தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புலி, இருமுகன் ஆகிய படங்களை தயாரித்த தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் சாமி 2 படத்தினை தயாரிக்கவிருக்கிறது.
இப்படத்தில் விக்ரமுடன் திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். ஜுலை மாதத்தில் இதன் முதற்கட்ட படபிடிப்பு தொடங்கவிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு இசையமைத்திருக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத். அந்த படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வெற்றிப் பெற்றிருந்தது.
அதே போல் விக்ரம் நடித்த கந்தசாமி படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.
தற்போது மீண்டும் சாமி 2 வில் விக்ரம்+ஹரி+தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Devi Sri Prasad score music for Vikram Trisha Keerthy Suresh starrer Saamy 2