தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவின் விறுவிறுப்பான டைரக்டர் என்றால் அவர் ஹரி.
அதுபோல ஆக்ஷன் காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் விஷால்.
இவர்கள் இருவரும் இணைந்த படம் ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’.
இந்த இரு படங்களும் நல்ல வசூலை அள்ளிக் கொடுத்தன.
இந்த நிலையில் ஹரி – விஷால் இருவரும் விரைவில் ஒரு புதிய படத்திற்காக இணைய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
சமீபத்தில்தான் ஹரி மற்றும் அவரது மனைவி பீரித்தா இணைந்து குட் லக் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினர்.
இன்று அவர்களின் நிறுவனத்திற்கு வருகை தந்தார் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.
Director hari teamsup with vishal for 3rd time