பீர் பாட்டிலுடன் *அயோக்யா*; ராமதாஸ் புகாருக்கு விஷால் சூப்பர் பதிலடி

பீர் பாட்டிலுடன் *அயோக்யா*; ராமதாஸ் புகாருக்கு விஷால் சூப்பர் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PMK Ramadoss condemns Vishal and Ayogya First look posterசண்டக்கோழி2 படத்தை அடுத்து விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயோக்யா. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியானது.

இந்த போஸ்டரில் விஷால் போலீஸ் ஜீப்பில் சாய்ந்துக் கொண்டு பீர் பாட்டிலை கையில் வைத்திருப்பார்.

இதுதான் உங்கள் சமூக பொறுப்பா? என கடுமையாக பாமக நிறுவனம் ராமதாஸ் விமர்சித்து இருந்தார்.

தற்போது இந்த கண்டனத்திற்கு விஷால் பதிலடி கொடுத்துள்ளார்.

‘நான் பீர் பாட்டிலை கையில் வைத்திருந்தேனே தவிர குடிப்பதுபோல் செய்யவில்லை. கையில் வைத்திருப்பது குடிப்பதாக ஆகாது.

இந்த படத்தில் நான் போலீசாக நடிக்கிறேன். ஒரு குற்ற விசாரணையில் அந்த பாட்டில் ஒரு தடயமாக கிடைக்கிறது. அதை வைத்து நான் சண்டையிடுவதாக காட்சி அமைந்துள்ளது.

அந்த காட்சியைத்தான் போஸ்டரில் டிசைன் செய்துள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளர்.

வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் விஷாலுடன் ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

Vishal clarifies Ayogya first look Beer bottle issue

பாகுபலியை முறியடிக்க தமிழருக்கு பெருமை சேர்க்க 2.0 திட்டம்

பாகுபலியை முறியடிக்க தமிழருக்கு பெருமை சேர்க்க 2.0 திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2pointO movie plans to break Baahubali2 record on first dayஇந்திய சினிமாவையே அதிர வைக்கும் அளவுக்கு மிகப்பிரம்மாண்டமான படங்கள் அண்மைக்காலமாக தயாராகி வருகிறது.

இதுவரை இல்லாத செலவில் ரூ. 600 கோடியில் 2.0 படத்தை லைகா தயாரித்துள்ளது.

ஷங்கர் இயக்கியுள்ள இதில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அடுத்த வாரம் நவம்பர் 29ல் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

இந்தியாவில் மட்டும் 6700 தியேட்டர்களில் 32,500 காட்சிகளாக 2.0 படம் திரையிடப்பட உள்ளதாம்.

வெளிநாடுகளில் 4,000 தியேட்டர்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஆக மொத்தம் 10,000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இந்திய சினிமாவை பொறுத்தவரை பாகுபலி 2 படம்தான் அதிக தியேட்டர்களிலும், அதிக காட்சிகளிலும் திரையிடப்பட்ட படமாக இருந்தது.

அந்தப் படம் 6500 தியேட்டர்கள், 31,000 காட்சிகளாக திரையிடப்பட்டது. அந்த சாதனையை 2.0 படம் முறியடிக்கும் என கூறப்படுகிறது.

மேலும் முதல் நாள் வசூலில் பாகுபலி 2 சாதனையை முறியடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டும் நடைபெற்றால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமையாக இது கருதப்படும்.

2pointO movie plans to break Baahubali2 record on first day

8 நிமிடத்தில் சிங்கிள் டேக்.!; சூர்யாவை வியக்க வைத்த விஜய்சேதுபதி

8 நிமிடத்தில் சிங்கிள் டேக்.!; சூர்யாவை வியக்க வைத்த விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya waiting for Vijay Sethupathis Seethakaathi 8 mins Single shot sceneநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கியவர் பாலாஜி தரணிதரன் தற்போது இயக்கியுள்ள படம் சீதக்காதி.

இதிலும் விஜய்சேதுபதிதான் நாயகனாக நடித்துள்ளார்.

பேஷன் ஸ்டூடீயோஸ் சுதன் தயாரித்துள்ள இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது.

எனவே இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர். 3.09 நிமிடம் ஓடக் கூடிய இந்த ட்ரைலர் இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் சீதக்காதி படத்தில் 8 நிமிடம் உள்ள ஒரு காட்சியை ஒரே சிங்கிள் டேக்கில் நடித்துள்ளார் விஜய்சேதுபதி.

இந்த தகவலை அறிந்த அறிந்த சூர்யா தன் ட்விட்டரில் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

மேலும் சீதக்காதி படத்தை காண தான் ஆவலாக இருப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார் சூர்யா.

Suriya waiting for Vijay Sethupathis Seethakaathi 8 mins Single shot scene

Suriya Sivakumar‏Verified account @Suriya_offl
Suriya Sivakumar Retweeted VijaySethupathi
All the very best @VijaySethuOffl Heard there is a 8 min single shot scene..! #Seethakathi waiting for it!

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து உதயா-RK. சுரேஷ் விலக இதான் காரணம்?

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து உதயா-RK. சுரேஷ் விலக இதான் காரணம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishals friends RK Suresh and Udhaya quit Producer Councilதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து உதயா, ஆர்.கே.சுரேஷ் இருவரும் விலகியுள்ளனர்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் நெருங்கிய நண்பர்களாக இவர்கள் இருந்தனர்.

விஷாலின் நண்பர்கள் இருவரும் திடீரென பதவி விலகியது திரையுலக வட்டாரங்களில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியன்று ஆர்.கே.சுரேஷ் நடித்த ‘பில்லா பாண்டி’ படம் வெளியானது.

16ஆம் தேதி உதயா தயாரித்து நடித்த ‘உத்தரவு மகாராஜா’ படம் வெளியானது.

இந்த 2 படங்களுக்கும் சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை எனவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உதவவில்லை எனவும் கூறப்பட்டது.

மேலும் படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இது குறித்து விசாரிக்கையில்…

மேலும் தியேட்டர்களைப் பெற்றுத் தருவது தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை கிடையாது.

இருந்தபோதிலும் சங்கத்தின் சார்பாக தியேட்டர்காரர்களிடம் பேசி நூற்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்களை இருவருக்கும் பெற்று கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இதுகுறித்து ஆர்.கே. சுரேஷ் கூறியுள்ளதாவது…

விஷால் தேர்தலில் நிற்கும் போதே சிறு படங்களுக்கு நன்மை செய்யவே தேர்தலில் போட்டியிடுவதாக வாக்குறுதி கொடுத்தார்.

இப்போது தமிழ் சினிமாவில் ரிலீஸ் சிக்கல் நிலவுகிறது. படங்கள் வெளியிடுவதில் தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை.

அவர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.

விஷாலின் செயல்பாடுகள் சரியில்லை. எனக்கும் விஷாலுக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. இன்னும் நண்பர்கள் தான்.” என ஆர்கே சுரேஷ் கூறியுள்ளார்.

இது குறித்து உதயா பேசுகையில்,

“விஷாலின் நடவடிக்கைகளில் எங்களுக்கு உடன்பாடில்லை.

மைக்கை பிடித்துக் கொண்டு நன்றாகப் பேசுகிறார். ஆனால் செயலில் எதுவுமில்லை.

பட வெளியீட்டை கண்காணிக்க என்று ஒரு குழு இருக்கிறது. அதில் சிறு, மத்திய, பெரிய பட்ஜெட் படங்களுக்கென தனித்தனி வெளியீடு தேதிகள் தரப்பட்டன.

16-ஆம் தேதி உத்தரவு மஹாராஜா, காற்றின் மொழி, செய், சித்திரம் பேசுதடி 2 ஆகிய படங்களுக்கு ஒதுக்கப்பட்டது. நாங்கள் விளம்பரங்கள் செய்த பின் திடீரென திமிரு புடிச்சவன் வெளியீட்டை அறிவிக்கிறார்கள். அவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை.

விஷாலிடம் தனிப்பட்ட முறையில் கேட்டபோது அந்தப் படம் வராது வராது என்றே கடைசி நிமிடம் வரை சொல்லி வந்தார். ஆனால் அந்தப் படம் வெளியானது.

ஏற்கெனவே சர்கார் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து திமிரு புடிச்சவன், அடுத்து காற்றின் மொழி, இதற்கு பிறகு தான் உத்தரவு மஹாராஜாவுக்கு ரசிகர்களின் கவனம் திரும்பும்.

படத்துக்கான விமர்சனங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் ரசிகர்கள் படத்தைப் பார்க்க நினைத்தால் படம் அரங்கில் இல்லை” என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் உதயா.

Vishals friends RK Suresh and Udhaya quit Producer Council

தொழில்நுட்ப வல்லுனர்கள் பயிற்சியுடன் பவர்புல் இந்தியனாக கமல்.

தொழில்நுட்ப வல்லுனர்கள் பயிற்சியுடன் பவர்புல் இந்தியனாக கமல்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Deadly combo Kamal and Shankars Indian2 news updatesகிட்டதட்ட 22 வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் இந்தியன்.

அதில் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக தன் மகனையே கொலை செய்வார் தந்தை கமல்.

அந்தப்படத்தில் இந்தியாவை உலக அரங்கில் மதிப்பிழக்கக் செய்துக் கொண்டிருக்கும் ஊழல் லஞ்சத்தை கடுமையாக சாடியிருந்தார் டைரக்டர் ஷங்கர்.

தற்போது லஞ்சம் இல்லாத துறையே இல்லை என்னுமளவுக்கு இந்தியா மோசமான வளர்ச்சியை அடைந்துள்ளது.

எனவே இந்தியன் தாத்தா கமலை இன்னும் பவர்புல்லாக காட்ட முடிவெடுத்துள்ளாராம் ஷங்கர்.

கமலும் அதற்கான உடற்பயிற்சிகளிலும் ஈடுப்பட்டு வருகிறார்.

மேலும் இதற்காக ஹாலிவுட்டின் சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களை சென்னைக்கு வரவழைத்துள்ளார் ஷங்கர் என தெரிய வந்துள்ளது.

அண்மையில் இப்படத்திற்காக டெஸ்ட் ஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Deadly combo Kamal and Shankars Indian2 news updates

தளபதி-சிவாஜி வரிசையில் ரிலீஸிலேயே சாதனை படைக்கும் 2.0

தளபதி-சிவாஜி வரிசையில் ரிலீஸிலேயே சாதனை படைக்கும் 2.0

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanths 2PointO movie making records in release itselfஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ திரைப்படம் வருகிற 29-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

இவை தவிர உலகின் பல மொழிகளில் ‘டப்பிங்’ செய்தும் வெளியிடுகின்றனர்.

இந்திய திரையுலகில் முதல் முறையாக 3டி கேமராவில் முழு படத்தையும் எடுத்துள்ளனர்.

மேலும் முதன் முறையாக 4டி ஒலி தொழில்நுட்பத்தில் இதன் ஒலி அமைப்பை உருவாக்கியுள்ளார் சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ரூ. 600 கோடியில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதற்கு முன்பு எந்தவொரு தமிழ் படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானது கிடையாதாம்.

கடந்த 1991-ல் வெளியான ரஜினியின் தளபதி படம் வெளிநாடுகளில் முதல் தடவையாக 100 தியேட்டர்களில் ரிலீசானது.

அதன்பின்னர் மீண்டும் ரஜினி நடித்த படமே அந்த சாதனையை முறியடித்தது.

அதாவது 2007-ல் வெளியான சிவாஜி படம் 1,000 தியேட்டர்களில் வெளியானது சாதனையாக கருதப்பட்டது.

தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு 10,000 தியேட்டர்களில் 2.0 படம் வெளியாவது சாதனை என்கின்றனர்.

ஹாலிவுட் படங்களை போல் ஐமேக்ஸ் தியேட்டர்களில் 2.0 படத்தை திரையிட ஒப்பந்தம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanths 2PointO movie making records in release itself

More Articles
Follows