சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் இணையும் இளைய தளபதி – புரட்சி தளபதி

சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் இணையும் இளைய தளபதி – புரட்சி தளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தின் டீசர் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது.

இந்த டீசரை பார்த்து பாராட்டியதுடன் இந்த டீசரை வெளியிட்டார் இளைய தளபதி விஜய். அப்போது நடிகர் விஜய்யும் விஷாலும் சந்தித்து பேசிக்கொண்டனர்.

மேலும் விஜய்யை இயக்க தான் ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவருக்காக இரண்டு கதைகளை தயார் செய்து வைத்திருப்பதாகவும் விஜய்யிடம் தெரிவித்துள்ளார் விஷால்.

அப்போது..”வா நண்பா.. நாம் சேர்ந்து பயணிப்போம்..” என்று விஜய் தெரிவித்தார் எனவும் கூறப்பட்டது.

மேலும் விஜய்க்கு பூங்கொத்து எதுவும் கொடுக்காமல் அவரது பெயரில் அன்னதானம் செய்து ரசீது கொடுத்து விஜய்யை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார் விஷால்.

இவர்கள் இருவரும் அரசியல் குறித்தும் பேசியதாக தகவல்கள் வந்துள்ளன.

அப்போது.. ” நான் உங்கள் ரசிகனாக இருந்து வருகிறேன் நீங்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தால் உங்களை தயாரிக்க தயாராக இருக்கிறேன் என தெரிவித்தாராம் விஷால்.

“கண்டிப்பாக உங்களின் ஆதரவு தேவை என விஷாலிடம் விஜய் தெரிவித்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Vijay and Vishal joins in politics tooo

வனிதாவின் 3வது கணவர் பீட்டர் மரணம்.; Ex Wife ரியாக்‌ஷன் என்ன.?

வனிதாவின் 3வது கணவர் பீட்டர் மரணம்.; Ex Wife ரியாக்‌ஷன் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்திருந்தார்.

நடிகை வனிதா ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து விவாகரத்து செய்த நிலையில் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் பீட்டர் பால்.

வனிதா விஜயகுமார் மூன்றாவது திருமணம் செய்தது சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் வனிதா விஜயகுமாரின் திருமண வாழ்க்கை அதிக நாட்கள் நீடிக்க வில்லை.

இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பீட்டர் பாலை திடீரென விவாகரத்து செய்துவிட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

சில தினங்களுக்கு முன்பு பீட்டர் பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று ஏப்ரல் 29ஆம் தேதி பீட்டர் பால் காலமானார்.

அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால், வனிதா விஜயகுமார் இதுவரை தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் எந்த ஒரு செய்தியையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

vanitha vijayakumar 3rd husband peter paul passed away

‘பொன்னியின் செல்வன் 2’ முதல்நாள் வசூல் என்ன?.; PS1 சாதனையை முறியடித்ததா.?

‘பொன்னியின் செல்வன் 2’ முதல்நாள் வசூல் என்ன?.; PS1 சாதனையை முறியடித்ததா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் ‘பொன்னியின் செல்வன் 2’.

‘பொன்னியின் செல்வன் 2’ படம் நேற்று உலகம் முழுவதும் 3200+ திரையரங்குகளில் வெளியானது.

‘பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் 2’ முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ 38 கோடியை உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.

‘பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்’ படம் மிகப்பெரிய ஓப்பனிங்கைப் பெற்றாலும், அதன் ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ படத்தின் முதல் நாள் சாதனைகளை முறியடிக்க முடியவில்லை.

செப்டம்பர் 30, 2022 அன்று வெளியான ‘பொன்னியின் செல்வன் 1’, வெளியான முதல் நாளில் ரூ.80 கோடி வசூல் செய்தது. இருப்பினும், முன்னோட்டம் அதிகாலை காட்சிகளைக் கொண்டிருந்தது மற்றும் 4,500 க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டது.

ஆனால் அரசாங்க உத்தரவைத் தொடர்ந்து இரண்டாம் பாகம், அதன் முதல் காட்சி காலை 9 மணிக்கு மட்டுமே இருந்தது மற்றும் 3,200 க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

‘Ponniyin Selvan 2’ first day box office collection

BREAKING அஜித் – விக்ரம் – சிம்பு பட தயாரிப்பாளரும் நடிகருமான சக்கரவர்த்தி காலமானார்

BREAKING அஜித் – விக்ரம் – சிம்பு பட தயாரிப்பாளரும் நடிகருமான சக்கரவர்த்தி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒவ்வொரு சினிமா நடிகருக்கும் ஆஸ்தான தயாரிப்பாளர் ஆஸ்தான இயக்குனர் என்பவர் ஒருவர் இருப்பார்.

அதுபோல ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஆஸ்தான நடிகர் ஒருவர் இருப்பார். அவரை வைத்து பல படங்களை அந்த நிறுவனம் தயாரிப்பது வழக்கம்.

நடிகர் அஜித்துக்கு ராசியான ஆஸ்தான நிறுவனம் என்றால் அது நிக் ஆர்ட்ஸ் என்ற நிறுவனம்தான். இதன் உரிமையாளர் எஸ் எஸ் சக்கரவர்த்தி.

இவர் அஜித் நடித்த பல படங்களை 1990களில் தயாரித்தார். அஜித் நடித்த முகவரி, வாலி, சிட்டிசன், ராசி, வரலாறு, ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ உள்ளிட்ட 9 படங்களை தயாரித்து இருக்கிறார்.

ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தங்களது கூட்டணியை முறித்துக் கொண்டனர்.

சிம்பு நடித்த ‘காளை’ மற்றும் ‘வாலு’ ஆகிய இரு படங்களையும் இதே நிறுவனம்தான் தயாரித்து இருந்தது. மேலும் விக்ரம் நடித்த ‘காதல் சடுகுடு’ என்ற படத்தையும் எஸ் எஸ் சக்கரவர்த்தி தயாரித்திருந்தார்.

2015க்கு பிறகு தற்போது நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் படங்களை தயாரிப்பதை நிறுத்திக் கொண்டது.

எஸ் எஸ் சக்கரவர்த்தி கடந்த சில மாதங்களாகவே கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று ஏப்ரல் 29ஆம் தேதி
எஸ் எஸ் சக்கரவர்த்தி காலமானார். இவரது உடல் இன்று மாலைக்குள் அடக்கம் செய்யப்படுகிறது.

இந்த செய்தி திரையுலகினர் மத்தியிலும் அஜித் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய சோகத்தை ஏற்படுத்தும்.

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கி விமல் நடித்த ‘விலங்கு’ என்ற இணையத் தொடரில் காவல் அதிகாரியாக எஸ் எஸ் சக்கரவர்த்தி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SS Chakravarthi
Old no 42 new no 36,
New bangaru colony street,
west kknagar (Near Gemini lab)
Chennai.

Producer Nic Arts SS Chakravarthi passes away

NTR 100 : தெலுங்கில் பேசி அசத்திய ரஜினி.; சந்திரபாபு நாயுடு – பாலையா மகிழ்ச்சி

NTR 100 : தெலுங்கில் பேசி அசத்திய ரஜினி.; சந்திரபாபு நாயுடு – பாலையா மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான என்.டி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா இன்று ஏப்ரல் 28 விஜயவாடாவில் கொண்டாடப்படுகிறது.

இதில் பங்கேற்க விஜயவாடா சென்ற ரஜினிகாந்தை விமான நிலையத்தில் என்.டி.ஆரின் மகனும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா வரவேற்றார்.

ரஜினி

பொன்னாடை அணிவித்து வரவேற்ற பாலகிருஷ்ணாவை ரஜினிகாந்த் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதன் பின்னர் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ரஜினிகாந்த் சந்தித்தார். அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த NTR 100 விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ரஜினி

(இந்த விழா அழைப்பிதழில் அகில இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என அச்சிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.)

என் டி ஆரின் திருவுருவுச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார் ரஜினிகாந்த்.

இந்த விழா மேடையில் ரஜினியை பேச தொகுப்பாளர் ரஜினி காரு என்று அழைத்த போது தமிழகத்தை போல அரங்கமே அதிர்ந்தது.

ரஜினி

இந்த விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் மேடையில் தெலுங்கிலேயே பேசினார்.

என்.டி.ஆரின் படங்கள் குறித்தும் என் டி ராமராவ் அரசியல் குறித்தும் அவருடன் தனது நட்பு குறித்தும் ரஜினிகாந்த் தெலுங்கில் பேசி அவரது தொண்டர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி

https://www.youtube.com/shorts/-n-mp1pd7EU

Rajini speech in Telugu at NTR 100 Event

மீண்டும் இணையும் ‘கோலமாவு கோகிலா கூட்டணி.; புரொடியூசர் & டைரக்டர் அப்டேட்

மீண்டும் இணையும் ‘கோலமாவு கோகிலா கூட்டணி.; புரொடியூசர் & டைரக்டர் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார் நெல்சன்.

இவர் இயக்கத்தில் 2018 இல் வெளியான ‘கோலமாவு கோகிலா’ இவருக்கு கமர்சியல் இயக்குனர் என்ற பெயரை பெற்று தந்தது.

இதில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்க யோகி பாபு முக்கிய வேடம் ஏற்று நடித்திருந்தார்.

இந்த கூட்டணி பெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் நயன்தாரா – யோகி பாபு இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

‘சர்தார்’ படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை விக்கி என்பவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இந்த புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

Nayanthara Yogi Babu to act together again

More Articles
Follows