கமல் தயாரிக்கும் படத்தில் விக்ரம்-அக்சராஹாசன் கேரக்டர் அப்டேட்ஸ்

vikram and akshara haasanகமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் பாடகியாவும் நடிகையாகவும் கலக்கி வருகிறார்.

2வது மகள் அக்சராஹாசன் உதவி இயக்குநராகவும் நடிகையாக தன் சினிமா பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இவர் ஹிந்தியில் அமிதாப்பச்சன் மற்றும் தனுஷ் உடன் இணைந்து ஷமிதாப் என்ற படத்தில் நடித்தார்.

அதன்பின்னர் தமிழில் அஜித்தின் விவேகம் படத்தில் நடாஷா என்றொரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார்.

அதன்பிறகு கமலின் சபாஷ் நாயுடு படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

தற்போது தன் தந்தையின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.

இதில் நாயகனாக விக்ரம் நடிக்க, ராஜேஷ் எம் செல்வா இப்படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் விக்ரம் மற்றும் அக்சராஹாசனின் வேடங்கள் எதிரும் புதிருமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாம்.

இதன் படப்பிடிப்பு 2018 ஜூலையில் தொடங்குகிறது.

Overall Rating : Not available

Related News

அண்மைக்காலமாக அஜித் நடித்த வீரம், வேதாளம்,…
...Read More
விவேகம் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை…
...Read More
விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் நடித்து…
...Read More

Latest Post