தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கொலை’.
இந்த படம் ஜூலை 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்
ஒளிப்பதிவாளர் குமார் பேசியதாவது…
“நான் முதலில் வேலை பார்த்த படக்குழுவுடன் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் வேலை பார்க்கிறேன். படத்தில் உள்ள ஏழு தயாரிப்பாளர்களும் ஒற்றுமையுடன் ஒரே சீராக பணி புரிந்துள்ளனர்.
அதனை இயக்குநர் பாலாஜி குமார், நடிகர் விஜய் ஆண்டனி, மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக கொண்டு சென்றுள்ளனர். படத்தை பார்த்துவிட்டு உங்கள் ஆதரவு கொடுங்கள்”.
எடிட்டர் செல்வா பேசியதாவது…
“இந்தப் படத்தில் நான் உள்ளே வர காரணமாக இருந்த இசையமைப்பாளர் கிரீஷ் மற்றும் சவுண்ட் டிசைனர் விஜய் ரத்தினம் இவர்களுக்கு நன்றி. விஜய் ஆண்டனி சாரின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் பிடித்துள்ளது. உடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி”.
இயக்குநர் சசி பேசியதாவது…
“பாலாஜி ஒரு திறமையான இயக்குநர். டிரெய்லர் சிறப்பாக வந்துள்ளது. இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. விஜய் ஆண்டனியின் கரியரில் இது முக்கியமான படமாக அமையும்”.
இயக்குநர் விஜய் மில்டன் பேசியதாவது…
“இது என்னுடைய படம் போன்ற ஒரு உணர்வு உள்ளது. படத்தின் தொழில்நுட்ப விஷயங்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்”.
கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது…
“சிறப்பான சூழலாக இன்று அமைந்துள்ளது. நடிகர்கள், தொழில்நுட்பம் என அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. இது ‘கொலை’ அல்ல; கலை. அனைவருக்கும் வாழ்த்துகள்”. என்றார்.
சத்யஜோதி தியாகராஜன் பேசியதாவது…
“சஸ்பென்ஸ் திரில்லர் வகைகளில் இது வித்தியாசமானதாக இருக்கும். தமிழ் சினிமாவுக்கு இது முக்கியமானதொரு படமாக அமையும். வாழ்த்துகள்”.
தயாரிப்பாளர் முரளி பேசியதாவது…
”விஜய் ஆண்டனி எனக்கு சகோதரன் போன்றவர். மிகக் கடினமான உழைப்பாளி. அதனால்தான் இந்த வெற்றி அவருக்கு கை கூடியுள்ளது. அடுத்தடுத்த படங்களில் வெவ்வேறு ஜானரை முயற்சி செய்து வருகிறார். படத்திற்கு வாழ்த்துகள்”
அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசியதாவது…
“இது ஒரு தப்பான ‘கொலை’ அல்ல; சரியான ‘கொலை’. தயாரிப்பாளராக தனஞ்செயனுக்கு இந்தப் படம் பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டும். சின்ன கம்ப்ளையிண்ட் கூட இல்லாமல் படம் முடித்து கொடுத்தவர் இயக்குநர் பாலாஜி குமார். அவர் ஜெயிக்க வேண்டும்.
விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் பிரிக்க முடியாத சகாப்தமாக இருப்பார். இந்த ‘கொலை’யில் நியாயம் இருக்கும்”.
Kolai is not murder its art says Thanu