தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் – அபர்னதி உள்ளிட்டோர் நடித்த படம் ‘இறுகப்பற்று’.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்த இந்த படத்தை எஸ்.ஆர். பிரபு தயாரித்திருந்தார்.
அக்டோபர் 6 தேதி வெளியான இப்படம் வெற்றி பெற்ற நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் நடிகை அபர்ணதி பேசும்போது..
“இந்த படத்தில் நடித்ததற்காக முதலில் நானே எனக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் பார்த்த பார்வையாளர்கள் எந்த ஒரு குறையும் சொல்லவில்லை. படம் பார்த்துவிட்டு நிறைய பேர் என்னுடன் கனெக்ட் ஆகி தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்தப் படத்தின் மூலம் அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்ட என வடிவேலு சொன்னது போல என் வாழ்க்கையிலும் நடந்தது.
நான் சினிமாவிற்காக முயற்சி செய்தபோது என்னுடைய தந்தையின் நண்பரின் மகன், சினிமாவிற்கு போய் நீ என்ன ‘கிழிக்க’ போகிறாய் என்று கேட்டான்.
ஆனால் இன்றைக்கு துபாயில் இந்த படம் பார்ப்பதற்காக டிக்கெட் வாங்கி ‘கிழித்து’ போட்டு தான் உள்ளே போய் படம் பார்த்தான்.
இப்போதுதான் சினிமாவில் வெற்றியை பார்க்கிறேன். இந்தப் படத்தில் கிளைமாக்ஸில் நான் அழுதது நிஜமான அழுகைதான். என்னடா டைரக்டர் இப்படி போட்டு
வேலை வாங்குகிறாரே என்று நினைத்ததால் வந்து அழுகை. இப்படத்தில் நடித்தது ஒரு சவாலாகவே இருந்தது. இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுடன் இணைந்து பணியாற்றியது சந்தோஷம். விதார்த்தை பார்க்கும்போது மைனாவில் இருந்த அதே பவர் இதிலும் இருந்தது.
விக்ரம் பிரபு இப்படத்தில் உணர்வுகளை சரியாக பேலன்ஸ் செய்திருக்கிறார். இயக்குனர் யுவராஜ், ஸ்ரீயை நன்றாக வேலை வாங்கி இருந்தார்.” என்று கூறினார்.
Abarnathi emotional speech about her past experience