தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யாவின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் சிங்கம். இப்படத்தை இயக்கியவர் ஹரி.
தற்போது பல பார்ட் 2, பார்ட் 3 படங்கள் வந்தாலும் இந்த படம் மட்டுமே பழைய கதையுடன் தொடர்ச்சியுடன் இருந்து வருகிறது. அதே நடிகர்கள் தொடர்ந்து சிங்கம்2, சிங்கம் 3 படங்களில் வருகின்றனர்.
இதுவரை 3 பாகங்கள் வந்துள்ள நிலையில் 4வது பாகம் வெளிவருமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் கைதி பட பிரஸ்மீட் ஹைதராபாத்தில் கார்த்தி கலந்துக் கொண்ட போது ஹரி இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.
எனவே இது சிங்கம் 4-ம் பாகமாக இருக்குமோ? என்ற யூகங்கள் எழுந்துள்ளன.
தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.
Karthi confirms Suriyas next is with director Hari