அஜித்தின் ரீமேக்கில் ஜூனியர் என்.டி.ஆர்… டைரக்டர் யார்?

அஜித்தின் ரீமேக்கில் ஜூனியர் என்.டி.ஆர்… டைரக்டர் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith and junior NTRகே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த வில்லன் மற்றும் வரலாறு ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிப் பெற்றன.

இதில் அஜித் மூன்று வேடங்களில் நடித்த வரலாறு படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியானது.

இந்நிலையில் கிட்டதட்ட 11 வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க, இப்படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்படத்தை தெலுங்கிலும் கே.எஸ்.ரவிகுமாரே இயக்குவாரா? என்ற தகவல் வெளியாகவில்லை.

பிப் 26 முதல் மார்ச் 3 வரை ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

பிப் 26 முதல் மார்ச் 3 வரை ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Baashaசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பது நாம் அறிந்ததே.

எனவே அவரது படங்கள் ரிலீஸ் முதல் பிறந்தநாள் வரை ஒன்றையும் விடாது அனைத்தையும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் வருகிற பிப்ரவரி 26ஆம் தேதி ரஜினிகாந்த்-லதா தம்பதியரின் திருமண நாள் வருகிறது.

எனவே இதனை கொண்டாட காமன் புரபைல் பிக்சரை (Common Profile Picture) டிசைன் செய்து வருகின்றனர்.

மேலும் அடுத்த மாதம் மார்ச் 3ஆம் தேதி பாட்ஷா படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் வெளியாகிறது.

எனவே இதனையும் கொண்டாடி அசத்தவிருக்கிறார்களாம்.

ஆக, ஒரு வாரத்திற்கு இணையத்தை ரஜினி ரசிகர்கள் அதிர வைக்க போகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

Rajini fans going to celebrate Thalaivar wedding Day and Baasha re-release

அழகான வாழ்க்கை தந்த அனைவருக்கும் கார்த்தி நன்றி

அழகான வாழ்க்கை தந்த அனைவருக்கும் கார்த்தி நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthiசிவகுமாரின் இளைய மகன், சூர்யாவின் தம்பி என்ற அடையாளம் இருந்தாலும், ஆர்ப்பாடமில்லாமல் பருத்தி வீரனில் அறிமுகமானார் கார்த்தி.

இதனையடுத்து நான் மகான் அல்ல, பையா என அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகராகியுள்ளார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மெட்ராஸ், தோழா, காஷ்மோரா ஆகிய படங்கள் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளது.

இந்நிலையில் இன்று பிப்ரவரி 23ஆம் தேதியுடன் இவர் திரைக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனையொட்டி தனக்கு அழகான வாழ்க்கையை தந்த குடும்பம், தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

Karthi celebrates 10 years in Cinema Industry

karthi tnks

பார்வையிழந்த பெண்மணிக்கு வாய்ப்பு கொடுத்த ஜிவி பிரகாஷ்

பார்வையிழந்த பெண்மணிக்கு வாய்ப்பு கொடுத்த ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakashஇசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரட்டை குதிரைகளில் வெற்றி பவனி வருபவர் ஜிவி. பிரகாஷ்.

இவரது நடிப்பில் ரவி அரசு இயக்கும் ஐங்கரன் படத்தின் சூட்டிங் அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சரத்குமார் மற்றும் ஜிவி. பிரகாஷ் நடிக்கும் அடங்காதே படத்தில் ஒரு பின்னணி பாடகி ஜோதியை அறிமுகப்படுத்துகிறார் ஜி.வி. பிரகாஷ்.

இந்த பாடகி பார்வை குறைப்பாடு உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

G.V.Prakash KumarVerified account‏@gvprakash
Yes this wonderful singing talent Jyothi will be making her debut in my next musical album #adangathey

GV Prakash introduce play back singer Jothi in his Adangathey movie

தயாரிப்பாளர் சங்கத்துக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

தயாரிப்பாளர் சங்கத்துக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal teamதயாரிப்பாளர் சங்கத்தினுடைய தேர்தல் ஏப்ரல் 2 – இரண்டாம் தேதி உட்லண்ட்ஸ் ( Woodlands ) திரையரங்கில் நடைபெறவுள்ளது

ஓய்வு பெற்ற நீதிபதியும் தமிழ்த்திரைப்பட தேர்தல் அதிகாரியுமான திரு . ராஜேக்ஷ்வரன் அவர்கள் இன்று காலை 11மணி அளவில் filmchamber அலுவலகத்தில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் தேர்தல் சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் 27.02.2017 அன்று வரை உறுப்பினர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படுமாயின் புகார் கொடுக்கலாம்.

28.02.2017 -ல் புகார்களுக்கு பதில் கிடைக்கும் என்று கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாபஸ் பெற கடைசி நாள் 01.03.2017.

ஏப்ரல் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை Wood lands திரையரங்கில் தேர்தல் நடைபெறும் அன்று இரவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இக்கூட்டத்தில் மூத்த தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விஷால் அணி சார்பாக பிரகாஷ் ராஜ் ,ஆர்.பார்த்திபன், K.E.ஞானவேல்ராஜா, பாண்டிராஜ் ,SR.பிரபு ,AL உதயா மற்றும் உடன் ராதாகிருஷ்ணன், கேயார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தன்னுடைய கதாபாத்திரம் கன கச்சிதமாக உருவாக, தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொண்டார் அருண் விஜய் – இயக்குநர் அறிவழகன்

தன்னுடைய கதாபாத்திரம் கன கச்சிதமாக உருவாக, தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொண்டார் அருண் விஜய் – இயக்குநர் அறிவழகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arun Vijay and Director Arivazhaganஅருண் விஜய் – மஹிமா நம்பியார் நடிப்பில், இயக்குநர் அறிவழகன் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் 23’. ‘ரெதான் – தி சினிமா பீப்பல்’ நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்து, மெடிக்கல் – கிரைம் – திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் ‘குற்றம் 23’ திரைப்படத்தை, வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி அன்று ‘அக்கராஸ் பிலிம்ஸ்’ நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

“ஒரு தரமான மெடிக்கல் – கிரைம் – திரில்லர் திரைப்படத்தை நான் உருவாக்கி இருக்கின்றேன் என்று முழுமையாக நம்புகின்றேன். இந்த படத்தில் ஒரு வலுவான கருத்தையும் நான் உள்ளடக்கி இருக்கின்றேன்.

‘என்னை அறிந்தால்’ படத்தில் சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட அருண் விஜயை , இந்த ‘குற்றம் 23’ படம் மூலம் சட்டத்தை பாதுகாக்கும் ஒரு காவல் துறை அதிகாரியாக ரசிகர்கள் காண்பார்கள். தன்னுடைய கதாபாத்திரம் கன கச்சிதமாக உருவாக, தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு நடிகர் அருண் விஜய்.

முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய், அவருடைய வேடம் மிக சரியாக அமைய பல முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். ஒரு புதிய நட்சத்திர நாயகனின் உதயத்தை, ரசிகர்கள் விரைவில் உறுதி செய்வார்கள்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் அறிவழகன்.⁠⁠⁠⁠

More Articles
Follows