கமல்ஹாசன் பிறந்தநாளில் விஸ்வரூபம் 2 பட டிரைலர்

கமல்ஹாசன் பிறந்தநாளில் விஸ்வரூபம் 2 பட டிரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishwaroopam 2 trailer release on Kamal Birthdayகமல்ஹாசன் இயக்கி, தயாரித்து நடித்த படம் `விஸ்வரூபம்’.

இவருடன் பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடித்த இப்படம் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியானது.

இப்படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாவது பாகமும் முன்பே தயாராகி வந்தது.

ஆனால் இடையில் சில எழுந்த சிக்கல்களால் `விஸ்வரூபம் 2′ படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது.

இதனிடையில் `உத்தம வில்லன்’, `பாபநாசம்’, `தூங்காவனம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் கமல்ஹாசன்.

அதன்பின்னர் சபாஷ் நாயுடு படத்தை இயக்கி நடித்தார் கமல்.

இதனைத் தொடர்ந்து `விஸ்வரூபம் 2′ படத்தின் மீதமுள்ள காட்சிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவித்து அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7-ஆம் தேதி விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் கமல் ஒரு பாடலை பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

வருகிற டிசம்பர் மாதம் `விஸ்வரூபம்-2′ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vishwaroopam 2 trailer release on Kamal Birthday

சூர்யா-கார்த்தி கூட்டணியில் இணையும் சாயிஷா..?

சூர்யா-கார்த்தி கூட்டணியில் இணையும் சாயிஷா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sayyesha teams up with Karthi for Suriya production movie

வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியானது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் ரகுல் பிரித்தி சிங் நாயகியாக நடித்திருந்தார்.

இப்படம் வருகிற நவம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனையடுத்து விரைவில் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் கார்த்தி.

இப்படத்தை சூர்யா தயாரிக்கவிருக்கிறார் என்பதையும் பார்த்தோம்.

இந்நிலையில் இதில் நாயகியாக சாயிஷா நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இவர் பிரபுதேவா இயக்கத்தில் பாதியிலேயே கைவிடப்பட்ட ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்ற படத்திலும் நாயகியாக நடிக்கவிருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Sayyesha teams up with Karthi for Suriya production movie

karthi sayyesha

ஸ்பைடர் தோல்வியால் விஜய்-62 படத்தில் முருகதாஸ் செய்யும் மாற்றம்

ஸ்பைடர் தோல்வியால் விஜய்-62 படத்தில் முருகதாஸ் செய்யும் மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay murugadossஒரு நடிகரின் படத்திற்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்குமோ? அதுபோன்ற எதிர்பார்ப்பை உருவாக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஏஆர். முருகதாஸ்.

இவர் இயக்கிய ஸ்பைடர் படம் அண்மையில் வெளியானது.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, மகேஷ்பாபு, ரகுல் பிரித்தி சிங் ஜோடியாக நடித்திருந்தனர்.

ஆனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதனையடுத்து விஜய் நடிக்கவுள்ள அவரின் 62 படத்தை இயக்கவிருக்கிறார் ஏஆர். முருகதாஸ்.

இதில் நாயகியாக ரகுல் பிரித்தி சிங் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் ஸ்பைடர் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதால், அப்பட இசையமைப்பாளர் மற்றும் நாயகியை விஜய் 62 படத்தில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறாராம் முருகதாஸ்.

மேலும், பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்கா, தோனி படத்தில் சுசாந்த் சிங் ராஜ்புட் ஜோடியாக, சாக்‌ஷியாக நடித்த கியாரா அத்வானி உள்ளிட்ட நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

AR Murugadoss directorial Vijay 62 movie heroines updates

vijay 62 heroines

அரசுப் பணியாளர்களை கேலி செய்யாமல் உதவுங்கள்… கமல்

அரசுப் பணியாளர்களை கேலி செய்யாமல் உதவுங்கள்… கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal request peoples to support Govt Staffs during Chennai rain rescueசென்னை உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மழையால் தேங்கி நிற்கும் பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மட்டுமின்றி, காவல்துறை, தீயணைப்பு வீரர்களும் இணைந்து உதவிகளை செய்து வருகிறார்கள்.

வேப்பேரி இன்ஸ்பெக்டர் வீரக்குமார், சாக்கடை அடைப்பை வெறும் கையால் அகற்றிய புகைப்படம் வைரலாக வருகிறது

இந்நிலையில் இதுபோன்ற ஒரு படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன்…

தங்கள் பணியையும் தாண்டிச் செல்வோருக்கு நன்றி. சீருடையோடும், இல்லாமலும் கூட நல்ல குடிமக்கள் மிளிருவார்கள். மேலும் பல தமிழர்களும் இதுபோல வேலையையும் தாண்டிய பணிகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு ஒரு டிவிட்டில் கமல் கூறியுள்ளார்.

Thanks for going beyond the call of your duty. Good citizens shine with or without uniform. More similar Thamizhan’s should report to duty pic.twitter.com/54StA3CEq0 — Kamal Haasan (@ikamalhaasan) November 4, 2017

மேலும் மற்றொரு பதிவில் “இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை” என தெரிவித்துள்ளார்.

Kamal request peoples to support Govt Staffs during Chennai rain rescue

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 38m38 minutes ago
இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை.

 

15 வருட நிறைவை கொண்டாடும் விஜய்-அஜித்-சிம்பு ரசிகர்கள்

15 வருட நிறைவை கொண்டாடும் விஜய்-அஜித்-சிம்பு ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Ajith Simbu fans celebrating 15 years of hit moviesமுன்பெல்லாம் சினிமா ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவார்கள். அதன்பின்னர் படங்கள் ரிலீசாகும் அன்று திருவிழா போல் கொண்டாடுவார்கள்.

ஆனால் கடந்த 7 வருடங்களாக ஒரு படம் ரிலீசான நாளை முன்னிட்டு ஒரு வருடம், இரண்டு வருடம் என கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

எந்திரன் படம் வெளியான நாளை முன்னிட்டு முதலாண்டு விழா என ரஜினி ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.

தற்போது இது எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று அஜித் நடித்த வில்லன் திரைப்படத்தின் 15 வருட நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

இவர்களைப் போல் விஜய் நடித்த பகவதி படத்தின் 15 வருட நாளையும் கொண்டாடி வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து சிம்பு நடித்த காதல் அழிவதில்லை என்ற படத்தின் 15 வருட நாளையும் ரசிகர்கள் ஹேஷ்டேக் கிரியேட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இது சிம்பு ஹீரோவாக அறிமுகமான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Ajith Simbu fans celebrating 15 years of hit movies

கமலை கொல்லனும்; அவர் படத்தை பார்க்கக் கூடாது… இந்து மகாசபா

கமலை கொல்லனும்; அவர் படத்தை பார்க்கக் கூடாது… இந்து மகாசபா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hindu-mahasabhaபிரபல தமிழ் வார இதழில் கமல்ஹாசன் எழுதி வரும் தொடர் கட்டுரையில், இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அந்தக் கட்டுரையில், முன்பெல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர்.

ஆனால், இந்த பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டடனர் என்று கூறி உள்ளார்.

இந்து வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாகவும், எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது என்றும் கமல்ஹாசன் அந்தக் கட்டுரையில் கூறி இருந்தார்.

அவரின் இந்த கருத்துக்கு பா.ஜனதா மற்றும் சிவசேனா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து இந்து மகா சபா அமைப்பின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா கூறியதாவது…

இந்துக்களின் மன உணர்வை காயப்படுத்துபவர்கள் இந்த மண்ணில் வாழக்கூடாது.

கமலை சுட்டுக் கொல்லனும். அப்போதுதான் மற்றவர்களுக்கு இது பாடமாக அமையும்.

கமல் மற்றும் அவரது குடும்பத்தினர் நடிக்கும் படங்களை இந்துக்கள் பார்க்கக் கூடாது. அந்த படங்களை புறக்கணிக்க வேண்டும்.

இந்து மத உணர்வுகளை புண்படுத்தியவர்களுக்கு மன்னிப்பே கிடையாது” என கூறியுள்ளார்.

Kamal should be shot dead for his Hindu Terror remark says Hindu Mahasabha

More Articles
Follows