தரத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த விருது ‘மின்னல்முரளி’ படத்திற்காக அவருக்கு வழங்கப்பட்டது.

டிசம்பர் மாதம் விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் நடைபெறவிருக்கிறது.

ஆசிய கண்டத்தின் பல்வேறு நாடுகளை சார்ந்த பல்வேறு மொழி திரைத்துறையை சார்ந்தவர்களும் இதில் கலந்துக் கொள்கிறார்கள்.

குருசோமசுந்தரம்

Actor Guru Somasundaram won Best Actor of Asian Continent

கோழி வந்ததா? முட்டை வந்ததா?; விண்வெளிக்கு செல்லும்போது ராஜராஜ சோழன் ஆராய்ச்சி வீண்; சரத்குமார் அறிக்கை

கோழி வந்ததா? முட்டை வந்ததா?; விண்வெளிக்கு செல்லும்போது ராஜராஜ சோழன் ஆராய்ச்சி வீண்; சரத்குமார் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சைவம் இந்து மதமா? – பரபரப்பான சர்ச்சையாக தற்போது சென்று கொண்டிருக்கிறது.

சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், சூரியன், விநாயகர் ஆகிய கடவுள்களை வழிபடுபவர்களை கி.பி. 8 – ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், கணாபத்தியம், ஸ்மார்த்தம் என ஆறு பிரிவுகளாக பிரித்தவற்றை, இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சைவம், வைணவம், சமணம், பெளத்தம், சீக்கியம் மற்றும் அனைத்து நாட்டுப்புற சமயங்களையும் உள்ளடக்கி பொதுவாக இந்து சமயம் என வரையறுத்துள்ளது.

1790 – ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் சட்டங்களை தொகுத்தபோது, கிறிஸ்தவம், இஸ்லாமியத்தை தவிர்த்து இருந்த பெரும் பிரிவு சமயங்களை சேர்த்து, சிந்து நதியில் (Indus Valley) இருந்து மருவிய இந்து (Indus) என்ற பெயரிடப்பட்டது.

குரங்கிலிருந்து வந்தவன் மனிதன், மனிதகுரங்கு எதிலிருந்து வந்தது?
குரங்கு விலங்கு என்றால், விலங்கினத்திற்கு மனிதன் என பெயரிட்டது யார்?

மனிதனை இப்போது குரங்கு என்று சொல்வோமா?

அல்லது குரங்கை இப்போது மனிதன் என சொல்வோமா?

இந்த சர்ச்சைகள் எல்லாம் நாட்டிற்கு தேவையான ஒன்று தானா?

கிறிஸ்தவம் எப்போது உருவானது? கிறிஸ்தவர்கள் என்ற பெயர் எப்போது வந்தது? இஸ்லாம் எப்போது உருவானது? இஸ்லாமியர்கள் என்ற பெயர் எப்போது வந்தது?

தேசம் முதலில் வந்ததா? இங்கு வசிக்கும் மக்கள் முதலில் வந்தார்களா?

தமிழ்நாடு முதலில் வந்ததா? தமிழர்கள் முதலில் இங்கு இருந்தார்களா?

சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றி விட்டோம், ஆனால், இது தமிழ்நாடு அல்ல என்பது என்ன வாதம்?

கோழி வந்ததா? முட்டை வந்ததா? என்பது போல ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம்?

யார் முதலில் வந்தார்கள்? எது முதலில் வந்தது? என்பதை வைத்து பின்னாளில் மாற்றியமைக்கப்பட்ட பெயரை விடுத்து ஆதிகால பெயரையே அழைக்க தீர்மானிப்பது அறிவார்ந்த செயலாக இருக்க முடியுமா?

காலத்திற்கேற்ற ஆட்சியமைப்பு – ஒருங்கிணைப்பு – வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது – அப்போது ஹோமோசேப்பியன்ஸ் என்றிருந்த மனித இனத்தை இன்றும் அவ்வாறு அழைக்கிறோமா?

சைவ சமயம் இருந்தது உண்மை, வைணவ சமயம் இருந்தது உண்மை. அந்த சமயங்களை இந்து சமயத்தில் இணைத்தது உண்மை எனும் போது இதற்கு மேல் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்?

இவை அனைத்துமே இறை கொள்கையை அடிப்படையாக கொண்டது. அவரவர் நம்பிக்கைக்கேற்ப இறைவனை வழிபட்டு மதச்சார்பின்மையுடன் செயல்படும் நாட்டில், தொடர்ந்து சர்ச்சைகள் எழுவது வேதனைக்குரியது.

மனித இனத்தின் அடிப்படை தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், சுவாசிக்க தூய்மையான காற்று, கல்வி, சுகாதாரம், பொருளாதார மேம்பாடு, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம், தனிமனித வாழ்க்கைத்தர உயர்வு அனைவருக்கும் சமமாக கிடைக்கப்பெறுவது எப்போது?

புவி வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, இயற்கை சீர்கேடு, நோய்த் தொற்று பரவல், புதுப்புது வைரஸ் தாக்கம், சமூக சீர்கேடுகள் என தேசத்தில் நடந்தேறும் நிலையை தடுப்பது எப்படி? மாற்றுவது எப்போது?

மக்கள் நலனுக்கான முற்போக்கு சிந்தனைகளில் நேரத்தை செலவிடாமல், பின்னோக்கி சென்று வரலாற்றில் சாதித்த மன்னர்களின் புகழை ஆராயாமல் சமயத்தை ஆராய்ந்து இது உண்மையா? பொய்யா? என மீண்டும் மீண்டும் பேசி சர்ச்சைக்குரிய ஒன்றாக உருவாக்குவது நியாயமா?

விலங்கினமாக இருந்த இனம் இரு கற்களை உரசி தீப்பொறி உருவாகுவதை கண்டுபிடித்ததில் இருந்து, சக்கரங்கள், உலோகங்கள் என அன்றாட கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப வளர்ச்சிகளும் மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில் நீண்டு செல்கிறது.

அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியால் ஆலிஸ் (Alice) என பெயரிடப்பட்ட உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம் வெற்றிகரமாக வானில் பறந்துள்ளது.

நாளைய மனிதன் விண்வெளிக்கு பாதை அமைக்க திட்டமிடும் போது, செவ்வாய் கோள்களில் குடியேற சிந்திக்கும் போது, ராஜ ராஜ சோழன் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று விவாதிக்காமல், உலக அதிசயங்களுள் ஒன்றாக வைத்து போற்றக்கூடிய மாபெரும் புகழ்மிக்க தஞ்சை பெரிய கோவிலை மக்களுக்கு அர்ப்பணித்த அந்த மாமன்னன், வீரத் தமிழன் ராஜ ராஜ சோழனின் புகழை உலகின் எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வதில் இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும்.

நன்றி, வணக்கம்
உழைப்பவரே உயர்ந்தவர்

என்றும் அன்புடன்
ரா.சரத்குமார்.

சரத்குமார்

சரத்குமார்

சரத்குமார்

Statement from Sarathkumar regarding Raja Raja Cholan religion issue

JUST IN விஜய்சேதுபதியுடன் நடிக்க மறுத்த மோகன்.; சீக்ரெட் உடைத்த சீனு ராமசாமி

JUST IN விஜய்சேதுபதியுடன் நடிக்க மறுத்த மோகன்.; சீக்ரெட் உடைத்த சீனு ராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் மோகன் நடித்த வெளியான முதல் திரைப்படம் ‘கோகிலா’.

இந்த படத்தில் கமல்ஹாசன் ஷோபா உள்ளிட்டோர் ஒரு நடிக்க பாலுமகேந்திரா இயக்கியிருந்தார்.

இந்த படம் வெளியாகி 45 ஆண்டுகள் நிறைவான நிலையில் இன்று இதனை கொண்டாடும் விதமாக மோகன் ரசிகர்கள் பிரம்மாண்டமான விழாவை சென்னையில் நடத்தினர்.

இந்த விழா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சீனுராமசாமி கலந்துக் கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது…

” நான் எங்கள் ஊரில் மோகனுக்கு ரசிகர் மன்றம் வைத்தவன். மோகன் திரைப்படங்களை பார்த்து வளர்ந்தவன்.

கடந்த மூன்று வருடங்களாக தான் அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் 30 வருடங்களாக அவரது படங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

நான் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படத்தை இயக்கும்போது அதில் குரு சோமசுந்தரம் கேரக்டருக்கு நடிகர் மோகனை அணுகினேன். ஆனால் அவர் மிகவும் யோசித்தார். அந்த கேரக்டரில் நடிக்கவில்லை.

அதன் பின்னர் தான் அவர் நாயகனாக நடிக்க காத்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். எனவே மோகனுக்காக அடுத்த படத்தை நான் இயக்க உள்ளேன்.

என் அடுத்த படத்தில் மோகன் நடிக்க இருக்கிறார்.

ஹரா இயக்குனர் விஜய் ஸ்ரீயை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். மைக் பிடித்துக் கொண்டிருந்த மோகன் கையில் துப்பாக்கி கொடுத்து இருக்கிறார்.படத்தின் காட்சிகள் பிரமாதமாக உள்ளது.”

இவ்வாறு சீனு ராமசாமி பேசினார்.

ரஜினி கமல் கூடி இழுத்த தேர் பொன்னியின் செல்வன் – Seenu Ramasamy l Ponniyin Selvan Rajini Kamal – PS1 ??filmistreet

More Articles
Follows