LIVE FROM TRICHY : விக்ரம் – ஸ்ரீநிதி பங்கேற்ற ‘கோப்ரா’ புரோமோசன் ஹைலைட்ஸ்

LIVE FROM TRICHY : விக்ரம் – ஸ்ரீநிதி பங்கேற்ற ‘கோப்ரா’ புரோமோசன் ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் , ஸ்ரீநிதி , மீனாட்சி , மிருணாளினி உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘கோப்ரா‘.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் அடுத்த வாரம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகளை துவங்கியுள்ள பட குழு இன்று திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு படக்குழுவினர் பதில் அளித்தனர்.

நடிகை மீனாட்சி பேசும்போது…

விக்ரம் 60 படங்களை கடந்து விட்ட போதும் ஒவ்வொரு படத்தையும் தன்னுடைய முதல் படமாக நினைத்து முழு உழைப்பையும் கொடுத்து வருகிறார். அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்” என்றார்.

நடிகை மிர்ணாளினி பேசும் போது…

விக்ரம் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம் ‘சாமி’. அவரை முதல்முறையில் கோப்ரா செட்டில் பார்த்தபோது எனக்கு பேச்சே வரவில்லை் இது கனவா நினைவா என்று தெரியாமல் இருந்தேன். அப்போது விக்ரம் வந்து தான் என்னிடம் பேசினார்.

நடிகை ஸ்ரீநிதி பேசும் போது…

‘கோப்ரா’ படத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த படத்தை அனைவரும் தியேட்டரில் பார்க்க வேண்டும். இது வித்தியாசமான விருந்தாக இருக்கும்” என்றார்.

அதன் பின்னர் விக்ரம் பேசும் போது…

“திருச்சிக்கு பலமுறை வந்துள்ளேன். இளமை பருவத்தில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொள்ள இங்கு பலமுறை வந்துள்ளேன்.

‘மகான்’ தந்த வருத்தம்.; மீண்டும் கோப்ரா இயக்குனருடன் இணையும் விக்ரம்

சாமி படத்தின் ஷூட்டிங் இங்குதான் நடைபெற்றது் அது என்னால் மறக்க முடியாது.

‘இமைக்கா நொடிகள்’ , ‘டிமான்டி காலனி’ ஆகிய வித்தியாசமான படங்களை தந்தவர் அஜய் ஞானமுத்து. அவர் இயக்கிய ‘கோப்ரா’ படம் மிகவும் வித்தியாசமான படம் என்று சொல்ல முடியாது.

ஆனால் நிச்சயமாக ஒரு பிரஷ்ஷாக ரசிகர்களுக்கு இருக்கும்.

எந்திரன் ரோபோ படங்களைப் போல சயின்ஸ் பிஃக்ஷன் கலந்து இருக்கும்.

அதுபோல சென்டிமென்ட் ஆக்ஷன் என அனைத்தும் கலந்த ஒரு படைப்பாக இருக்கும்” என்று பேசினார் விக்ரம்.

கோப்ரா

Cobra team at Trichy for movie promotion

புது டிரெண்டை உருவாக்கிட்டாரு.. என்னைய மிஞ்சிட்டாரூ.; ரஞ்சித்தை பாராட்டிய வெற்றி மாறன் & வெங்கட் பிரபு

புது டிரெண்டை உருவாக்கிட்டாரு.. என்னைய மிஞ்சிட்டாரூ.; ரஞ்சித்தை பாராட்டிய வெற்றி மாறன் & வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’.

காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்…

நாயகி துஷாரா பேசியதாவது…

‘நட்சத்திரம் நகர்கிறது’ நான் மிகவும் நேசித்து நடித்த படம், மாரியம்மாவாக எனக்கு லைஃப் தந்தவர் ரஞ்சித் சார். ரெனே மூலம் அது தொடருமென நம்புகிறேன்.

இந்தப்படத்தில் என்னுடன் நடித்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. எல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். படம் பாருங்கள்.

நடிகர் காளிதாஸ் ஜெயராம் பேசியதாவது..

என்னாலயே இத நம்ப முடியல. விஸ்காம் படிக்கும் போது மெட்ராஸ் படம் பார்த்துட்டு ரஞ்சித் சார் நம்பர் கண்டுபிடிச்சு பேசினேன். அவருக்கு நான் யாருனு கூட தெரியாது. ஆனா ரொம்ப நேரம் படம் பத்தி பேசினாரு. அவர் படத்துல நடிப்பேன்னு கனவுல கூட நினைக்கல. ரொம்ப சந்தோசமா இருக்கு.

ரஞ்சித் சாருக்கு நன்றி. படத்துல என்னோட பேர் இனியன் இந்த கதாப்பாத்திரம் என்னோட ரியல் லைஃப் மாதிரிதான் எல்லோருக்கும் பிடிக்கும்.

கலையரசன் பேசியதாவது….

படத்துல என்னோட பேர் அர்ஜூன், ரொம்ப முக்கியமான பாத்திரம் எல்லோரும் திட்டிட்டே நடிச்சிருக்காங்க. நிஜத்த கேள்வி கேக்கற ஒரு பாத்திரம். ரஞ்சித் கதை எழுதுறதும், அதை படமாக்கறதும் ரொம்ப வித்தியாசமா இருக்கும். இந்தப்படம் காதல கொண்டாடும்.

இசையமைப்பாளர் தென்மா பேசியதாவது…

சுயாதீன இசையமைப்பில் 15 வருடங்களாக இருக்கேன். ரஞ்சித் சார் சந்தித்த பிறகு வாழ்க்கை மாறிவிட்டது. இது எனது நாலாவது படம் ஆனால் ரஞ்சித் சார் எனக்கு பெரிய அறிமுகம் கொடுத்து விட்டார்.

அவர் நிறைய பேருக்கு அறிமுகம் தந்துள்ளார். பாடகர் அறிவு மெயின் ஸ்ட்ரீமில் கொண்டாடப்படுவது அவரால் தான். என் இசையே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அது எல்லோருக்கும் பிடிக்காது.

ஆனால் ரஞ்சித் சார் தான் ஊக்கப்படுத்தினார். நிறைய புதுமுகங்கள் இதில் உழைத்துள்ளார்கள்.

இயக்குநர் சசி பேசியதாவது...

சிலர் பார்க்க ஆஜானுபாகுவாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் செயல்கள் கோழைத்தனமாக இருக்கும். ஆனால் அப்படியானவரில்லை ரஞ்சித் துணிச்சலாக எல்லாவற்றையும் செய்வார். இந்த தலைப்பே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு புத்தக தலைப்பை எப்படி தைரியமாக வைக்கிறார் என ஆச்சர்யமாக இருந்தது.

யாழி பிலிம்ஸ் அவரை சுதந்திரமாக படமெடுக்க விட்டதற்கு நன்றி. ரஞ்சித் படம் எல்லாவற்றையும் பார்த்தவுடன் என் கருத்தை சொல்லிவிடுவேன். இந்தப்பட கதாப்பாத்திர அறிமுக டிரெய்லரே வித்தியாசமாக இருந்தது, அது படம் உடனே பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. இந்தப்படம் ரஞ்சித் படங்களில் முக்கியமான படமாக இருக்கும்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது…

‘அட்டகத்தி’ பார்த்தபோது ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கமாக தெரிந்தது. அதே போல் தான் இந்தப்பட டிரெய்லர் பார்க்கும் போதும் இருந்தது. உறவுகள் பற்றி நாம் பேச தயங்குகிற விசயத்தை, தமிழ் சினிமாவில் நிகழ்த்தும் படமாக இது இருக்கும்.

ரஞ்சித் மீண்டும் புது டிரெண்டை உருவாக்கியிருக்கிறார். வாழ்த்துக்கள்.

இயக்குநர் வெங்கட் பிரபு பேசியதாவது…

2007 காலகட்டத்திலிருந்து ரஞ்சித்தை தெரியும். ஒரு டாக்குமெண்ட்ரிக்கு ஸ்டோரிபோர்ட் செய்யத்தான் வந்தார். நான் படம் செய்த போது நானே அவரை அழைத்தேன். அவர் லிங்குசாமியிடம் தான் சேர்த்து விட சொன்னார். பாவம் என்னிடம் மாட்டிக்கொண்டார்.

ரஞ்சித் படங்களை பார்க்கிற போது பிரமிப்பாக இருக்கிறது. அவருக்குள் இவ்வளவு சிந்தனைகள் இத்தனை விசயங்கள், குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறிவிட்டார்.

அவரது ஒவ்வொரு படமும் ஆச்சர்யம் தரும். இந்தப்பட டிரெய்லரே மிரட்டிவிட்டது. ஹாலிவுட் படம் போல் உள்ளது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் KE ஞானவேல் ராஜா பேசியது…

‘அட்டகத்தி’ துவக்கத்துக்கு வெங்கட் பிரபு தான் காரணம். அவர் தான் என் அஸிஸ்டெண்ட் படம் பண்ணிருக்கார் வாங்கன்னு கூட்டிப்போனார். படம் பிடித்தது. அதை விட ரஞ்சித் பிடித்துப்போனார்.

அவரோடு அப்போது துவங்கிய பயணம், மெட்ராஸ் இப்போது விக்ரம் வைத்து படம் பண்ணுவது வரை தொடர்கிறது. ஒரு மனிதனாக ரஞ்சித் பல திறமையாளர்களை வளர்த்துவிட்டுள்ளார். அவர் செய்வதெல்லாம் ஆச்சர்யமாக இருக்கிறது. புக் வெளியிடுகிறார்,

கேஸ்ட்லெஸ் கலக்டிவ் நடத்தி வருகிறார். தான் கொண்ட கொள்கையில் சிறிதும் தடம் மாறாமல் பயணித்து வருகிறார். அவருடன் இணைந்து பயணிப்பது பெருமையாக இருக்கிறது. நட்சத்திரம் நகர்கிறது மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்.

கலைப்புலி தாணு பேசியதாவது…

ரஞ்சித் தனக்கு இருக்கும் நட்புக்களை ஒன்று சேர்த்து பயணிப்பவர். கபாலியில் பயணிக்கும்போது அவரது எண்ணங்களை பகிர்ந்துகொள்வார். அவருக்கு எப்போதும் நான் துணை நிற்பேன்.

பரியேறும் பெருமாள் படத்திற்கு தியேட்டர் கிடைக்காத போது அவருக்கு தெரியாமலேயே தியேட்டர் கிடைக்க ஏற்பாடு செய்தேன். அவரது பாணியில் இருந்து விலகி, ஹைஃபையாக நட்சத்திரம் நகர்கிறது செய்து கொண்டிருக்கிறார். உண்மையில் இந்த படைப்பு அடித்தட்டு மக்களின் கதையை சொல்லும். தம்பிக்கு எனது வாழ்த்துக்கள்.

யாழி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் மனோஜ் பேசியதாவது..

குதிரைவால் படத்திற்கு கோ புரடியூசர் தேடும்போது தான் ரஞ்சித் உடன் நெருங்கி பழகினோம். அவர் செய்து வரும் விசயங்கள் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது. யாழி ஃபிலிம்ஸில் இந்தப்படத்தை செய்யலாம் என்ற போது யாழி ஃபிலிம்ஸ்க்கு இந்தப்படம் சரியாக இருக்குமென்று நினைத்தோம்.

இந்தப்படம் கதையாகவே நிறைய ஆச்சர்யங்கள் இருந்தது, படமும் நன்றாக வந்துள்ளது. நீலம் புரடக்சன்ஸ் பெரிய உதவியாக இருந்தது. அடுத்து பொம்மை நாயகி படமும் நீலமுடன் இணைந்து செய்து வருகிறோம். இன்னும் நிறைய படைப்புகள் திட்டமிட்டிருக்கிறோம். இந்தப்படத்தின் வரவேற்பை பார்க்க ஆவலுடன் உள்ளோம்.

இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது…

‘ஜெய்பீம்’ இந்த ஒரு வார்த்தை தான் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. அட்டகத்தியில் துவங்கிய பயணம் நட்சத்திரம் நகர்கிறது வரை வந்துள்ளது. நான் யாரையும் வளர்த்து விட வில்லை. அவர்கள் திறமையானவர்கள் அவர்களை நான் பயன்படுத்திக்கொண்டேன் அவ்வளவுதான். அவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி.

வெங்கட் பிரபு சாரிடம் தான் நான் கற்றுக்கொண்டேன். சென்னை 28 படம் தான் என் வாழ்வை செதுக்கியது. நாம் நினைத்ததை எடுக்க முடியும் என்பதை கற்றுக்கொடுத்தது.

சசி சார் நான் உதவியாளனாக இருந்த போது என்னை கூப்பிட்டு உட்காரவைத்து பேசினார்.

இளையராஜா கிட்ட நெருங்கவே தயக்கம் இருக்கு.. தூர நின்று பார்ப்பேன் – ரஞ்சித்

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவரை நான் மறக்க மாட்டேன். என் உதவியாளர்களிடம் நான் நன்றாக நடந்துகொள்ள அது தான் காரணம். வெற்றிமாறன் ஒரு படத்தை எந்த ஒரு காம்ப்ரமைஸ் இல்லாமல் எடுக்கலாம் என்பதை நிரூபித்தவர. இந்த மூன்று பேரும் இங்கிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அடுத்ததாக என் வாழ்வில் இரண்டு தயாரிப்பாளர்கள் மிக முக்கியமானவர்கள் ஒன்று கலைப்புலி தாணு சார், ஞானவேல் சார். கலைப்புலி சாரிடம் கபாலி செய்த போது அவர் தந்த சுதந்திரம் பெரியது. அவருக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை எனக்காக ஒத்துக்கொண்டார்.

படம் வெளிவந்த பிறகு ஹிட் என சொன்னாலும் இண்டஸ்ட்ரியில் பெரிதாக பேசவில்லை மன உளைச்சலில் இருந்தேன், ஆனால் அவர் தான் கூப்பிட்டு படத்தின் கலக்சன் காட்டி என்னை பெரிதும் ஊக்கப்படுத்தினார்.

ஞானவேல் சார் அட்டகத்தி ரிலீஸ் செய்யவில்லை என்றால் நான் இன்று இங்கிருந்திருக்க மாட்ட்டேன். இவர்கள் எல்லாம் இங்கிருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன்.

யாழி புரடக்சன் மனோஜ் மற்றும் விக்னேஷ் சினிமாவை சரியாக புரிந்து கொண்டவர்கள் அவர்கள் இன்னும் பெரிய சினிமாக்கள் எடுப்பார்கள் என நம்புகிறேன். இப்படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோரும் மிக திறமையானவர்கள் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் ஒவ்வொருவரும் என்னை புரிந்துகொண்டு எனக்காக உழைத்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி.

என் குடும்பம், மிளிரன், மகிழினி என்னை தொந்தரவு செய்யாமல் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். என் அம்மா 15 வருடம் முன் “பார்த்து போயா ஜெயிச்சுட்டு வா” என்று அனுப்பினார் .

இன்னும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, ஜெயிச்சுட்டிருக்கேன்னு நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி. காதல் சமூகத்தில் அத்தனை எளிதில்லை அதை இந்தப்படம் பேசும்.

Vetrimaaran and Venkat Prabhu praises Director Pa Ranjith

ரஞ்சித் இயக்கிய ஒவ்வொரு படமும்….; ‘நட்சத்திரம் நகர்கிறது’ மேடையில் ‘தெருக்குரல்’ அறிவு ஓபன் டாக்

ரஞ்சித் இயக்கிய ஒவ்வொரு படமும்….; ‘நட்சத்திரம் நகர்கிறது’ மேடையில் ‘தெருக்குரல்’ அறிவு ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் & கலையரசன் நடித்துள்ள படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’.

இந்தப் படத்தில் நாயகியாக துஷாரா விஜயன், ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

கிஷோர் குமார் ஒளிப்பதிவில் டென்மா இசையமைத்துள்ளார். இப்படத்தை யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

நட்சத்திரம் நகர்கிறது

இந்த படம் ஆகஸ்ட் 31-ம் தேதியான விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் நடைபெற்று வருகிறது.

நட்சத்திரம் நகர்கிறது

இந்த மேடையில் பாடலாசிரியர்கள் தெருக்குரல் அறிவு & உமா ஆகியோர் மேடை ஏறினர்.

தெருக்குரல் அறிவு பேசும்போது…

ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படம் எனக்கு வாழ்க்கையில் இளமை பருவம் புரிதலை தந்தது.

அதன் பின்னர் இயக்கிய மெட்ராஸ் கபாலி காலா சார்பட்டா பரம்பரை என அனைத்தும் என் வாழ்வில் ஒவ்வொரு பாடங்களையும் மாற்றங்களையும் தந்தன.

நட்சத்திரம் நகர்கிறது

ஒரு கட்டத்தில் அவருடைய நிறுவனத்தில் இணைந்து இன்று பாடல்களை பாடிக் கொண்டிருக்கிறேன். அவரை என் வாழ்வில் மறக்க முடியாது.

‘நட்சத்திரம் நகர்கிறது’ இந்த படத்தில் முதன்முறையாக ஒரு மெலோடியான காதல் பாடலை பாடியிருக்கிறேன். அந்த வாய்ப்பு தந்ததற்கு நன்றி” என்றார் அறிவு.

நட்சத்திரம் நகர்கிறது

Enjoy Enjaami rapper Arivu open talk about Ranjith movies

காதல் என்றாலே வலி Vs காரணம் இல்லாததே காதல்.; ரஞ்சித் மேடையில் கலையரசன் – காளிதாஸ் மோதல்

காதல் என்றாலே வலி Vs காரணம் இல்லாததே காதல்.; ரஞ்சித் மேடையில் கலையரசன் – காளிதாஸ் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் & கலையரசன் நடித்துள்ள படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’.

இந்தப் படத்தில் நாயகியாக துஷாரா விஜயன், ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

கிஷோர் குமார் ஒளிப்பதிவில் டென்மா இசையமைத்துள்ளார். இப்படத்தை யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படம் ஆகஸ்ட் 31-ம் தேதியான விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் நடைபெற்று வருகிறது.

இந்த மேடையில் ஒரே நேரத்தில் காளிதாஸ் கலையரசன் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் மேடை ஏறினர்.

அவர்கள் பேசும்போது…

காதல் என்றாலே வலி தான் என்றார் காளிதாஸ்.

காரணமே இல்லாமல் வருவதே காதல் என்றார் கலையரசன்.

Kalairasan and Kalidass clash on Natchathiram Nagargiradhu audio launch

‘புஷ்பா 2’ பூஜையில் அல்லு அர்ஜூன் மிஸ்ஸிங்.; அட நம்ம ஹீரோஸ் போல ரீசன் சொல்லலப்பா

‘புஷ்பா 2’ பூஜையில் அல்லு அர்ஜூன் மிஸ்ஸிங்.; அட நம்ம ஹீரோஸ் போல ரீசன் சொல்லலப்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த ‘புஷ்பா’ படம் கடந்த ஆண்டு டிசம்பரில் ரிலீசானது.

இதில் ராஷ்மிகா மந்தனா, பஹத் ஃபாசில், தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ், மைம் கோபி நடிக்க இந்தப் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற “ஓ சொல்றியா மாமா…. மற்றும் ஏ சாமி ஏ சாமி…” ஆகிய இரண்டு பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது

இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளி்லும் வெளியாகி வரவேற்பை பெற்றதால் 2ஆம் பாகத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த நிலையில் ‘புஷ்பா2’ படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது.

ஆனால் இதில் நடிகர் அல்லு அர்ஜுன் கலந்துக் கொள்ளவில்லை.

நியூயார்க்கில் அமெரிக்கா – இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் அல்லு அர்ஜுன் பங்கேற்றுள்ளார்.

76-வது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் கிராண்ட் மார்ஷல் விருந்தினராக இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துபவராக அல்லு அர்ஜூன் அழைக்கப்பட்டு இருக்கிறாராம்.

இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அல்லு அர்ஜுன் விழாவில் கலந்து கொண்டிருப்பதால் இதுபோன்ற காரணத்தை நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் உள்ளூரிலேயே இருந்தும் சில நடிகர்கள் தங்கள் படத்தின் பூஜைக்கு கூட வராமல் இருப்பது இங்கே கண்டிக்த்தக்கது.

Allu Arjun not participated in Pushpa 2 pooja

‘சினம்’ கொண்டாலும் சிம்புக்கு பின்னால் வரும் அருண்விஜய்

‘சினம்’ கொண்டாலும் சிம்புக்கு பின்னால் வரும் அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான ‘தமிழ் ராக்கர்ஸ்’ படம் கடந்த வாரம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இதனையடுத்து அறிவழகன் – அருண் விஜய் கூட்டணியில் உருவான மற்றொரு படமான ‘பார்டர்’ படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்தனர் ரசிகர்கள்.

இந்த நிலையில் அருண் விஜயின் மற்றொரு படமான ‘சினம்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர்.

இந்த படத்தை ஜி என் ஆர் குமரவேலன் இயக்கியுள்ளார். சபீர் இசையமைத்துள்ளார்.

அருண் விஜய்யின் தந்தையும் நடிகருமான விஜயகுமாரின் மூவி சிலைட்ஸ் பிரைவேட் லிமிடெட் புரோடக்சன் ஹவுஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

இது கிரைம் திரில்லர் படமாக தயாராகியுள்ளது. பாரி வெங்கட் என்ற சப்-இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார் அருண்விஜய்.

இந்த படம் செப்டம்பர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக புதிய போஸ்டரை வெளியிட்டு பட குழு அறிவித்துள்ளது.

இதற்கு முந்தைய நாளில் செப்டம்பர் 15ஆம் தேதி சிலம்பரசன் நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

சிம்பு நடித்துள்ள இந்த படத்தை கௌதம் மேனன் இயக்க ஐசரி கணேஷ் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 2ல் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

Simbu and Arun Vijay movies release updates

More Articles
Follows