மக்கள் முன்னிலையில் நடைபெறும் ‘விருமன்’ இசை விழாவில் அமீர் – பாவ்னி நடனம்

மக்கள் முன்னிலையில் நடைபெறும் ‘விருமன்’ இசை விழாவில் அமீர் – பாவ்னி நடனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க முத்தையா இயக்கத்தில்,
கார்த்தி நடித்துள்ள படம் ’விருமன்’.

இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.

இதில், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

வரும் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ’கஞ்சா பூவு கண்ணால….’ பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் மற்றப் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, ரசிகர்கள் முன்னிலையில் வரும் 3ம் தேதி நடக்கிறது. மதுரை, ராஜா முத்தையா அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடக்கும் இந்த விழாவில், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா,
இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உட்பட படக்குழுவினர் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவில், இரண்டு பாடல்களுக்கு மேடையில் நடனமாடுகிறார்கள். ஒரு பாடலுக்கு நடன இயக்குநர் சாண்டி குழுவினரும் மற்றொரு பாடலுக்கு விஜய் டிவி அமீர் – பாவனியும் நடனமாடுகின்றனர்.

ARTIST LIST::

கார்த்தி
அதிதி சங்கர்
ராஜ்கிரண்
பிரகாஷ்ராஜ்
கருணாஸ்
சூரி
வடிவுக்கரசி
சிங்கம்புலி
மனோஜ் பாரதிராஜா
ராஜ்குமார்
இந்துமதி
வசுமித்ரா
நந்தினி
ஹலோ கந்தசாமி
வேல் முருகன்
TSR
ஓ.ஏ.கே.சுந்தர்
ரிஷி

TEACHNICIAN LIST::

தயாரிப்பாளர் – சூர்யா
இணை தயாரிப்பு – ராஜகேசர் கற்பூர சுந்தரபாண்டியன்
தயாரிப்பு நிறுவனம் – 2D Entertainment
இயக்குனர் – முத்தையா
இசை – யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு – S.K. செல்வகுமார்
எடிட்டிங் – வெங்கட்ராஜ்
நடனம் – ஷோபி, பாபா பாஸ்கர், சாண்டி, ஜானி
சண்டை – அனல் அரசு
கலை – ஜாக்கி
மக்கள் தொடர்பு – ஜான்சன்

Viruman audio launch will be held at Madurai

‘ஜிகர்தண்டா 2’ அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்.; ஹீரோ இவரா.??

‘ஜிகர்தண்டா 2’ அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்.; ஹீரோ இவரா.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2014-ம் ஆண்டு ரிலீசான படம் ‘ஜிகர்தண்டா’.

கார்த்தி சுப்புராஜ் இயக்கிய இந்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்திருந்தார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.

இதில் சித்தார்த் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இப்படத்தில் அசால்ட் சேதுவாக நடிகர் பாபி சிம்ஹா கேங்ஸ்டராக மிரட்டி இருந்தார்.

பாபி சிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் இப்படத்தின் எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு மற்றொரு தேசிய விருதும் கிடைத்தது.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 1ம் தேதி ஜிகர்தண்டா வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ‘ஜிகர்தண்டா 2’ படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

அந்த வீடியோவில்… முதல் பாகத்தின் தொடர்ச்சியாக ஜிகர்தண்டா இரண்டு கிளாஸ்கள் இருக்குமாறு பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

கூடுதல் தகவல்….

ஜிகர்தண்டா படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்க பச்சன் பாண்டே என்ற பெயரில் அண்மையில் ரிலீசானது.

Karthik Subbarajs Jigarthanda 2 update is here

பண மோசடி.; விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆபிஸை ஜப்தி செய்ய கோர்ட் ஆர்டர்

பண மோசடி.; விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆபிஸை ஜப்தி செய்ய கோர்ட் ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் புரட்சி இயக்குனர் என்று சொன்னால் அது எஸ் ஏ சி தான்.

ரஜினிகாந்த் விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களை இவர் இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய்யின் தந்தையான இவர் தற்போது சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

‘டிராஃபிக் ராமசாமி’ உள்ளிட்ட ஓரிரு படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.

இவர் கடந்த 2011ம் ஆண்டு வெளியான ’சட்டப்படி குற்றம்’ படத்தின் விளம்பர செலவு 76 ஆயிரத்து 122 ரூபாயை வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து, விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன், சென்னை அல்லிகுளம் 25-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

எனவே இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய எழும்பூர் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்திரசேகருக்கு அலுவலகத்தில் உள்ள ஏசி, டேபிள், பேன் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

ஜப்தி செய்ய சென்றபோது ஊழியர்கள் அனுமதிக்காததால் காவல்துறை உதவி கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

sa chandrasekhar office confiscation will be done soon

சிம்புவே வெளியிட்ட ‘பத்து தல’ சூட்டிங் அப்டேட்.; ரசிகர்கள் உற்சாகம்

சிம்புவே வெளியிட்ட ‘பத்து தல’ சூட்டிங் அப்டேட்.; ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சில்லுன்னு ஒரு காதல்’ பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பத்து தல’.

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இது கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘முப்தி’ என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

இதில் சிம்பு உடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், மலையாள நடிகை அனு சித்ரா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கடந்த மே ஜூன் மாதமே இதன் இறுதிக்கட்ட சூட்டிங் தொடங்கப்பட இருந்த நிலையில் தன் தந்தை டி ராஜேந்தர் உடல்நல குறைவு காரணமாக சிம்பு இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், தற்போது நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில்…

‘ஷூட்டிங் இன் ப்ராக்ரஸ்..பத்து தல’ என பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் ‘பத்து தல’ படப்பிடிப்பு தொடங்கியிருப்பதை உறுதி செய்துள்ளார்.

கடந்த ஜூன் 30-ம் தேதி ‘ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் அதன் ட்விட்டர் பக்கத்தில், படம் டிசம்பர் 14-ம் தேதி ‘பத்து தல’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Pathu Thala shooting update

உயிருக்கு ஆபத்து.; துப்பாக்கி வைத்துக் கொள்ள சல்மான்கானுக்கு சிறப்பு அனுமதி

உயிருக்கு ஆபத்து.; துப்பாக்கி வைத்துக் கொள்ள சல்மான்கானுக்கு சிறப்பு அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான்கான்.

இவர் தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி உடன் நேரடி தெலுங்கு படமான ‘காட்பாதர்’ படத்தில் நடித்து வருகிறார்.

சமீத்தில் சல்மான் கானுக்கும் அவரது தந்தைக்கும் மர்ம நபர் ஒருவரிடமிருந்து கொலை மிரட்டல் வந்தது.

அந்த மிரட்டல் கடிதத்தில் அண்மையில் கொல்லப்பட்ட பஞ்சாபி பாடகரான சித்து மூசே வாலாவைப் போல கொல்லப் படுவீர்கள் என எழுதப்பட்டு இருந்தது.

எனவே நடிகர் சல்மான் கான் மும்பை காவல் துறையில் புகார் அளித்தார்.

மேலும் மும்பை காவல் துறையிடம் தற்காப்பிற்காக துப்பாக்கி வைத்து கொள்ளவும் அனுமதி கோரினார்

இந்த நிலையில், அவருக்கு துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமத்தை மும்பை காவல் துறை வழங்கியுள்ளது.

மேலும், பொதுவெளியில் சுற்றுவதை குறைக்கவும், சைக்கிளிங் ஓட்டுவதை தவிர்க்கவும் காவல் துறை அட்வைஸ் செய்துள்ளது.

Police has given Salman Khan gun licence for self-defence

‘ஒரு குப்பை கதை’ நாயகனுடன் யோகிபாபு ந(அ)டிக்கும் ‘லோக்கல் சரக்கு’

‘ஒரு குப்பை கதை’ நாயகனுடன் யோகிபாபு ந(அ)டிக்கும் ‘லோக்கல் சரக்கு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தினேஷ் மாஸ்டர் மற்றும் யோகி பாபுவின் காமெடி சரவெடியில் உருவாகும் ‘லோக்கல் சரக்கு’

’ஒரு குப்பைக் கதை’, ‘நாயே பேயே’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரபல நடன இயக்குநர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’.

இப்படத்தில் தினேஷுடன் யோகி பாபுவும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

உபாசனா ஆர்.சி நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, சிங்கம் புலி, வையாபுரி, சென்றாயன், வினோதினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

டிஸ்கவர் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.வலண்டினா சுவாமிநாதன், டாக்டர்.பத்மா வெங்கடசுப்ரமணியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.பி.ராஜ்குமார் இயக்குகிறார்.

வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு எம்.மூவேந்தர் மற்றும் கே.எஸ்.பழநி ஒளிப்பதிவு செய்கின்றனர்.

ஜே.எப்.கேஸ்ட்ரோ படத்தொகுப்பு செய்ய, முஜ்பூர் ரகுமான் கலையை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி அதனால் பல்வேறு பிரச்சனைகளு ஏற்படுகின்றன.

அத்தகைய பிரச்சனைகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் காமெடி கலந்து கமர்ஷியலாக சொல்வது தான் ‘லோக்கல் சரக்கு’ படத்தின் கதை.

நடன இயக்குநர் தினேஷ் மற்றும் யோகி பாபு ஆகியோரது கூட்டணியின் காமெடிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக இருப்பதோடு சமூகத்திற்கான நல்ல மெசஜை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் கமர்ஷியல் திரைப்படமாகவும் இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் கொடுத்திருக்கிறார்.

’அழகர் மலை’, ‘சுறா’, ‘பட்டைய கிளப்புவோம் பாண்டியா’ உள்ளிட பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் காமெடி காட்சிகள் உருவாக்கத்தில் தலைசிறந்தவர் என்பது அனைவரும் அறிந்தது தான்.

அதிலும் ‘லோக்கல் சரக்கு’ படத்தில் மதுப்பழக்கத்தை வைத்து அவர் உருவாக்கியிருக்கும் காமெடி காட்சிகள் வயிறு வலிக்க சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கும் விதத்தில் வந்திருக்கிறதாம்.

பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷிடம் பல வருடங்களாக உதவியாளராக பணியாற்றிய இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ், பல திரைப்படங்களில் ஹிட் பாடல்களை , பல தனியிசை பாடல்கள் மூலமாகவும் பிரபலமானவர்.

’லோக்கல் சரக்கு’ படத்தில் இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷின் இசையில் இரண்டு குத்து பாடல்கள் மற்றும் இரண்டு மெலோடி பாடல்கள் இடம்பெற்றுள்ளது.

இரண்டு பாடல்களும் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் சூப்பர் ஹிட் பாடல்களாக வந்திருப்பதோடு, டிரெண்ட் செட்டிங் பாடல்களாகவும் இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் தொடங்கியுள்ளது.

Yogibabu and Dinesh master in Local Sarakku

More Articles
Follows