கௌரவ் படத்தை தொடர்ந்து எழில் இயக்கத்தில் உதயநிதி…!

கௌரவ் படத்தை தொடர்ந்து எழில் இயக்கத்தில் உதயநிதி…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhayanidhi new photosவிஜய், அஜித், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நாயகர்களின் படங்களை இயக்கியவர் எழில். இவரின் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ர்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம் எழில். தற்போது லைகா தயாரிப்பில் கௌரவ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார் உதயநிதி.

இதனையடுத்து எழில் இயக்கும் படத்தை தன் ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நடிப்பார் உதயநிதி என கூறப்படுகிறது.

கழிவறை கட்டினால் கபாலி டிக்கெட்… அரசாங்கத்தின் அதிரடி ஆஃபர்..!

கழிவறை கட்டினால் கபாலி டிக்கெட்… அரசாங்கத்தின் அதிரடி ஆஃபர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali stillsபுதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக கிரண்பேடி அண்மையில் பொறுப்பேற்றார்.

தன் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள இவர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில், தற்போது நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து புதுச்சேரியில் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் தன்னுடைய ட்விட்டரில் “கழிவறை கட்டுவோருக்கு இலவச சினிமா டிக்கெட் தரப்பட உள்ளது” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜவஹர் கூறியதாவது:

”புதுச்சேரி மண்ணாடிப்பட்டில் செல்லிப்பட்டு கிராமம் உள்ளது. அங்கிருந்த 772 வீடுகளில் 447 வீடுகளில் கழிவறை இல்லை.

எனவே கழிவறை கட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அரசு ரூ. 20 ஆயிரம் மானியம் தருவதை தெரிவித்தோம்.

மேலும் கழிவறை கட்ட முன்வரும் குடும்பத்துக்கு ரஜினியின் ‘கபாலி’ படத்தின் 4 டிக்கெட்டுகள் தரவிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

நாகர்ஜுனா மகன் நாக சைதன்யா – சமந்தா திருமணம்.?

நாகர்ஜுனா மகன் நாக சைதன்யா – சமந்தா திருமணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Naga Chaithanya and samanthaதெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் நாகர்ஜுனா. இவரது மகன் குறித்து இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது…

“ என் மகன் நாகசைதன்யா ஒரு பெண்ணை மணக்க தேர்ந்தெடுத்திருக்கிறார். இதனால் நானும், என் மனைவி அமலாவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம்.

விரைவில் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவோம்” என்றார்.

நாகர்ஜுனா, மணப்பெண்ணாக குறிப்பிட்டது நடிகை சமந்தாவைத் தான் என டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

நாக சைதன்யாவும் சமந்தாவும் தெலுங்கில் “விண்ணைத் தாண்டி வருவாயா”மற்றும் “மனம்” என்று ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.

அந்த சமயங்களில் இவர்களின் காதல் பற்றி செய்திகள் வந்தபோது இருவரும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று செல்வா; இன்று கௌதம்… சிம்புவால் சிக்கிய இயக்குனர்கள்..!

நேற்று செல்வா; இன்று கௌதம்… சிம்புவால் சிக்கிய இயக்குனர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

str stillsசெல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்த கான் படத்தின் சூட்டிங் பாதியிலே நிறுத்தப்பட்டது.

அதன்பின்னர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த அச்சம் என்பது மடமையடா படமும் கைவிடப்படும் சூழ்நிலையை நெருங்கி வருவதாக தோன்றுகிறது.

இதன் படப்பிடிப்புக்கு சிம்பு சரியாக வருவதில்லையாம்.

இதனால் பெரும் ஹிட்டடித்த ‘தள்ளிப் போகாதே’ பாடல் இதுவரை படமாக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார் கெளதம் மேனன்.

மேலும் துருக்கி நாட்டில் நடந்த சூட்டிங்கில் கலந்த கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ரூ 80 லட்சம் செலவில் தெலுங்கு பதிப்பை மட்டும் முடித்து விட்டு வந்திருக்கிறார்களாம்.

ஒரு நேரத்தில் சிம்புவாக ஆதரவாக இருந்தவர் கௌதம் மேனன் மட்டுமே.

ஆனால் தற்போது அவரே சிம்புவை பற்றி இப்படி கூறியிருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் நாலு ஹீரோஸ் யார்..?

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் நாலு ஹீரோஸ் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautham Menon Imagesதாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து, ஐந்து ஹீரோக்கள் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் பாலா.

இப்படத்தை 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அர்விந்த்சாமி, விஷால், ஆர்யா, ராணா, அதர்வா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தற்போது பாலாவை போல் கௌதம் மேனனும் நான்கு ஹீரோக்கள் கொண்ட ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம்.

தனுஷ் நடித்து வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை தொடர்ந்து இப்படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இப்படத்திற்கு ‘ஒன்றாக’ என பெயரிட்டுள்ளார்.

பிருத்விராஜ், புனித் ராஜ்குமார், சாய் என மூன்று ஹீரோக்கள் கமிட்டாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இவர்களுடன் ஜெயம் ரவியும் விரைவில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஹீரோக்களை போல நான்கு ஹீரோயின்களும் இருக்கின்றனர். இதில் நடிக்க அனுஷ்கா, தமன்னா ஆகிய இருவரும் ஓகே சொல்லிவிட்டார்களாம்.

மற்ற நாயகிகள் யார்? என்று இதுவரை தெரியவில்லை.

நாலு நண்பர்கள் ஒன்றாக சுற்றுலா செல்வதை கொண்டு இப்படம் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்-சூர்யா-சிம்பு-சிவகார்த்திகேயன்… இந்தாண்டில் யார் படம் அதிக வசூல்..?

விஜய்-சூர்யா-சிம்பு-சிவகார்த்திகேயன்… இந்தாண்டில் யார் படம் அதிக வசூல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay suriya simbu sivakarthikeyanஇந்தாண்டு (2016) தொடங்கி ஆறு மாதங்கள் இன்றோடு நிறைவு பெறுகிறது.

இன்று வரையில் தமிழின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷால், ஆர்யா, சித்தார்த் ஆகியோரின் படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த நடிகர்களின் படங்களுக்கு தமிழகத்தில் இருக்கும் வரவேற்பை போன்றே வெளிநாடுகளிலும் உள்ளது.

இதில் விஜய்யின் ‘தெறி’ மற்றும் சூர்யா தயாரித்து 3 வேடங்களில் நடித்த ’24’ ஆகிய படங்கள் அதிகம் வசூலை வெளிநாடுகளில் ஈட்டியுள்ளது.

இவை இரண்டும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

‘தெறி’ படம் 45 கோடிகளை வசூல் செய்துள்ளது.

’24’ படம் ரூ. 31 கோடிகளை வசூல் செய்துள்ளது.

‘ரஜினிமுருகன்’ படம் ரூ. 13 கோடிகளையும் ‘அரண்மனை 2’ ரூ. 9.5 கோடிகளையும் ‘இது நம்ம ஆளு’ படம் ரூ. 4.6 கோடிகளையும் வசூல் செய்துள்ளது.

அடுத்தடுத்த இடங்களை பிடித்த படங்கள்…

· மாதவனின் ‘இறுதிச்சுற்று’ ரூ. 3.8 கோடி

· ஜெயம் ரவியின் ‘மிருதன்’ ரூ. 4 கோடி

· விஜய் சேதுபதியின் ‘காதலும் கடந்து போகும்’ ரூ. 3.2 கோடி

· எஸ்.ஜே. சூர்யாவின் ‘இறைவி’ ரூ. 2.2 கோடி

· விஜய் சேதுபதியின் ‘சேதுபதி’ ரூ. 2 கோடி

More Articles
Follows