விஷால்-ஆர்யா மேரேஜ் பண்ணிக்க மாட்டாங்க… விஷ்ணு விஷால்

விஷால்-ஆர்யா மேரேஜ் பண்ணிக்க மாட்டாங்க… விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arya-vishnu-vishalவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தை தொடர்ந்து கதாநாயகன் படத்தை தயாரித்து நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

சூப்பர் ஜீ புகழ் நடிகர் முருகானந்தம் இயக்கும் இப்படத்தில் கேத்ரீன் தெரசா, சூரி, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படம் அடுத்த செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் விஷ்ணு தன் நெருங்கிய நண்பர்கள் விஷால் மற்றும் ஆர்யாவை பற்றி பேசினார்.

அப்போது அவர்கள் திருமணம் செய்துக்கொள்வார்களா? என கேட்டபோது…

எனக்குத் தெரிஞ்ச வரை அவங்க ரெண்டு பேரும் திருமணம் செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன்.

திருமணத்திற்கு அவர்களை சம்மதிக்க வைப்பது கஷ்டம்.

மேரேஜ் நம் லைஃப் ஸ்டைலை முழுமையாக மாற்றும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

எனவே போக போக அவர்கள் மனம்மாறி சம்மதிப்பார்கள் என நினைக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Vishal and Arya will not get married says their friend Vishnu Vishal

ரஜினி-அன்புமணி ராமதாஸ் நட்புக்கு பாலமாக இருந்தேன்… – எஸ்.தாணு

ரஜினி-அன்புமணி ராமதாஸ் நட்புக்கு பாலமாக இருந்தேன்… – எஸ்.தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini anbumai ramadoss producer thanuபதநிச கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்க, ராம்போ நவகாந்த் இயக்கத்தில் குணாநிதி நடித்திருக்கும் குறும்படம் ‘எ ஸ்ட்ரோக் ஆஃப் டிஸ்ஸொனன்ஸ்’. ஒரு வயலின் இசைக்கலைஞனை பற்றிய இந்த குறும்படத்தின் சிறப்பு காட்சி சென்னை பிரசாத் லேபில் நடந்தது.

விழாவில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இக்குறும்படத்தை முன்பே பிரத்யேகமாக பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன், வீடியோ பதிவில் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தான் உருவாக்க முயற்சி செய்த கிழக்கு ஐரோப்பிய பாணி திரைப்படங்களை இந்த இளம் குழுவினர் செய்திருக்கிறார்கள். தொழில்நுட்பம் தெரிந்த இந்த இளைஞர்கள் மேலும் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும். எங்களுக்கு போட்டியாக வர வேண்டும் என்று வாழ்த்தினார்.

இளைஞர்கள் இணைந்து உத்வேகத்தோடு இந்த குறும்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு சினிமா இசை வெளியீட்டு விழாவில் தான் அன்புமணி ராமதாஸை சந்தித்தேன்.

அன்று தொடங்கிய நட்பு இன்று வரை தொடர்கிறது. அரசியலில் எதிர் துருவங்களில் இருந்தாலும் நட்பு தொடர்கிறது. ரஜினிகாந்துக்கும், பாமக இயக்கத்துக்கும் மோதல் நடந்த காலத்தில் ரஜினிக்கும், அன்புமணிக்கும் பாலமாக இருந்திருக்கிறேன். இன்றும் அவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள்.

பெரிய இடத்து பிள்ளை என்றாலும் குணாநிதிக்கு தொழிலில் இருக்கும் டெடிகேஷன் பாராட்டுக்குரியது. இளையராஜா, ஏஆர் ரஹ்மான் ஆகியோருக்கு இந்த குறும்படத்தை போட்டுக் காட்ட நான் முயற்சி செய்வேன்.

ஆளவந்தான் போல ஒரு படைப்பை கொடுத்த கமல்ஹாசன் இந்த குறும்படத்தை பற்றி கணித்திருப்பது உண்மை. இந்த குழுவினர் என் நிறுவனத்திற்கு ஒரு படத்தை செய்து கொடுக்க வேண்டும் என்றார் கலைப்புலி எஸ் தாணு.

தியேட்டர் லேப் நடிப்பு பயிற்சி மையத்தின் வெற்றிக்கு காரணம் குணாநிதி. என் சிறந்த மாணவன், நான் நினைத்த ரோமியோ ஜூலியட் நாடகத்தை அரங்கேற்ற முடியாமல் போனதை இந்த குறும்படத்தின் மூலம் நிறைவேற்றி இருக்கிறான் குணா.

சினிமாவில் நிறைய சம்பாதிக்கலாம், புகழ் பெறலாம் என பலரும் சினிமாவுக்கு வருகிறார்கள். பணம், புகழை தாண்டி கலை ஆர்வத்தால் நடிக்க வந்திருக்கிறார் இந்த குணா.

படத்தில் வெறுமனே மாஸுக்காக புகை பிடிக்காமல் கதாபாத்திரத்துக்காக புகை புடித்திருக்கிறார் குணா என்றார் ஜெயராவ்.

மேற்கத்திய நாடுகளில் சொல்லப்படும் பல வித கதைகள், தமிழ் சினிமா கதை சொல்லலில் சாத்தியமில்லை. வணிக நோக்கத்தில் படங்கள் எடுக்கப்படுவதால், நேரடியாக நாங்கள் சொல்ல முடியாத விஷயங்களை குறும்படங்களில் சொல்ல முடியும்.

அந்த வகையில் மிகவும் டெடிகேஷனோடு இந்த குறும்படத்தை குணாநிதி மற்றும் குழுவினர் எடுத்திருக்கிறார்கள். இளையராஜா போன்ற இசை ஜாம்பவான் இந்த படத்தை நிச்சயம் பார்த்து பாராட்ட வேண்டும்.

அன்புமணி சார் தர்மதுரை படத்தை பார்த்து விட்டு பாராட்டினார், நல்ல சினிமாவை எப்போதும் ஆதரிப்பவர் அவர் என்றார் இயக்குனர் சீனு ராமசாமி.

ட்ரெண்ட்லௌட் சிதம்பரம், நாயகன் குணாநிதி, இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், பதநிச தயாரிப்பாளர் சங்கமித்ரா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். விழாவில் படக்குழுவினருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார் அன்புமணி ராமதாஸ்.

I am the reason behind Rajini and Anbumani Ramadoss friendship says Kalaipuli S Thanu

A Stroke of Disssonance short film launch photos

தமிழர்களின் வாழ்க்கையான சினிமாவை மதிக்கிறோம்… அன்புமணி ராமதாஸ்

தமிழர்களின் வாழ்க்கையான சினிமாவை மதிக்கிறோம்… அன்புமணி ராமதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

A Stroke of Disssonance Short Film Press Meet Photos (24)பதநிச கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்க, ராம்போ நவகாந்த் இயக்கத்தில் குணாநிதி நடித்திருக்கும் குறும்படம் ‘எ ஸ்ட்ரோக் ஆஃப் டிஸ்ஸொனன்ஸ்’.

இந்த குறும்படத்தில் பாமக ராமதாஸின் பேரன் குணாநிதி நடித்துள்ளார்.

எனவே அவரை வாழ்த்துவதற்காக விழாவில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது…

குணாநிதியை குழந்தையில் இருந்தே எனக்கு தெரியும். ஐந்து வயதில் லட்சக்கணக்கான மக்கள் முன் மேடை ஏறியவன் குணாநிதி. அவன் மிகப்பெரிய நகைச்சுவை கலைஞன்.

மருத்துவம் படித்து விட்டு வந்தாலும் கலையில் தான் அவனுக்கு ஆர்வம். ஒட்டு மொத்த குடும்பத்தையும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் சிரிக்க வைக்கும் திறமையானவன்.

இந்த குறும்படத்தில் புகை புடிக்கும் காட்சியை மட்டும் தவிர்த்திருக்கலாம். ஆனாலும் புகை பிடிப்பதை உயர்த்தி சொல்லவில்லை என்பது ஆறுதல்.

சினிமாவுக்கு நாங்கள் எதிரி என்பது போல சித்தரித்து விட்டார்கள். அப்படி கிடையாது, நான் வாரம் ஒரு படம் பார்ப்பேன், அப்பா மாதம் ஒரு படம் பார்ப்பார்.

என் குழந்தைகள் வாரம் இரண்டு மூன்று படம் பார்ப்பவர்கள். சினிமா தான் தமிழர்களுக்கு வாழ்க்கை. அதனால் பொறுப்பான படங்களாக கொடுக்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறோம். சினிமாவை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம்” என்று பேசினார் அன்புமணி ராமதாஸ்.

Cinema is Tamil Peoples life I respect Cinema says Anbumani Ramadoss

A Stroke of Disssonance Short Film Press Meet Photos (13)

 

ரஜினிக்கே கிடைக்கல; விஜய்க்கு கிடைச்சிடுச்சி… மெர்சல் மெகா சாதனை

ரஜினிக்கே கிடைக்கல; விஜய்க்கு கிடைச்சிடுச்சி… மெர்சல் மெகா சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Mersal gets Twitter emoji Its first for a Tamil filmஇந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று சொன்னால் அது மிகையாது.

இவர் நடித்த கபாலி படத்தின் விளம்பரங்கள் இந்திய சினிமாவையே வியக்கவைத்தது.

பல தனியார் நிறுவனங்கள் இப்படத்தின் ரிலீஸ் அன்று விடுமுறையே அளித்தன.

இதற்கு எழுந்த உச்சக்கட்ட எதிர்பார்ப்பினால் ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப்பில் கபாலி ரஜினி எமோஜி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இறுதியில் அது நிறைவேறாமல் போனது.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் முதன்முறையாக விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு ட்விட்டர் எமோஜி உருவாக்கப்பட்டுள்ளது.

நீங்கள் #Mersal என்று டைப் செய்தாலே அத்துடன் விஜய் படம் ஒட்டிக்கொள்ளும்.

இது தமிழ் சினிமாவிற்கு இந்தியளவில் கிடைத்த பெருமையாக கூறலாம்.

இதற்கு முன்பு சல்மான் கானின் ‘டியூப்லைட்’ படத்திற்கும், ஷாருக்கானின் ‘ஜப் ஹாரி மெட் சேகல்’ படத்திற்கும் இதுபோன்ற எமோஜி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijays Mersal gets Twitter emoji Its first for a Tamil film

mersal emoji

கடவுளின் தேசத்தையே அதிர வைத்த சன்னிலியோன்

கடவுளின் தேசத்தையே அதிர வைத்த சன்னிலியோன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sunny Leone gets resounding welcome in Gods Own country Keralaகேரள மாநிலத்தின் கொச்சி நகரில் உள்ள எம்ஜி சாலையில், புதிய மொபைல் கடை திறப்பு விழாவுக்காக பாலிவுட் நடிகை சன்னி லியோன் வந்திருந்தார்.

அவரைக் காண ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அதிகாலை முதலே அந்த கடை இருக்கும் பகுதியில் திரண்டனர்.

இதனால் அந்த பகுதியே மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.

கட்டிடங்கள், பேருந்துகள், மெட்ரோ ரயில் தூண்களின் மீதும் ஏறி சன்னி லியோனை காண ரசிகர்கள் காத்திருந்தனர்.

சன்னி லியோன் மேடை ஏறிய பேசத் தொடங்கியதும் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தன.

இந்த ஆரவாரத்தை பற்றி சன்னி லியோன் கூறியதாவது… ”கடவுளின் சொந்தப் பிரதேசமான கேரளத்தை நிச்சயம் மறக்க மாட்டேன்.

ரசிகர்களாகிய உங்களின் அன்பு மற்றும் ஆதரவால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

ஆனால் அங்கு கூடியிருந்த கூட்டத்தையும், வாகன நெரிசலையும் சமாளிக்க முடியாமல் திணறிய போலீசார் அந்த மொபைல் கடை நிர்வாகத்தின் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Sunny Leone gets resounding welcome in Gods Own country Kerala

crowd for sunny leon at kerala kochi

பிக்பாஸ் முதல் ஹேர்கட் வரை..; ஓவியா வெளியிட்ட முதல் வீடியோ

பிக்பாஸ் முதல் ஹேர்கட் வரை..; ஓவியா வெளியிட்ட முதல் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oviya open talks about Bigg Boss and her Hair cut lookகமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் ஓவியா.

எவரும் எதிர்பாராத வகையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சி மூலம் பெற்றார்.

ஓவியா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது முதல் பல ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை புறக்கணித்தனர்.

இதனால் டிஆர்பியில் இறங்கிய அந்த நிகழ்ச்சி பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டது முதல் அங்கு நடைபெற்ற நிகழ்வுகள், பின்னர் வெளியேறியது, முடி வெட்டியது என அனைத்தையும் ஓபனாக மனம் திறந்து வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார்.

Oviya open talks about Bigg Boss  and her Hair cut look

இதோ அந்த வீடியோ….

More Articles
Follows