தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘எலி’, ‘தெனாலிராமன்’ உள்ளிட்ட படங்களின் இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘இறுகப்பற்று’.
இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்னதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.
கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘இறுகப்பற்று’ படத்தின் முதல் பாடல் வருகிற 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
இதனை விக்ரம் பிரபு தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
Vikram prabhu’s Irugapatru first single release on august 31