அட்லி படத்தில் ஜோதிகா எந்த விஜய்க்கு ஜோடி தெரியுமா.?

அட்லி படத்தில் ஜோதிகா எந்த விஜய்க்கு ஜோடி தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay jothikaபைரவா படத்தை அடுத்து, மீண்டும் தெறி அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதில் விஜய்யுடன் ஜோதிகா, சமந்தா, காஜல், சத்யராஜ், எஸ்ஜேசூர்யா, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பதை பார்த்தோம்.

இதில் விஜய்க்கு எத்தனை கேரக்டர்கள் என்ற விவரங்கள் சரியாக தெரியவில்லை.

ஆனால் முறுக்குமீசை கேரக்டர் உள்ளது என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.

இது ஒரு தாதா கேரக்டராம். இந்த கேரக்டருக்கு ஜோடியாகத்தான் ஜோதிகா நடிக்கிறாராம்.

தற்போது இது சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

Vijay and Jyothika character updates in Atlee movie

‘எம்எல்ஏ.யை விட்டுட்டு ஹீரோஸ்கிட்ட கேட்குறீங்க?’ – ஞானவேல்ராஜா

‘எம்எல்ஏ.யை விட்டுட்டு ஹீரோஸ்கிட்ட கேட்குறீங்க?’ – ஞானவேல்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gnanavelrajaசூர்யா மற்றும் கார்த்தி நடித்த பல படங்களை தயாரித்து வெளியிட்டவர் ஞானவேல்ராஜா.

எப்போதும் சிரித்த முகத்துடன் அமைதியான காணப்படுபவர் இன்று நடந்த விஜய் ஆண்டனியின் எமன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மிகவும் ஆவேசமாக பேசினார்.

அவர் பேசியதாவது…

இது ஆடியோ வெளியீட்டு விழா மேடை. இந்த மேடையில் இதைப் பேசுவது தவறுதான்.

ஆனால், என்னுடைய கோபத்தை எங்கே பேசுவது என்றே தெரியவில்லை.

நாட்டில் நடக்கிற செயல்களை பார்த்தால் மக்களுக்கு கோபம் வருகிறது.

ஆனால் அந்த கோபத்தை ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்த ஆட்களைத் தவிர மற்ற அனைவரிடமும் நிறைய எதிர்பார்க்கிறார்கள்.

ஒரு எம்பி. எம்எல்ஏக்களிடம் எந்த கேள்வியையும் கேட்பதில்லை.

ஆனால், ஒரு நடிகர் விழாவுக்கு வந்தால் குற்றம், வராவிட்டால் குற்றம் என பேசுகிறார்கள்.

எந்த ஒரு பொது நிகழ்வு என்றாலும் சினிமா துறையில் உள்ள கலைஞர்கள் தன் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து செலவு செய்துள்ளார்கள்.

கலைஞர்கள் உங்களை சினிமா மூலம் சந்தோஷப்டுத்த மட்டும்தான்.

அதனை புரிந்து கொண்டு அவர்களுக்கான மரியாதையை திரைத்துறைக்கு அவர்கள் கொடுக்க வேண்டும்” என்று பேசினார் ஞானவேல்ராஜா.

For Public issues question your MLAs dont question Cinema Stars says Gnanavelraja

தமிழ் ராக்கர்ஸை அசிங்கமாக திட்டிய ‘சிங்கம்’ தயாரிப்பாளர்

தமிழ் ராக்கர்ஸை அசிங்கமாக திட்டிய ‘சிங்கம்’ தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Gnanavelrajaவிஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ் நடிப்பில் ஜீவா சங்கர் இயக்கியுள்ள படம் ‘எமன்’.

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் சற்றுமுன் நடைபெற்றது.

இதில் நடிகர்கள் விஜய்சேதுபதி, கலையரசன், சார்லி, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், அறிவழகன், சிங்கம் 3 தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது ஞானவேல்ராஜா பேசும்போது…

“விஜய் ஆண்டனியின் சினிமா வளர்ச்சியை பார்த்து வருகிறேன். சந்தோஷமாக உள்ளது.

இப்படத்தின் வெற்றி மூலம் இயக்குனர் ஜீவா சங்கர் அடுத்த லெவலுக்கு செல்வார்.

ஜெயம் ரவியின் ‘போகன்’ படம் வெளியாகி 2 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் ஃபேஸ்புக்கில் அப்படத்தை வெளியிட்டு உள்ளனர்.

அந்த பக்கத்தில் படத்தை எத்தனையோ லட்சம் பேர் பார்த்துவிட்டார்கள்.

இதனால் அப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு எவ்வளவு பெரிய வலி இருக்கும்?

வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி எங்ளுடைய ‘சி3’ ரிலீஸ் ஆகிறது.

ரிலீஸ் ஆகும்நாளே காலை 11 மணிக்கு நேரலை LIVE STREAMING செய்கிறோம் என தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையத்தளம் பதிவிட்டு இருக்கிறார்கள்.

எவ்வளவு தைரியம் அவர்களுக்கு… (என்று கூறி மிகவும் அசிங்கமான வார்த்தையே கூறி அவர்களை திட்டினார்)

இதை ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் வேடிக்கை பார்த்துக் கொண்டுத்தானே இருக்கிறோம்.

எனவே இதனை ஒழிக்க, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட உள்ளோம்.

அவர்களை ஆறு மாதத்தில் பிடித்து உள்ளே போடுவோம்”. என்று ஆவேசமாக பேசினார்.

Gnanavelraja angry speech about Tamil Rockers and Live Streaming

கமலின் சூப்பர்ஹிட் படத்தலைப்பை பற்றிய சிபிராஜ்

கமலின் சூப்பர்ஹிட் படத்தலைப்பை பற்றிய சிபிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sathya sibirajவிஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படத்தை இயக்கியிருந்தார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

இப்படம் ரிலீஸ் ஆகும் முன்பே, சிபிராஜ் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் இயக்குனர்.

இப்படத்திற்கு, கமலின் சூப்பர் ஹிட் படத்தலைப்பை வைக்க உள்ளதாக வந்த அறிவிப்பை நாம் முன்பே பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்திற்கு சத்யா என்று பெயரிட்டு, தற்போது பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தை சத்யராஜின் குடும்ப நிறுவனமான நாதம்பாள் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் வரலட்சுமி மற்றும் சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

கமல், அமலா நடித்த சத்யா படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படம் 1988ல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Sibiraj Varalakshmi next movie titled Sathya

அஜித்தின் பன்ச் டயலாக்கை பஞ்சாக்கிய பவர் ஸ்டார்

அஜித்தின் பன்ச் டயலாக்கை பஞ்சாக்கிய பவர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nithin‘வேதாளம்’ படத்தில் அஜித் பேசும் பவர்புல் வசனம் தான் ‘தெறிக்க விடலாமா’.

சூப்பர்ஹிட்டான இந்த வசனத்தை காமெடிக்காக அப்படியே உல்டா பண்ணி ‘சிரிக்க விடலாமா’ என்கிற தலைப்பில் ஒரு படம் உருவாகிறது..

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் நிதின் சத்யா, பவர்ஸ்டார் சீனிவாசன் & V.R.விநாயக் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.

இவர்களுக்கு ஜோடியாக லீஷா, புதுமுக நாயகி சௌமியா மற்றும் தீபா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

முக்கியமான கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ் மற்றும் மகாநதி சங்கர், சந்தானபாரதி, கோவை செந்தில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்..

இந்தப்படத்தின் தயாரிப்பாளரான ஜெயக்குமார், இசையமைப்பாளராகவும் கூடவே நடிகராகவும் அறிமுகமாகிறார்.

மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை எழுதி பாடியிருப்பவரும் இவரே.

இந்தப்படத்தை எழுதி இயக்குகிறார் V.B.காவியன். இவர் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ‘ஆயுதபூஜை’ சி.சிவகுமார் மற்றும் ‘உன்னை கொடு என்னை தருவேன்’ கவி காளிதாஸ் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் ஒளிப்பதிவை K.S.முத்து மனோகரன் மேற்கொள்ள, படத்தொகுப்பை கவனிக்கிறார் S.R.முத்துக்கொடப்பா.

பாடகர்கள்: வேல்முருகன், ஜெயக்குமார்
நடனம்: ரமேஷ் கமல், அக்சயா ஆனந்த்
கலை: ஏ.சி.சேகர்
தயாரிப்பு நிர்வாகி: மனோகரன்

Nithin Sathya and Power star Srinivasan starring Sirikka Vidalaama

 

‘காயமடைந்தவனை போட்டோ எடுப்பவனே…’ கமலின் கவிதையை பார்

‘காயமடைந்தவனை போட்டோ எடுப்பவனே…’ கமலின் கவிதையை பார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bharathiyar Kamalகர்நாடக மாநிலத்தில் 18 வயது நிரம்பிய ஒரு இளைஞர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

அப்போது அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் அவரை போட்டோ எடுத்து, சிலர் தங்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் பதிவேற்று கொண்டிருந்தனர்.

இதற்கு சமூக ஆர்வலர்கள் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் இப்படியாக வேடிக்கை பார்த்தவர்கள் பற்றி ஒரு வருடத்திற்கு முன்பே கமல் ஒரு கவிதை எழுதியிருக்கிறாராம்.

அதை தற்போது நினைவு கூர்ந்து, தன் ட்விட்டர் பக்கத்தில் அந்த கவிதைய பகிர்ந்துள்ளார்.

அந்த பாடலை அவர் பேஸ்புக்கில் பதிவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

Kamal Haasan ‏@ikamalhaasan
விபத்தில் சிக்கியவர்க்கு உதவாமல்,வேடிக்கை பார்ப்பவரைச்சாடி வருடங்கட்குமுன் நான் எழுதியது
தெருப்பாடகன்

ஒற்றி ஒற்றி எடுத்தும் சிவப்பாய்
கசிந்தது காயம்
சுற்றி நின்றகூட்டத்தின் நிழலில்
காயம் சரியாய்த் தென்படவில்லை

சற்றே உற்று தெளிவாய்ப் பார்த்ததில் சின்னக்குழிவு பிடரியின் நடுவில்
விட்டுவிட்டு வரும் சிவப்புக்கு நடுவே
தட்டுதட்டாய் துருத்தியதெலும்பு
ரத்தச் சகதியில் சுற்றி நினறவர்

காலணி செய்த ரண ரங்கோலி
போக்கு வரத்துக் கிடைஞ்சலில்லாமல்
ரோட்டின் ஓரம் நகர்த்தினோம் அவனை
பான்ட்டுப் பையில் பர்சும் இல்லை, யார்? எனக் கேட்டால் பதிலும் இல்லை

இரண்டு கட்டையில் காந்தாரத்தில்
ஸ்ருதி பிசகாமல்
கேட்டவைக்கெல்லாம் ஸ்வரமாய் பிடித்தான்
“நிறைய ரத்தம் பிழைப்பது கஷ்டம்”
வேடிக்கை பார்க்கும் பெரியவர் சொன்னார்.

அதைக் கேட்டதுபோல் அவன் பாடிய ஸ்வரத்தை
மாறறிப் பாடினான், கீழ் ஸஜ்ஜமத்தில்.
“கா”வை நிறுத்தி “ஸா” வென்றிசைத்தான்
அடுத்த கேள்வி அனைத்திற்கும் அவன்
“ஸா-கா” என்றான் ஸ்ருதிப் பிழையின்றி
“பாட்டுக் கலைஞன்! கூட்டத்தில் ஒருவர் புதிர் விடுவித்தார்
அதுவும் கேட்டது போல் அவன்
இசைக்கும் ஸ்வரத்தை உடனே இழந்தான்

வெற்றுச் சொல்லாய் ஸா-கா என்றான்
சாவைப் பற்றிய அறிவிப்பென்றார்
ஒதுங்கி நின்ற ஓர் தமிழாசிரியர்
பக்கத்து ஊரில் மருத்துவ வசதி,
பாதி வழியிலே உயிர் பிறிந்ததினால்

காய்கறி லாரியில் ஊரவலம் போனான்
சுற்றி நின்றதால் சுற்றமா என்ன?
அவரவர் வீட்டிற்குப் புறப்பட்டுப் போனோம்
என்றோ வானொலி கீதம் இசைக்கையில்
அல்லது பச்சைக் காய்கறி விற்கும் சந்தையில்

ஸா கா என்றவன் நினைவுகிளம்பும்
ஸா-கா என்று நானும் பாடி அவன்
காந்தாரத்தைக் கொப்பளித்துமிழ்வேன்
குளிக்கும்போது
நினைவிழந்தாலும் என்னைப் போலவன் ஸ்ருதி பிசகாதவன்
அவன் பாடகனா இல்லை பாடத் தெரிந்த வெறும்பாதசாரியா

More Articles
Follows