காலா பர்ஸ்ட் லுக்கால் விஜய்-அஜித்-சூர்யாவுக்கு வந்த ப்ராப்ளம்..?

காலா பர்ஸ்ட் லுக்கால் விஜய்-அஜித்-சூர்யாவுக்கு வந்த ப்ராப்ளம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Vijay Suriyaரஜினிகாந்த் நடிப்பில் தனுஷ் தயாரித்து ரஞ்சித் இயக்கவுள்ள படத்திற்கு காலா என்று தலைப்பிட்டுள்ளனர்.

இதன் சூட்டிங் தொடங்க இன்னும் 3 தினங்கள் இருக்கும் நிலையில் ஜீன் 25ஆம் தேதி இதன் தலைப்பையும் பர்ஸ்ட் லுக்கையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனால் விஜய், அஜித், சூர்யா ரசிகர்கள் தங்கள் ஹீரோக்களிடமும் இயக்குனர்களிடமும் ஒரு சில கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

அதாவது… இன்னும் சூட்டிங்கே தொடங்காத சூப்பர் ஸ்டார் படத்தின் தலைப்பை அறிவித்து பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டு விட்டார்கள்.

ஆனால், நீங்கள் படத்தின் சூட்டிங் முடியும் வரை எங்களை காக்க வைக்கிறீர்களே?

அவர்கள் நடித்து வரும் படங்களின் எண்ணிக்கையை வைத்தே அழைக்க வேண்டியதாக உள்ளது. இது நியாயமா? என சமூக வலைத்தளங்களில் தங்கள் கேள்வியை பதிவிட்டு வருகின்றனர்.

விவேகம் படத்தின் சூட்டிங் பாதி முடிவடைந்த நிலையிலே அதன் டைட்டில் வெளியானது.

அட்லி இயக்கி வரும் விஜய் படத்திற்கும் இன்னும் பெயரிப்படவில்லை.

அதுபோல் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தலைப்பு மட்டுமே வெளியாகியுள்ளது.

இதன் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட ரசிகர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

Vijay Ajith Suriya fans request Actors to announce title before shooting starts

ரஜினி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்த தனுஷ்

ரஜினி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala producer Dhanush gave double treat for Rajinikanth fansரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவுள்ள அவரது 164வது படத்திற்கு “காலா” என்று பெயர் தலைப்பிடப்பட்டு அந்த டிசைன் மட்டும் காலை 10 மணிக்கு இன்று வெளியானது.

இதனையடுத்து சில மணி நேரங்களில் காலா படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவேன் என தெரிவித்து இருந்தார் காலா படத்தயாரிப்பாளர் தனுஷ்.

இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு இரண்டு விதமான பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது.

ஒரு போஸ்டரில் ரஜினி கோபத்துடன் கர்ஜிப்பது போல காணப்பட்டது.

அடுத்த போஸ்டரில் ஒரு ஜீப்பில் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு கூலாக, கெத்தாக ரஜினி அமர்ந்திருப்பது போல ஒன்றும் வெளியானது.

இதன் பின்னணியில் மும்பை நகர சேரி பகுதிகள் இருப்பது போன்று டிசைன் அமைந்துள்ளது.

ஒரே நாளில் தலைப்பையும், அதனைத் தொடர்ந்து பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டு ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் தனுஷ் என்றே சொல்லலாம்.

Kaala producer Dhanush gave double treat for Rajinikanth fans

DArBQBoXcAAz_RJ

‘ரஜினியை காப்பாத்துங்க…’ இந்திய இந்து சத்திய சேனா போலீசில் மனு

‘ரஜினியை காப்பாத்துங்க…’ இந்திய இந்து சத்திய சேனா போலீசில் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடவிருப்பதால், அவருக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் ரஜினிகாந்த் மற்றும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில இந்திய இந்து சத்திய சேனா என்ற அமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் சூழ்நிலை காரணத்தையும் மனதில் கொண்டு தமிழ்நாட்டில் ஒரு பெரிய மாற்றம் உண்டாக்க வேண்டும் என்ற சமூக ஆர்வத்துடன், பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வந்தார்.

இதை சில அரசியல் கட்சிகள் ரஜினிகாந்த் அவர்களின் கருத்திற்கு முரண்பாடாக பேசிக்கொண்டும் மற்றும் சில அமைப்பை சார்ந்தவர்கள் ரஜினிகாந்த் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் அவரது உருவபொம்மையை எரித்தும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

எனவே ரஜினிகாந்த் அவர்களுக்கும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று எங்கள் அகில இந்திய இந்து சத்திய சேனாவின் அமைப்பின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘காலா’ என்றால் என்ன..? மும்பையில் வாழ்ந்த நெல்லை தமிழர்..?

‘காலா’ என்றால் என்ன..? மும்பையில் வாழ்ந்த நெல்லை தமிழர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala movie stillsதனுஷ் தயாரித்து, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள காலா படத் தலைப்பு சற்றுமுன் வெளியானது.

இப்படத்தில் ரஜினியின் முழுப்பெயர் கரிகாலன் என்றும் அதனை சுருக்கி காலா என்று பெயரிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் நெல்லை பகுதிகளில் காலா என்ற சொல்லுக்கு எமன் என்ற பொருள் உள்ளதாம்.

இது நெல்லையில் பிறந்த ஒரு மனிதரின் கதை என்றும் அவர் மும்பை சென்ற பின் எப்படி ஒரு சாம்ராஜ்யத்தை கட்டியாளும் அளவுக்கு எப்படி முன்னேறினார்? என்பதே கதைக்களம் என சொல்லப்படுகிறது.

பாலிவுட் நடிகை ஹீமா குரோஷிமா நாயகியாக நடிக்க, இதன் சூட்டிங் மே 28ஆம் தேதி தொடங்குகிறது.

மனைவி போலீசில் புகார்; என்ன சொல்கிறார் தாடி பாலாஜி…?

மனைவி போலீசில் புகார்; என்ன சொல்கிறார் தாடி பாலாஜி…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Comedy Actor Balaji with his wifeசின்னத்திரை மற்றும் பெரிய திரையில் காமெடி நடிகராக வலம் வருபவர் பாலாஜி. இவருக்கு தாடி பாலாஜி என்ற செல்லப் பெயரும் ரசிகர்களிடையே உண்டு.

இந்நிலையில் இவர் மீது இவரது மனைவி போலீசில் புகார் அளித்திருந்தார் என்பதை பார்த்தோம்.

இதுகுறித்து பாலாஜி என்ன சொல்கிறார் என்றால்…

ஒவ்வொரு குடும்பத்திலும் நடைபெறும் சாதாரண சண்டைதான்.

ஆனால், அதை வைத்து நான் ஜாதியை பெயரை சொன்னதாக குறிப்பிடுகிறார்.

நான் என் மாமனார் வீட்டில்தான் இருக்கிறேன். ஆனால் மாத வாடகை கொடுத்திருக்கிறேன்.

ஆனால் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே போ என்று சொல்கிறார்கள்.

என் மனைவி சிலரின் பேச்சை கேட்டு இப்படி நடந்து கொள்கிறார்.

உன்னை ஜெயில்ல உட்காரவைப்பேன் என்று கூறுகிறார்.

இதில் எங்கள் குழந்தை பாதிக்கப்படுவதை நினைத்தால்தான் கஷ்டமாக இருக்கிறது” என்றார்.

‘ரஜினியின் முடிவு எப்பவும் சரியாகத்தான் இருக்கும்..’ தனுஷ்

‘ரஜினியின் முடிவு எப்பவும் சரியாகத்தான் இருக்கும்..’ தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Dhanushரஜினி அரசியலுக்கு வருவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர் அரசியலுக்கு வந்து மோதி பார்க்கட்டும் என எவரும் குறிப்பிடவில்லை. மாறாக அரசியலுக்கு வரவே கூடாது என பல்வேறு அமைப்புகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷ், ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பிலிம் பேர் திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தனுஷ் கூறியதாவது…

‘ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த பேச்சுகளால் எங்களது குடும்பத்திற்கு எந்த அழுத்தமும் இல்லை.

அரசியல் முடிவு மட்டுமல்ல. எந்த முடிவாக இருந்தாலும் அவர் எடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும்’ என்றார்.

More Articles
Follows