தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
துருவ நட்சத்திரம் மற்றும் ஸ்கெட்ச் ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘சாமி 2’ படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம்.
தற்போது இப்படத்துக்கான முதற்கட்ட பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது படக்குழு.
விரைவில் இதன் சூட்டிங் தொடங்கப்பட உள்ள நிலையில் இப்படத்தில் நடிப்பவர்கள் யார்? யார்? என்ற விவரத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.
பாபி சிம்ஹா வில்லனாக நடிக்க, முக்கிய வேடத்தில் பிரபு, சூரி ஆகியோர் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.
மிலன் கலை இயக்குநராகவும், கனல் கண்ணன் சண்டை வடிவமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Vikram next movie saamy2 cast and crew details