தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இவ்வருடத்தில் வெளியாகி ரூ. 100 கோடி கிளப்பில் ஒரு சில படங்களே இணைந்தன.
இதில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படமும் அடங்கும்.
எனவே இப்படத்தின் ரீமேக்குக்கு இந்தியில் பலத்த போட்டி எழுந்தது.
தற்போது இதில் விஜய் வேடத்தில் நடிக்கப்போவது யார்? என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களான ஷாரூக்கான் மற்றும் அக்ஷய்குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.
இவர்கள் இருவரில் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டவுடன் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.