லைலா-வை கொன்றது யார்.? ‘கொலை’ விசாரணையில் துப்பறியும் விநாயக் & அப்ரண்டிஸ் சந்தியா

லைலா-வை கொன்றது யார்.? ‘கொலை’ விசாரணையில் துப்பறியும் விநாயக் & அப்ரண்டிஸ் சந்தியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைலா-வை கொன்றது யார் எனும் ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

கொலை படம் குறித்து பரவும் இந்த செய்தி திரைப்பட ஆர்வம் இல்லா பொது ரசிகர்களுக்கும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.

Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து தயாரிக்க,
பாலாஜி K குமார் எழுதி இயக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

‘கொலை’ திரைப்படம் கடந்த ஒரு வாரமாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. இந்த ‘கொலை’ சஸ்பென்ஸ் மர்ம திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய கதாபாத்திரங்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர்களின் புதுமையான முயற்சிக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.

கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் இந்த புதுமையான முயற்சி மீனாட்சி சவுத்ரி நடித்த ‘லீலா’ கதாபாத்திரத்தின் அறிமுகத்துடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து, பான்-இந்திய பரபரப்பான நடிகர் முரளி சர்மா ‘தி ஏஜென்ட் ஆதித்யா பாத்திரத்திலும், ‘தி பாய்பிரண்ட், சதீஷ் பாத்திரத்தில் சித்தார்த்த ஷங்கர், ‘தி பாஸ், ரேகா’ பாத்திரத்தில் ராதிகா சரத்குமார் அவர்களும், ‘புகைப்படக்காரர் அர்ஜுன்’ பாத்திரத்தில் அர்ஜுன் சிதம்பரம், ‘மேனேஜர் பப்லு’ பாத்திரத்தில் கிஷோர் குமார் , ‘பக்கத்து வீட்டுக்காரர் வினோத் பாத்திரத்தில் சம்கித் போஹ்ரா, ‘தி காப் – மன்சூர் அலி கான்’ பாத்திரத்தில் ஜான் விஜய், ‘அப்ரண்டிஸ் சந்தியா’ பாத்திரத்தில் ரித்திகா சிங் ஆகியோருடன் ‘துப்பறியும் விநாயக்’ பாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

கதாபாத்திரங்களைப் பற்றிய சரியான தெளிவை பார்வையாளர்களுக்கு அளிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் ‘கொலை’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இது அதன் உயர்தர காட்சிகள், கதாபாத்திரங்களின் புதுமையான அறிமுகம், ஒரு அற்புதமான இசையில் பழைய எவர்க்ரீன் பாடலான . ‘புதிய பறவை’யிலிருந்து ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடலோடு, நம்மை கட்டிப்போடும் அளவு ஆரவத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

தொழில்நுட்பக் குழு

எழுதி இயக்கியவர்: பாலாஜி K குமார்
பேனர்: Infiniti Film Ventures & Lotus Pictures
தயாரிப்பாளர்கள்: கமல் போஹ்ரா, G.தனஞ்சயன், பிரதீப் P, பங்கஜ் போஹ்ரா, டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, சித்தார்த்தா சங்கர் & RVS அசோக் குமார்
ஒளிப்பதிவு இயக்குனர்: சிவகுமார் விஜயன் இசையமைப்பாளர்: கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
எடிட்டர்: செல்வா R.K
கலை இயக்குனர்: K ஆறுசாமி
VFX மேற்பார்வையாளர்: ரமேஷ் ஆச்சார்யா ஒலி வடிவமைப்பு: விஜய் ரத்தினம் மறுபதிவு கலவை: A M ரஹ்மத்துல்லா
ஆடை வடிவமைப்பாளர்: ஷிமோனா ஸ்டாலின் ஸ்டண்ட் இயக்குனர்: மகேஷ் மேத்யூ
நடன இயக்குனர்கள்: சுரேஷ், மில்டன் ஒபதியா, சிராக் ரங்கா
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா-ரேகா (D’One)

Who killed Laila? Detective Vinayak & Apprentice Sandhya in ‘murder’ investigation

விஜய் டிவியில் பிரபலமான ரக்‌ஷன் சினிமாவில் ஹீரோவாகிறார்

விஜய் டிவியில் பிரபலமான ரக்‌ஷன் சினிமாவில் ஹீரோவாகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் பிரபலமான பல கலைஞர்கள் இன்று வெள்ளித்திரையில் உயர்ந்த இடத்தில் உள்ளனர்.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம் உள்ளிட்டோர் ஹீரோவாக உயர்ந்துள்ளனர். ரோபோ சங்கர், ஜெகன், புகழ் உள்ளிட்டோர் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் டிவி பிரபலமான ரக்சன் தற்போது நாயகனாக நடிக்கிறார்.. அந்த படத்தின் விவரம் வருமாறு..

பிலியா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்க,
இரா கோ யோகேந்திரன் இயக்கத்தில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படப்புகழ் நடிகர் ரக்‌ஷன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் தனது தனித்த, நகைச்சுவை நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்த நடிகர் ரக்‌ஷன், நாயகனாக புதிய படத்தில் அறிமுகமாகிறார்.

உணர்வுபூர்வமான காதல், நட்பு, உறவுகளை மையமாக கொண்டு, அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகிறது.

கலக்கப்போவது யாரு தீனா, விஷாகா திமான், பிராங்க் ஸ்டார் ராகுல், மற்றும் பலர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு, மலையாளத்தின் பிரபல இசையமைப்பாளர் சச்சின் வாரியர் இசையமைக்கிறார்.

தாமரை பாடல் வரிகளை எழுதுகிறார். கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்ய, ‘அர்ஜூன் ரெட்டி’ படப்புகழ் செஷாங் மாலி படத்தொகுப்பு பணிகளை செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

The shooting of actor Rakshan’s debut in the lead role is progressing at a brisk pace!

சூப்பர் ஹிட்டான 24 படத்தின் 2ம் பாகம் அப்டேட்: சூர்யா-விக்ரம் மீண்டும் கூட்டணி

சூப்பர் ஹிட்டான 24 படத்தின் 2ம் பாகம் அப்டேட்: சூர்யா-விக்ரம் மீண்டும் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூன்று வேடங்களில் சூர்யா முதன்முறையாக நடித்த படம் ’24’. இதில் சூர்யாவே நாயகனாகவும் வில்லனாகவும் நடித்திருந்தார்.

நாயகிகளாக சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்திருந்தனர்.

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை விக்ரம் குமார் இயக்க தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்திருந்தார் சூர்யா.

டைம் டிராவல் முறையில் உருவான இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக படத்தின் இயக்குநர் விக்ரம் குமார் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தற்போது தற்போது சூர்யா கைவசம்… வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல்.. சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜாவிற்காக ஒரு படம்.. பாலா இயக்கத்தில் வணங்கான்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் 2, ஹிந்தி ரீமேக்கான சூரரைப் போற்று ஆகிய படங்கள் கைவசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya-Vikram team up again for 24 the movie sequel

ஜன கண மன-க்காக கைகோர்ப்போம்.; சென்னையில் 75 பாடகர்கள் பங்கேற்கும் இசை விழா

ஜன கண மன-க்காக கைகோர்ப்போம்.; சென்னையில் 75 பாடகர்கள் பங்கேற்கும் இசை விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நம் சுதந்திர இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

இதனை முன்னிட்டு, சென்னையில் மிகப்பிரம்மாண்டமான இசை திருவிழா நடைபெற உள்ளது.

இசைத் திருவிழா ஆகஸ்ட் 14-ம் தேதி ஞாயிறன்று நடைபெற உள்ளது.

இதில் பிரபல பாடகர்கள் 75 பேர் பங்கேற்க உள்ளனர்.

ஜெ.ஆர்.7 ப்ராடக்ட்ஸ் எல்எல்பி நிறுவனப் பொதுமேலாளர் கே.ஆர்.ஜெ.கதிர், சாதகப் பாறைகள் இசைக்குழு உரிமையாளர் சங்கர்ராம், பாடகர்கள், ஸ்ரீநிவாஸ், சுஜாதா மோகன் ஆகியோர் தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் நேற்று இந்த நிகழ்ச்சி குறித்து கூறியதாவது..:

`ஜன கண மன-க்காக கைகோர்ப்போம்’ என்ற தலைப்பில், 75 பிரபலப் பாடகர்கள் பங்கேற்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

இதில் முன்னணி பாடகர்கள், மூத்த பின்னணிப் பாடகர்கள் பல்வேறு இசையமைப்பாளர்களின் இயக்குனர்களின் பாடல்களைப் பாட உள்ளனர்.

காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், 2-வது அமர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் நடைபெறும். தொடர்ந்து, இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

இந்த நிகழ்வில் கிடைக்கும் நிதி, யுனைடெட் பாடகர்கள் அறக்கட்டளைக்கு வழங்கப்படும்.

இந்த அறக்கட்டளையில் 7 பாடகர்கள் அறங்காவலர்களாக இருக்கிறோம். (இந்த அறக்கட்டளையானது கொரோனா காலத்தில் தொடங்கப்பட்டது என்றும் இதன் மூலம் பல இசை கலைஞர்களுக்கு உதவி செய்துள்ளோம் என்றும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.)

இவ்விழாவில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைக்கத் திட்டமிட்டுள்ளோம்.” எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த இசை விழா குறித்து கூடுதல் தகவல்களை அறிந்துக் கொள்ள.. jr7events.com என்ற இணையதளத்தை பார்க்கவும்..

A music festival in Chennai featuring 75 singers

சிவகார்த்திகேயனின் ஆசையை நிறைவேற்றும் கவுண்டமணி.; இது வேற லெவல் கூட்டணியாச்சே

சிவகார்த்திகேயனின் ஆசையை நிறைவேற்றும் கவுண்டமணி.; இது வேற லெவல் கூட்டணியாச்சே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த ‘டான்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்த படம் இளைஞர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்ப்பை பெற்றது

தற்போது தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் ‘ப்ரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.

இப்படம் 2022 தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீசாகிறது.

இதனையடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘எஸ்.கே 21’ படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

இதில் சாய் பல்லவி கதையின் நாயகியாக நடிக்கிறார். இது பற்றி அறிவிப்பை சில மாதங்களுக்கு முன் பட குழு அறிவித்து இருந்தது.

இதனையடுத்து ‘மண்டேலா’ பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘மாவீரன்’.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. தெலுங்கில் ‘மகாவீருடு’ என பெயர் வைத்துள்ளனர்.

அருண் விஸ்வா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் ‘மாவீரன்’ படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார் கவுண்டமணி.

தற்போது சிவகார்த்திகேயனுக்காக கவுண்டமணி மீண்டும் நடிக்க வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கவுண்டமணிவுடன் இணைந்து நடித்த ஆசையாக உள்ளது எனது விருப்பத்தை தெரிவித்து இருந்தார் சிவகார்த்திகேயன்.

தற்போது அவரது ஆசையை நிறைவேற்ற உள்ளார் கவுண்டமணி என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Legendary actor Goundamani fulfills Sivakarthikeyan’s wish

நல்லவனா நடிப்பதை விட வில்லனா நடிப்பதே பிடிக்கும்.; ‘நதி’ விழாவில் கரு.பழனியப்பன் கருத்து

நல்லவனா நடிப்பதை விட வில்லனா நடிப்பதே பிடிக்கும்.; ‘நதி’ விழாவில் கரு.பழனியப்பன் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mas Cinemas சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்து தயாரிக்க, இயக்குநர் K.தாமரைசெல்வன் இயக்கத்தில், காதலையும், நட்பையும் மையமாக கொண்டு, சமூக அவலங்களை சாடும், ஒரு கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “நதி”. அனைத்து பணிகளும் முடிந்து, ஜூலை 22 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வினில்..

கோடங்கி என்ற நடிகர் வடிவேல் முருகன் பேசியதாவது…

“இந்த படத்தின் மூலம் கரு பழனியப்பன் போன்ற ஒரு சகோதரர் எனக்கு கிடைத்துள்ளார். இயக்குநர் எந்தவித பதட்டமும் இல்லாமல், படத்தை எழுதி இயக்கியுள்ளார் தாமரை .

இந்த படம் எனக்கு ஒரு முக்கியமான அனுபவமாக இருந்தது. படம் நன்றாக வந்துள்ளது. பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள் நன்றி”

இயக்குநர் A வெங்கடேஷ் பேசியதாவது..

“AP International உடன் இந்த படத்தை இணைந்து தயாரிப்பாளர் வெளியிடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கயல் ஆனந்தி திரையில் குடும்ப பாங்கான பாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குநர் தாமரைசெல்வன் வேலை பார்க்கும் விதம் இயக்குநர் பாசில் உடைய பாணியில் இருக்கிறது. கோடங்கி இந்த படத்தில் முழுமையாக ஒரு நல்ல பாத்திரத்தில் வருகிறார், அவர் கதாபாத்திரம் அனைவரையும் ஈர்க்கும் படி இருக்கும். இப்படம் நிச்சயமாக வெற்றிப்படமாக அமையும்.”

நடிகை கயல் ஆனந்தி பேசியதாவது…

“இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து மதுரையில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதையை கேட்கும் போது, இந்த கதாபாத்திரத்தை நிச்சயம் செய்ய வேண்டும் என உறுதியாக இருந்தேன்.

சிறந்த கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றி”

இயக்குநர் நடிகர் கரு பழனியப்பன் பேசியதாவது…

“படத்தின் கதையை பற்றி கூறும் போது, வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் தயங்கியபடி கூறினார். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதில் தான் எனக்கு அதிக விருப்பம்.

வில்லனாக நடிக்கும் போது எப்படி வேண்டுமானாலும் பேச முடியும். நல்லவனாக நடிக்கும் போது அது முடியாது. அதனால் எனக்கு வில்லனாக நடிப்பது பிடிக்கும்.

இயக்குநர் குழப்பமே இல்லாமல், தெளிவாக படத்தை உருவாக்கி முடித்துள்ளார். சின்ன பட்ஜெட்டில் சிறந்த படைப்பை உருவாக்கியுள்ளார்.

இப்படத்தின் இண்டர்வல் நிச்சயமாக எல்லோரும் ஆச்சர்யப்படும் ஒன்றாக இருக்கும். ஒளிப்பதிவாளர் பிரபு அவர்களுடைய பணி படத்தின் கதையை விட்டு நகராமல் இருக்கும்.

இந்த படக்குழு இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்த படத்தை உடனே உருவாக்க வேண்டும். ஆனந்தி படத்தில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனந்தி உடைய கதாபாத்திரம் இந்த படத்திற்கு பிறகு பெரிய அளவில் பேசப்படும்.

இந்த படம் கண்டிப்பாக கவனிக்கப்படும், படத்தில் உள்ள அனைவரும் பாராட்டப்படுவார்கள். அனைவருக்கும் நன்றி”

நடிகர் நாயகன் தயாரிப்பாளர் சாம் ஜோன்ஸ் பேசியதாவது…

“நான் அறிமுகமாகும் படம் ஆழமாக இருக்க வேண்டும் என நினைத்து கொண்டு இருந்தேன். இயக்குநர் எனக்கு இந்த கதை சொன்ன போது, அது எனக்கு மிகவும் பிடித்தது.

ஒளிப்பதிவாளர் பிரபு சார் இந்த படத்திற்கு முதுகெலும்பாக இருந்தார், அவர் இப்படத்தில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். ஆனந்தி கதையை கேட்டவுடன் நடிக்க ஒத்துகொண்டார்.

கரு பழனியப்பன் சார் இந்த படத்திற்குள் வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தின் கதைக்காக முழு ஒத்துழைப்பையும் கொடுத்துள்ளனர். படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் MS பிரபு பேசியதாவது…

“இந்த கதையை விட இயக்குநர் கதையை சொன்ன விதம், என்னை ஈர்க்கும் வகையில் இருந்தது. இந்த படத்தை தயாரிக்க முன்வந்த சாம் ஜோன்ஸ்க்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இருவரும் இணைந்து பொறுமையுடன் ஒரு சிறப்பான படத்தை உருவாக்கியுள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

எடிட்டர் சுதர்ஷன் பேசியதாவது…

“இந்த படத்தை உருவாக்கும் போது ஒரு தெளிவு இயக்குநரிடம் இருந்தது. அவர் முழு அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள்”

இயக்குநர் தாமரை செல்வன் கூறியதாவது..

“இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. நடிகரும், தயாரிப்பாளருமான சாம் ஜோன்ஸும், நானும் இணைந்து சிறந்த படத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், பல கட்டங்களுக்கு பிறகு, இந்த திரைப்படத்தின் கதையை உருவாக்கினோம். படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாங்கள் தேடிய பயணமே, ஒரு புது அனுபவமாக இருந்தது.

படத்தின் கதாநாயகன் புதுமுகம் என்ற தயக்கம் எதுவும் இல்லாமல், ஆனந்தி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். கரு பழனியப்பன் கதையை புரிந்து கொண்டு இந்த படத்திற்குள் வந்தார். படத்தில் பணிபுரிந்த அனைத்து நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் முழு பங்களிப்பை கொடுத்துள்ளனர். படம் சிறப்பாக வந்துள்ளது. படம் பார்த்துவிட்டு உங்களது கருத்தை கூறுங்கள். “

நடிகர்கள்: சாம் ஜோன்ஸ், கயல் ஆனந்தி, கரு பழனியப்பன், முனிஷ்காந்த்

இயக்குநர்: K.தாமரைசெல்வன்
தயாரிப்பாளர்: சாம் ஜோன்ஸ்
ஒளிப்பதிவு: எம்.எஸ். பிரபு
இசையமைப்பாளர்: திபு நினன் தாமஸ் எடிட்டர்: ஆர்.சுதர்ஷன்
வசனங்கள்: லக்ஷ்மி சரவணகுமார்
கலை இயக்குனர்: விஜய் தென்னரசு
நடன இயக்குனர்: தினேஷ், விஜயா ராணி
மக்கள் தொடர்பு : சதீஷ் AIM

I prefer to act as a villain rather than as a good person.; Karu Palaniappan’s speech at Nadhi event

More Articles
Follows