தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஷால் நடித்துள்ள “அயோக்யா” பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.
பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷால் போலீஸ் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு, கையில் பீர் பாட்டிலை வைத்திருக்கிறார்.
வெங்கட் மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.
பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த போஸ்டரை நீக்கச் சொல்லியும் வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது…
பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச்செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்!
‘அயோக்யா’ திரைப்பட விளம்பரத்தில் கதாநாயகர் விஷால் பீர் புட்டியுடன் தோன்றுகிறார். நடிகர் சங்க பொதுச்செயலர் என்ற முறையில் புகைக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என கடிதம் எழுதினேன். இப்போது புகையை தாண்டி பீர் பாட்டிலுடன் நடிக்கிறார். என்னவொரு சமூகப் பொறுப்பு!
என கிண்டலடிக்கும் வகையில் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
PMK Ramadoss condemns Vishal and Ayogya First look poster