சிவகார்த்திகேயனுடன் இணைய திட்டம் போடும் வெங்கட் பிரபு

சிவகார்த்திகேயனுடன் இணைய திட்டம் போடும் வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and venkat prabhuகடந்த மார்ச் மாதம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பெரும் சர்ச்சையானது.

அங்கு அதிமுக.வினரால் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து இடைத்தேர்தலையே ரத்து செய்தது தேர்தல் ஆணையம் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு அவரது தயாரிப்பில் உருவாகும் புதிய படத்துக்கு ‘ஆர்.கே.நகர்’ என பெயரிட்டுள்ளார்.

இப்படத்தை சரவணராஜன் இயக்கி வருகிறார்.

இதில் நாயகனாக வைபவ் நடிக்க, நாயகியாக சனா, வில்லனாக சம்பந்த் நடித்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவதால். கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

அதே நாளில்தான் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படமும் திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் அலட்சியத்தால் 2 சிறுமிகள் பலி; அந்நியன் நிஜத்திலும் வருவாரா?

அரசின் அலட்சியத்தால் 2 சிறுமிகள் பலி; அந்நியன் நிஜத்திலும் வருவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anniyan movie stillsதமிழகத்தில் பருவமழை தொடங்கிவிட்டது. இதனால் தமிழகத்தின் பல இடங்களிலும் பரவலாக மழை காணப்படுகிறது.

எனவே கடந்த 3 நாட்களாக நிறைய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை, கொடுங்கையூர் பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற கோரி அந்த பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள மின் ஒயர் அறுந்து கிடப்பதால் அதை சரி செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் எவரும் அந்த பகுதிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையில் அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் தங்கள் பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் விளையாடி உள்ளனர்.

அப்போது அதில் உள்ள 2 சிறுமிகளை மின்சாரம் தாக்கி அவர்கள் இறந்துள்ளனர்.

இச்சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் என்ற படத்திலும் இதுபோன்ற காட்சி இருக்கும்.

அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுபோன்ற உயிர்கள் பலியாவது எந்த வித்த்தில் நியாயம்?

மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் இந்த அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்யாமல் இருப்பதன் நோக்கம் என்ன?

அவர்களை தற்போது சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

இதனால் அந்த உயிர்கள் மீட்கப்பட்டு விடுமா என்ன?

இதுபோன்ற அதிகாரிகளை தண்டிக்க சினிமாவைப் போல அந்நியன் வருவாரா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

சிறுமிகள் உயிரிழப்புக்கு அனுதாபம்-நிதியுதவி போதுமா..? கமல் கேள்வி

சிறுமிகள் உயிரிழப்புக்கு அனுதாபம்-நிதியுதவி போதுமா..? கமல் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக வட சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர்.நகர் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தன.

அந்த தண்ணீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாத இரு சிறுமிகள் அந்த கம்பியை தெரியாமல் மிதித்ததில், 2 சிறுமிகள் இறந்துள்ளனர்.

சிறுமிகள் மகா (9) மற்றும் பாவனா (8) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது,

`கொடுங்கையூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க ஆவணவெல்லாம் செய்ய வேண்டும்’

இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

உதயநிதியை அடுத்து மீண்டும் மோகன்லாலை இயக்கும் பிரியதர்ஷன்

உதயநிதியை அடுத்து மீண்டும் மோகன்லாலை இயக்கும் பிரியதர்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director priyadharsan and actor mohal lalதேசிய விருதுகளை பெற்ற பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் தற்போது மோகன்லால் நடிக்கும் நிமிர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதன் சூட்டிங் தற்போது நடந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து மோகன்லால் நடிக்கவுள்ள குஞ்சாலி மரிக்கார் என்ற படத்தை இயக்கவிருக்கிறாராம்.

ஏற்கெனவே மோகன்லால் மற்றும் பிரியதர்சன் கூட்டணி பல படங்களில் இணைந்து சூப்பர் ஹிட் அடித்துள்ளனர்.

இந்த வெற்றிக் கூட்டணியில் மீண்டும் இணைவதால் இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கும் என உறுதியாக நம்பலாம்.

புதுச்சேரியில் அமலாபால் கார் வாங்கிய சர்ச்சை; கவர்னர்-அமைச்சர் மோதல்

புதுச்சேரியில் அமலாபால் கார் வாங்கிய சர்ச்சை; கவர்னர்-அமைச்சர் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress amala paulமலையாள சினிமாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவை கலக்கிய நடிகைகள் வரிசையில் ஒருவர் அமலாபால்.

இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் மெர்சிடஸ் எஸ் என்ற விலை உயர்ந்த சொகுசுக் காரை புதுச்சேரியில் வாங்கியியுள்ளார்.

ரூ. 1 கோடியே 15 லட்சம் மதிப்புள்ள இந்தக் காரை வாங்குவதற்கு புதுச்சேரியில் உள்ள திலாஸ்பேட்டை, தெரேசா நகரில் வசிப்பதாக தன் முகவரியையும் தந்துள்ளார் அமலாபால்.

காரணம் இதே காரை அவரின் சொந்த மாநிலமான கேரளாவில் வாங்கினால் சுமார் 20 லட்சம் வரை அரசுக்கு வரி செலுத்த வேண்டும்.

ஆனால், புதுச்சேரி யுனியன் பிரதேசம் மாநிலம் என்பதால் இங்கு பொருட்களுக்கான வரி குறையும்.

புதுச்சேரியில் இந்த காருக்கான வரித்தொகையான 1 லட்சத்து 15 ஆயிரம் மட்டும் செலுத்தியிருக்கிறார்.

இதன்மூலம் கேரள அரசுக்கு வர வேண்டிய வரியை ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலாபால்மீது கேரள போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நடிகை அமலாபால் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறுகையில் நடிகை கார் வாங்கியத்தில் எந்த விதி மீறலும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜஹான் கூறுகையில்… ‘நடிகை அமலாபால் வீட்டு முகவரி கொடுத்து, பிரமாணப் பத்திரத்தையும், புதுச்சேரி முகவரியில் எல்.ஐ.சி. பாலிசி பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளார்.

எந்த மாநிலத்திலும் எந்த விதமான வாகனங்களைத் தற்காலிகமாகப் பதிவு செய்துகொண்டு, ஓராண்டுக்குள் தங்களது சொந்த மாநிலத்தில் நிரந்தரமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் அவர் அந்த காரை வாங்கி பதிவு செய்து 4 மாதங்கள் மட்டுமே ஆகிறது‘ என விளக்கமளித்துள்ளார்.

சத்திய சோதனை… யோகிபாபு-ரமேஷ் திலக் ஹீரோக்களாக மாறினர்!

சத்திய சோதனை… யோகிபாபு-ரமேஷ் திலக் ஹீரோக்களாக மாறினர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Comedians Yogi Babu and Ramesh Thilak became heroes for new movieநாகேஷ், கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தானம் வரை காமெடியன்களாக இருந்து ஹீரோக்களாக மாறினர்.

தற்போது இவர்கள் வரிசையில் இணைந்துள்ளனர் காமெடி நடிகர்கள் யோகி பாபு மற்றும் ரமேஷ் திலக்.

இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்திற்கு சத்திய சோதனை என பெயரிட்டுள்ளனர்.

காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டனிடம் உதவியாளராக இருந்த நட்டுதேவ் இப்படத்தை இயக்கவிருக்கிறாராம்.

சமீர் பரத்ராம் இப்படத்தை தயாரிக்கிறார்.

Comedians Yogi Babu and Ramesh Thilak became heroes for new movie

More Articles
Follows