விஜய்யின் மெர்சல் வசூலை தடுக்கும் வில்லன் விஷால்..?

விஜய்யின் மெர்சல் வசூலை தடுக்கும் வில்லன் விஷால்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and vishalஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் இந்தாண்டு 2017 தீபாவளிக்கு ரிலீஸாகிறது.

விஜய்க்கு கேரளாவிலும் நல்ல மார்கெட் உள்ளதால், அங்கும் நல்ல லாபத்தை எதிர் நோக்கியுள்ளனர் படக்குழுவினர்.

இந்நிலையில் மோகன்லால்-விஷால் இணைந்து நடித்துள்ள வில்லன் படமும் தீபாவளிக்கு ரிலீஸாகிறதாம்.

கேரளாவின் சூப்பர்ஸ்டார் மோகன்லால் என்பதால் அங்கு மெர்சலுக்கு குறைவான தியேட்டர்களே கிடைக்கும் என கூறப்படுகிறது.

இதனால் மெர்சல் வசூலுக்கு வில்லன் படத்தால் ஆபத்து வரலாம்.

சிவன் இயக்கும் விஜய்சேதுபதி படத்திற்கு இப்படியொரு தலைப்பா?

சிவன் இயக்கும் விஜய்சேதுபதி படத்திற்கு இப்படியொரு தலைப்பா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupthiவருடத்தில் 12 மாதங்கள் என்றால், அதில் 2 மாதத்திற்கு ஒரு படம் ரிலீஸை கொடுக்கும் அளவுக்கு படங்களில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

இவர் நடித்துள்ள கருப்பன் படம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தற்போது 96, ஜீங்கா, சூப்பர் டீலக்ஸ், ஒருநாள் பார்த்து சொல்றேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அடுத்து எடக்கு என்ற பெயரிடப்பட்ட புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

சிவன் என்பவர் இயக்கும் இப்படத்தை நிமோ புரொடக்ஷசன்ஸ் சார்பாக கே.பாலு தயாரிக்கிறார்.

முருகதாஸின் ஒன்லைன் ஸ்டோரிக்கு ஓகே சொன்ன ரஜினி

முருகதாஸின் ஒன்லைன் ஸ்டோரிக்கு ஓகே சொன்ன ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and AR Murugadossரஜினிகாந்த் நடிப்பில் இரு படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

ஷங்கர் இயக்கியுள்ள 2.ஓ படம் அடுத்த 2018 ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ரஞ்சித் இயக்கி வரும் காலா படம் 2018 ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினியை சந்தித்து இயக்குனர் ஏஆர். முருகதாஸ் ஒரு கதையின் ஒன்லைன் ஸ்டோரியை சொன்னாராம்.

அதற்கு ஓகே சொன்ன ரஜினி முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்து கொண்டு வரச் சொன்னாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனவே சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய்யின் 62 படத்தை முடித்துவிட்டு ரஜினி படத்தை முருகதாஸ் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லிங்குசாமி-விஷால் கூட்டணியின் சண்டகோழி2 தொடங்கியது

லிங்குசாமி-விஷால் கூட்டணியின் சண்டகோழி2 தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal Keerthy Suresh starring Sandakozhi2 shooting starts todayலிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சண்டகோழி.

தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு இதன் 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று பாடல்காட்சியுடன் ஆரம்பமானது.

இப்படத்துக்காக சென்னை பின்னி மில்லில் மிகப்பெரிய அளவில் மதுரை திருவிழா செட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில்,விஷால், கீர்த்திசுரேஷ் ஜோடியாக நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவை சக்தி கவனிக்கிறார்.

விஷால் தயாரித்து நடிக்கும் இப்படம் அவரின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal Keerthy Suresh starring Sandakozhi2 shooting starts today

நயன்தாரா-ஜோதிகா வரிசையில் இணையும் வரலட்சுமி

நயன்தாரா-ஜோதிகா வரிசையில் இணையும் வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mysskins associate Priyadhaarshini going to direct Varalaxmiஅண்மை காலமாக நயன்தாரா, ஜோதிகா ஆகியோர் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகளில் நடித்து வருகின்றனர்.

தற்போது இவர்களின் வரிசையில் வரலட்சுமி இணைகிறார்.

இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் பிரியதர்ஷினி இயக்கும் புதிய படத்தில் வரலட்சுமி நடிக்கிறார்.

இது பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்படும் ஆக்சன் த்ரில்லர் கதை என கூறப்படுகிறது.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

Mysskins associate Priyadhaarshini going to direct Varalaxmi

ரஜினியுடன் நாய்; விஜய்யுடன் காளை; வைரலாகும் புதிய படங்கள்

ரஜினியுடன் நாய்; விஜய்யுடன் காளை; வைரலாகும் புதிய படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal familyசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ரஞ்சித் இயக்கும் காலா படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் என்பதை முன்பே பார்த்தோம்.

தற்போது அப்படத்தில் இடம்பெற்றுள்ள ரஜினியின் குடும்ப போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் ரஜினியுடன் ஈஸ்வரிராவ் மற்றும் அவரின் மகன், மகள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகளுடன் ஒரு நாய் ஒன்றும் உள்ளது.

இந்நிலையில் நேற்று விஜய்யின் மெர்சல் பட டீசர் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் விஜய் உடன் நித்யாமேனன் அவர்களது குழந்தை மற்றும் ஒரு ஜல்லிக்கட்டு காளை ஒன்றும் உள்ளது.

இந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kaala Rajini Family and Mersal Vijay family photos goes viral

kaala family

More Articles
Follows