ஒருவருக்கொருவர் ரசிகையாக மாறிய கீர்த்தி சுரேஷ்-ஐஸ்வர்யா ராஜேஷ்

Keerthy Suresh and Aishwarya Rajesh became fan of each otherமாபெரும் வெற்றிப் பெற்ற சாமி படத்தின் 2ஆம் பாகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு சாமி ஸ்கொயர் என்ற பெயரில் உருவாகியுள்ளது.

இப்படத்தையும் ஹரியே இயக்க, விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். முதல் பாகத்தில் த்ரிஷா நாயகியாக நடித்திருந்தார்.

தற்போது அவரது கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் சூரி, டெல்லி கணேஷ், இமான் அண்ணாச்சி, பிரபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் ஒரு ஸ்டார் ஹோட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் மாற்றி மாற்றி புகழ்ந்துக் கொண்டனர்.

ஐஸ்வர்யா பேசும்போது… நடிகையர் திலகம் படம் பார்த்து நான் அசந்துவிட்டேன். சில காட்சிகளில் அது சாவித்ரியா? கீர்த்தியா? என கன்ப்யூஸ் ஆகிட்டேன்.

அன்றுமுதல் நான் கீர்த்தியின் ரசிகையாக மாறிவிட்டேன்” என்றார்.

அதன்பின்னர் பேசிய கீர்த்தி பேசும்போது… இப்போதுதான் என் ரசிகையாக ஐஸ்வர்யா மாறியிருக்கிறார். நான் காக்கா முட்டை படம் பார்த்த போதே ஐஸ்வர்யா ராஜேஷின் ரசிகையாக மாறிவிட்டேன்” என பேசினார்.

Keerthy Suresh and Aishwarya Rajesh became fan of each other

Overall Rating : Not available

Latest Post