தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகுமாரின் மகனும் பிரபல நடிகருமான சூர்யா இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டதாக ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் பள்ளிவாசலில் சூர்யா இருக்கிறார்.
மேலும் அவருக்கு இஸ்லாமிய முறைப்படி சடங்குகள் செய்யப்படும் காட்சிகள் உள்ளது.
இதுகுறித்து சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…
சிங்கம் 2 படத்தின் சூட்டிங் சமயத்தில் சூர்யா கடப்பா பகுதிக்கு சென்றிருந்தார்.
அப்போது அவர் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்தார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அருகேயுள்ள பள்ளி வாசலுக்கு சூர்யா சென்றார்.
அப்போது அங்கு சூர்யாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வீடியோ காட்சிகள்தான் இணையத்தில் வெளியாகியுள்ளது.
எனவே சூர்யா மதம் மாறிவிட்டதாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
Whether Actor Suriya converted to Muslim religion viral video