சர்கார் டைட்டில்.; அமிதாப் படத்தலைப்பை வைத்ததால் விஜய் ரசிகர்கள் அதிருப்தி!

சர்கார் டைட்டில்.; அமிதாப் படத்தலைப்பை வைத்ததால் விஜய் ரசிகர்கள் அதிருப்தி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkar stillsவிஜய்யின் 62வது படத்திற்கு *சர்கார்* எனத் தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக்கை சற்றுமுன் வெளியிட்டனர்.

இது சில விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

இதற்கு அவர்கள் கூறிய காரணங்கள்…

தமிழன் என்று பெருமையாக தளபதி விஜய் ரசிகர்கள் சொல்லி கொள்வோம்.

ஆனால் சர்கார் என்ற சொல் ஹிந்தி சொல்.

மேலும் இதே பெயரில் அமிதாப்பச்சன் & அபிஷேக் பச்சன் நடித்த படம் 2005ல் வந்து விட்டது.

புது தலைப்பாக அதுவும் தமிழில் வைத்திருந்தால் இன்னும் கெத்தாக இருந்திருக்கும் என்கிறார்கள்.

இருந்தாலும் நாளை தளபதி பிறந்தநாளை கெத்தாக கொண்டாடுவோம் என்றனர்.

பிலிமி ஸ்ட்ரீட் செய்தி எதிரொலி: விஜய் 62 தலைப்பு சர்கார்

பிலிமி ஸ்ட்ரீட் செய்தி எதிரொலி: விஜய் 62 தலைப்பு சர்கார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkarஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்டோர் நடித்து வரும் தளபதி 62.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார.
இந்நிலையில் இப்படத்திற்கு சர்கார் என பெயரிட்டு உள்ளனர்.

பூமராங் படத்துக்காக சொந்த குரலில் டப்பிங் பேசிய மேகா ஆகாஷ்

பூமராங் படத்துக்காக சொந்த குரலில் டப்பிங் பேசிய மேகா ஆகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

megha akashஒரு கதாபாத்திரத்தின் அழகிய சாரம் அதன் குரலுடன் சேர்த்தால் தான் முழுமையடைகிறது. உண்மையில், அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பது அந்த குரல் தான். இதை ஒரு நடிகர் நிறைவேற்றும்போது தான் ​​ செயற்கையாக இல்லாமல் அந்த கதாபாத்திரங்களின் உண்மைத்தன்மை வெளிப்படுகிறது.

மேகா ஆகாஷ் தன் சொந்த குரலில் டப்பிங் பேச எடுத்த முயற்சியால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்.

விரைவில் வெளியாக இருக்கும் அவரின் ‘பூமராங்’ படத்தில் அவரின் அசத்தலான நடிப்பு மற்றும் மயக்கும் அழகுடன் அவரது குரலும் உங்களை வசீகரிக்கும்.

இயக்குனர் கண்ணன் திரைக்கதை எழுதும்போது, கதாபாத்திரங்களை உருவாக்குவதில் மிகவும் ‘பர்ஃபெக்‌ஷனை’ விரும்புபவர். மேலும், வேறு ஒருவரை டப்பிங் பேசவைத்து கதாபாத்திரம் முழுமையடையாமல் இருப்பதை அவர் விரும்புவதில்லை.

அதனால் படத்தில் நடித்த நடிகர்களையே டப்பிங் பேச சொல்லி வலியுறுத்துவார்.

அவரது முதல் படமான ‘ஜெயம் கொண்டான்’ படத்தில் பாவனாவை டப்பிங் பேச வைத்ததில் இருந்தே தெளிவாக தெரிந்தது. மேகா ஆகாஷும் இதில் சேர்வார்.

இது பற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது, “மேகா ஆகாஷை சொந்த குரலில் டப் செய்ய வலியுறுத்துவதற்கு முக்கிய காரணமே நடிகை மேகா ஆகாஷ் தான்.

பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரத்தில் அவருடைய சிறப்பான நடிப்பு அப்படி. மிக சிறப்பாக நடித்திருக்கிறார், படத்தை பார்த்து நாங்கள் வியந்தோம்.

அவருடைய திறமைகள் அவளுக்கு டப்பிங் செய்யும் வேறு சில கலைஞர்களால் மறைந்து போவதை நாங்கள் விரும்பவில்லை.

ஆரம்பத்தில், மேகா ஆகாஷ் தயக்கத்தோடு தான் இருந்தார். ஆனால் அவர் அதை செய்தபோது, ​​எங்களுக்கு நிறைவாக அமைந்தது” என்றார்.

மசாலா பிக்ஸ் சார்பில் கண்ணன் தயாரித்து, இயக்கியிருக்கிறார். அதர்வா முரளி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் இந்துஜா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் உபென் படேல் வில்லனாக நடித்திருக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி காமெடியில் கலக்க, காமெடி நடிகர் சதீஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

2017 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பான இந்துஜா பார்வையாளர்களைக் கவரக்கூடிய ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

ஏராளமான திறமையாளர்களின் சங்கமமான இந்த “பூமராங்” நிச்சயம் பேசப்படும் படமாக அமையும்” என பெருமையுடன் கூறுகிறார் இயக்குனர் ஆர் கண்ணன்.

ரஜினி குடித்த தேநீருக்கும் பெயர் வைத்த டார்ஜிலிங் ரிசார்ட்

ரஜினி குடித்த தேநீருக்கும் பெயர் வைத்த டார்ஜிலிங் ரிசார்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth villaரஜினிகாந்த் நடிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங் மற்றும் அதை சுற்றி உள்ள மலை பிரதேசங்களில் நடந்து வருகிறது.

30 நாட்கள் இந்த படத்துக்காக தனது தேதிகளை கொடுத்து இருக்கிறார் ரஜினி.

இந்த படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் கடந்த 10 நாட்களாக குர்சியாங்கில் உள்ள அலிதா என்ற தனியார் விடுதியில் தங்கி இருக்கிறார்.

இந்த விடுதியில் உள்ள டைரக்டர்ஸ் பங்களா என்னும் இல்லத்தில் தங்கினார்.

ரஜினி தங்கியதால் இந்த விடுதி பிரபலமாக மாறிவிட்டது. அவர் தங்கியதை நினைவு கூறும் வகையில் அந்த இல்லத்தின் பெயரையே ரஜினிகாந்த் வில்லா #3 என்று மாற்றி இருக்கிறார் விடுதியின் அதிபர்.

இது குறித்து விடுதியின் இயக்குனர் மேகுல் பரேக் கூறும்போது…

‘சூப்பர் ஸ்டார் எங்கள் விடுதியில் தங்கியது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்.

அவரது நினைவாக ஒரு மரம் நட்டு, அதற்கு புதிதாக வண்ணம் பூச உள்ளோம்.

இனி அவர் தங்கிய அந்த விடுதி இல்லம் ரஜினிகாந்த் பெயரிலேயே அழைக்கப்படும்’ என்று கூறி இருக்கிறார்.

ரஜினி தங்கி இருந்த நாட்களில் பருகிய தேநீருக்கு தலைவா ஸ்பெ‌ஷல் என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.

அந்த தேநீர், விடுதியின் வரவேற்பறையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு டிரேயில் வைக்கப்பட்டுள்ளது.

Big Breaking : ஹிந்தி சொல்லில் மத்திய அரசை குறிக்கும் விஜய் 62 டைட்டில்

Big Breaking : ஹிந்தி சொல்லில் மத்திய அரசை குறிக்கும் விஜய் 62 டைட்டில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்டோர் நடித்து வரும் தளபதி 62.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

நாளை ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை ஜுன் 21ல் இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளனர்.

இப்படத்திற்கு எஸ் -S என்று தொடங்கி ஆர் -R எழுத்தில் ஹிந்தி சொல்லில் டைட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த சொல் மத்திய அரசை குறிக்கும் என சொல்லப்படுகிறது.

டிராஃபிக் ராமசாமி படத்திற்கு இசையமைத்தது பெருமை..: பாலமுரளி பாலு

டிராஃபிக் ராமசாமி படத்திற்கு இசையமைத்தது பெருமை..: பாலமுரளி பாலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

balamurali baluஇசையமைப்பாளர் பாலமுரளி பாலு அறிக்கை…

நான் “பிச்சாங்கை” படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நாள் முதல் இன்று வரை, எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இதுவரை பீச்சாங்கை, ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்கள் எனது இசையில் வெளியாகியுள்ளது.

நாளை (22ம் தேதி, ஜூன் மாதம்) கீரின் சிக்னல் தயாரிப்பில், விக்கி இயக்கத்தில், பிரபல இயக்குனர் S.A.சந்திரசேகர் நடிப்பில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் “டிராபிக் ராமசாமி” படத்திற்கு இசையமைத்துள்ளேன்.

“டிராபிக் ராமசாமி” படத்திற்கு இசையமைத்துள்ளதை மிகவும் பெருமைக்குறிய விஷயமாக கருதும் அதே வேளையில் எனது மனமார்ந்த நன்றியை “டிராபிக் ராமசாமி” படக்குழுவினருக்கு தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் ஆர்யா நடிக்கும் “கஜினிகாந்த்” மற்றும் “பல்லு படாம பாத்துக்க”, மீடியா மார்ஷல் தயாரிப்பில் அருள்.S இயக்கத்தில் உருவாகும் “தட்றோம் தூக்குறோம்” ஆகிய படங்களுக்கு நான் இசையமைத்துள்ளேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இத்தருணத்தில் எனது இசை பயணத்திற்கு முழுபலமாய் விளங்கும் பத்திரிகை ஊடக நண்பர்கள் மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

More Articles
Follows