தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2016 ஆண்டு டிசம்பர் மற்றும் இந்தாண்டு ஜனவரி ஆகிய இரண்டு மாதங்களில் நிறைய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருந்தும் வெளியாகவில்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம், வர்தா புயல், பணத் தட்டுப்பாடு, ஜல்லிக்கட்டு போராட்டம் என பல காரணங்கள் அவைகள் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தன.
தற்போது எல்லாம் முடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதால் தங்கள் படங்களை வெளியிட தயாராகிவிட்டனர் தயாரிப்பாளர்கள்.
இதில் விஜய் ஆண்டனி நடித்துள்ள எமன் படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
Vijay antonys Yeman release on February 24