ஒரே படத்தில் விதவிதமான தோற்றங்களில் நம் அபிமான நடிகர்கள் நடித்துள்ளனர்.
தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்தார் கமல். அதுபோல் அந்நியன், ஐ படத்தில் வித்தியாசமான தோற்றங்களில் விக்ரம் நடித்திருந்தார்.
மூன்றுமுகம், சிவாஜி, எந்திரன் படங்களில் ரஜினியும், வில்லன், வரலாறு படங்களில் அஜித்தும் இதுபோல் விதவிதமான தோற்றங்களில் நடித்தனர்.
பேரழகன், வாரணம் ஆயிரம், 24 படங்களில் சூர்யாவும் வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருந்தார்.
தற்போது விஜய்சேதுபதியும் இந்த வரிசையில் இணைந்து விட்டார்.
இவர் பெரும்பாலும் தாடியுடன் நடிப்பார் அல்லது சேவிங் செய்த முகத்துடன் நடிப்பார்.
ஆனால் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தர்மதுரை’ படத்தில் வழக்கமான தாடி கேரக்டர், மருத்துவ கல்லூரி மாணவர், முழுக்க சேவிங் செய்த ஒரு கேரக்டர் என மூன்று வேடங்களில் நடித்து இருக்கிறாராம்.