தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ & ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம்.
இவர் தற்போது இயக்கியுள்ள படம் ‘எம்ஜிஆர் மகன்’. இதில் சத்யராஜும், சசிகுமாரும் அப்பா, மகனாக நடித்துள்ளனர்.
சசிக்குமாருக்கு ஜோடியாக மிர்னாளினி ரவி நடிக்கிறார். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இப்படம் கடந்த ஆண்டே வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனாவால் தள்ளிப்போனது.
இந்த நிலையில், வரும் தீபாவளியையொட்டி, நவம்பர் 4 ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
இத கொஞ்சம் பாருங்க : ‘‘இணையதளத்தை பற்ற வைத்த சூர்யாவின் ‘பவர்’ சாங்
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் பொன்ராம்.
தீபாவளியையொட்டி சூர்யா தயாரித்து நடித்துள்ள ‘ஜெய் பீம்’ நவம்பர் 2 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் ‘அண்ணாத்த’ & ஆர்யா & விஷால் இணைந்துள்ள எனிமி படங்கள் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீசாகிறது.
Sasi Kumar’s MGR Magan joins Diwali race