விஷால் & ஆர்யா இருவரையும் ‘எனிமி’ ஆக்கிய நோட்டா டைரக்டர்

விஷால் & ஆர்யா இருவரையும் ‘எனிமி’ ஆக்கிய நோட்டா டைரக்டர்

‘அவன் இவன்’ படத்துக்குப் பிறகு விஷால் & ஆர்யா மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

இதில் மிருணாளினி, கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை இருமுகன், நோட்டா படங்களின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கி வருகிறார்.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் அண்மையில் முடித்தனர்.

இந்த நிலையில் விஷால் – ஆர்யா இருவருமே இணைந்து தங்களின் படத்துக்கு ‘எனிமி’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

முக்கிய கேரக்டரில் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளார்.

நடிகர் தனுஷின் பழைய மேலாளரான வினோத் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

விஷால் & ஆர்யா இருவரும் சினிமாவைத் தாண்டி நெருக்கமான நட்பில் உள்ளவர்கள். அவர்களின் படத்திற்கு ‘எனிமி’ என்று பெயரிட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vishal and Arya reunite for Anand Shankar’s Enemy
Tamil film Enemy

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *