மோசமான விமர்சனங்களால் கசக்கி பிழிந்த ஜுஸாகும் *ஜுங்கா*

Why Vijay Sethupathis Junga became disappointed movie to audienceகோகுல் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து பணியாற்றிய ஜுங்கா திரைப்படம் கடந்த ஜீலை 27ஆம் தேதி வெளியானது.

இப்படத்திற்கு ஆரம்பத்தில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதற்கு முக்கியமான காரணங்களாக சிலவற்றை விமர்சகர்கள் கூறிவருகிறார்கள்.

விஜய்சேதுபதியின் டயலாக் டெலிவரிக்கு எப்போதும் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் நன்றாக இருக்கும்.

ஆனால், இந்த படத்தில் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றார் அவர்.

படம் முழுவதும் கத்திக் கொண்டே இருக்கிறார். கஞ்ச டானாக இருக்கலாம். ஆனால் கதற கதற கத்திக் கொண்டே இருந்துவிட்டார்.

மடோனா கேரக்டர் படத்துக்கு தேவையில்லை என தோன்ற வைத்தது. அதுவும் கவண் படத்தில் நம் கவனம் ஈர்த்த அழகான மடோனா இதில் ரசிக்கும்படியே இல்லை.

படத்தில் தேவையில்லாத பாடல்கள் ஆங்காங்கே இடம் பெற்றன.

விஜய் டிவி பாலா வரும் பாடல் ரசிகர்களுக்கு சோதனை பாடலாக அமைந்தது.

ரசிகனை ரசிக்கும் தலைவா பாடலும் அந்த பாடல் வரிகளும் எதற்கு? என்றே கேட்க தோன்றுகிறது.

ஒரு டான் என்றால் கூட பத்து பேர் இருப்பார்கள். இதில் யோகிபாபு என்ற ஒருத்தர் மட்டுமே இருக்கிறார்.

அப்படியிருக்கும்போது யாருக்கு? யார் தலைவன் என்றே தெரியவில்லை. ஏதோ பாடல் வரிகள் மாஸாக இருக்க வேண்டும் என்று வைக்கிறார்களா? என்று தெரியவில்லை.

ஒரே பாடலில் டான் ஆகி டார் டார் என ரசிகர்களை இந்த ஜுங்கா கிழித்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

யோகிபாபு, டான் அம்மா சரண்யா, டான் பாட்டி விஜயா ஆகியோர் மட்டும் ஆறுதலாக இருந்தார்கள்.

சாயிஷா ஆடும் அளவுக்கு இதில் அவர் நடிப்புக்கு தீனி ஏதுவுமில்லை.

சாயிஷாவுடன் சேதுபதிக்கு மெமிஸ்டரியும் இல்லை. எதுவுமில்லை. அதுவும் காதலை சொல்லும் நேரத்திலும் கத்தி கத்தியே பேசுகிறார்.

எத்தனையோ டான் படங்களில் காதலை பார்த்துக்கிறோம். ஆனால் இதில் டான் இனி டாவு அடிக்கக்கூடாது என பன்ச் வேற பேசியிருக்கிறார்.

டான் என்றால் மாஸாக இருக்க வேண்டும். ஆனால் இதில் கண்களில் மை வரைந்துக் கொண்டு ரசிகர்களை பயமுறுத்திவிட்டார் விஜய்சேதுபதி.

பிளாக் காமெடி என்ற பெயரில் ரசிகர்களுக்கு பெரும் சோதனையான படம் தான் இது.

ஆக.. இப்படம் திறமையான கலைஞன் விஜய்சேதுபதிக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துவிட்டது என்றே கூற வேண்டும்.

அடுத்த படத்தில் வீறு கொண்டு வருவார் விஜய்சேதுபதி என நம்பலாம்.

Why Vijay Sethupathis Junga became disappointed movie to audience

Overall Rating : Not available

Related News

விஜய்சேதுபதியும், அருண்பாண்டியனும் இணைந்து தயாரித்துள்ள படம்…
...Read More
விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள படம் ஜுங்கா.…
...Read More

Latest Post