‘அர்த்தங்கி ரே’ படத்தில் ஏஆர்.ரஹ்மான்-அக்சய்குமார்-தனுஷ்

‘அர்த்தங்கி ரே’ படத்தில் ஏஆர்.ரஹ்மான்-அக்சய்குமார்-தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Atrangi Re stillsகோலிவுட்டில் கலக்கிய போதே பாலிவுட் படத்தில் நடித்தார் தனுஷ்.

ராஞ்சனா, ஷமிதாப் ஆகிய 2 ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார்.

இதனையடுத்து ஹாலிவுட் படத்திலும் நடித்துவிட்டார்.

மீண்டும் கதை வசனம் எழுதி நடிக்கும் ‘அசுரன்’ தனுஷ்

தற்போது ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹிந்திப் படத்தில் நடிக்கிறார்.

அர்த்தங்கி ரே என இந்தப் படத்திற்கு டைட்டில் வைத்துள்ளனர்.

ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இப்படத்தை இயக்குகிறார்.

அக்ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோரும் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஹரி இயக்கத்தில் சூர்யாவுடன் மோதும் பிரசன்னா

ஹரி இயக்கத்தில் சூர்யாவுடன் மோதும் பிரசன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya prasannaஜிவி. பிரகாஷ் இசையில் சுதா கொங்காரா இயக்கியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.

இந்த படத்தை வருகிற ஏப்ரல் மாதம் வெளியிட உள்ளனர்.

இதனையடுத்து ஹரி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

ரஜினி-விஜய்யை அடுத்து சூர்யாவுடன் இணையும் மாளவிகா

இதில் மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யாவுக்கு வில்லனாக பிரசன்னா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

ஏற்கெனவே அஞ்சாதே, திருட்டு பயலே 2 போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார் பிரசன்னா என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் இல்லாமல் மீண்டும் இணையும் ‘நானும் ரவுடிதான்’ கூட்டணி.?

தனுஷ் இல்லாமல் மீண்டும் இணையும் ‘நானும் ரவுடிதான்’ கூட்டணி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay sethupathi and nayantharaவிஜய் சேதுபதியும், நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கினார்.

விக்னேஷ் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த படம் நானும் ரவுடிதான்.

விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ஜோடியாக நடித்து இருந்தனர்.

இந்த படத்தை தனுஷ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்

படமாகிறது நயன்தாரா- விக்னேஷ்சிவனின் காதல்

இப்பட சூட்டிங்கின் போதே நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர அது தற்போது வரை நீடித்து வருகிறது.

ஏற்கெனவே பிரபுதேவா, சிம்பு ஆகியோரை கழட்டிவிட்ட நயன்தாரா இவரையாவது திருமணம் செய்வார் என கூறப்படுகிறது.

இதனிடையில் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்குவதாக அறிவித்தார் விக்னேஷ் சிவன். ஆனால் பட பட்ஜெட் அதிகமானதால் அந்த படத்தை கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மீண்டும் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை ஜோடியாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

டப்பிங் யூனியன் தேர்தல்; ராதாரவியுடன் மோதும் சின்மயி

டப்பிங் யூனியன் தேர்தல்; ராதாரவியுடன் மோதும் சின்மயி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Radha Ravi chinmayiசில மாதங்களுக்கு முன்னால் பெண்கள் பாலியல் சம்பந்தமான ‘மீடூ’ விவகாரத்தில் ராதாரவிக்கும் சின்மயிக்கும் மோதல்கள் வெடித்தன.

சின்மயி கூறிய புகார்களை ராதாரவி கடுமையாக விமர்சித்தார்.

இந்த மோதல் வலுக்கவே சின்மயி சந்தா செலுத்தவில்லை என கூறி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் சின்மயி.

பின்னர் கோர்ட்டில் முறையிட்டு மீண்டும் உறுப்பினர் ஆனார்.

பாலியல் தொல்லைக்கும் வைரமுத்துக்கு டாக்டர் பட்டம் தரலாம்… சின்மயி எதிர்ப்பு

இந்த நிலையில் விரைவில் டப்பிங் யூனியன் தேர்தல் நடைபெற உள்ளது.

தென்னிந்திய சினி, டெலிவிஷன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தில் சுமார் 1600 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்கத்தின் தலைவராக நடிகர் ராதாரவி இருந்துவருகிறார்.

கடந்த 2018ம் ஆண்டு இதற்கான தேர்தல் நடைபெற்றது.

தற்போது அவரின் பதவி காலம் முடிவதால் வரும் பிப்ரவரி 15ந்தேதி சங்கத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.

தலைவர் பதவிக்கு ராதாரவி மீண்டும் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து ராமராஜ்யம் என்ற அணி பெயரில் பாடகி சின்மயி களம் இறங்குகிறார்.

அதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ரஜினி-விஜய்யை அடுத்து சூர்யாவுடன் இணையும் மாளவிகா

ரஜினி-விஜய்யை அடுத்து சூர்யாவுடன் இணையும் மாளவிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya malavika mohananரஜினி நடித்த பேட்ட படத்தில் ச்சிகுமார் மனைவியாக நடித்தவர் மாளவிகா மோகனன்.

இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஹரி இயக்கத்தில் சூர்யாவுடன் மோதும் பிரசன்னா

இந்த நிலையில், ஹரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

‘மிஸ் இந்தியா 2020’ அழகி பட்டத்தை வென்ற சென்னை பெண் ‘பாஷினி பாத்திமா’..!

‘மிஸ் இந்தியா 2020’ அழகி பட்டத்தை வென்ற சென்னை பெண் ‘பாஷினி பாத்திமா’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Miss india 2020 Bashini FathimaGIE புரொடக்சன் சார்பில் திருநங்கை ஆலி சர்மா என்பவர் வருடந்தோறும் குளோபல் மிஸ்டர் அண்ட் மிஸ் இந்தியா ஆசியா போட்டியை நடத்தி வருகிறார்.

கடந்த வருடம் முதல் நடைபெறும் இந்த போட்டியின் இரண்டாவது வருடமாக 2020 ஆம் வருடத்திற்கான ‘குளோபல் மிஸ்டர் அண்ட் மிஸ் இந்தியா ஆசியா 2019-2020’ போட்டியின் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது.

இதில் இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த சுமார் 200 பெண்கள் வரை கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து மூன்று பெண்கள் இந்த போட்டியில் கலந்துகொண்டனர்.

இந்த இறுதிச்சுற்றில் சென்னையை சேர்ந்த ‘பாஷினி பாத்திமா’ என்கிற 19 வயது இளம்பெண் 2020-ஆம் வருடத்திற்கான ‘குளோபல் மிஸ் இந்தியா ஆசியா 2019-2020’ அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

More Articles
Follows