எனக்குத் தெரியாமலே என்னை ஆடிஷன் எடுத்தாங்க.. – நடிகை சரஸ்

எனக்குத் தெரியாமலே என்னை ஆடிஷன் எடுத்தாங்க.. – நடிகை சரஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், சரஸ்மேனன் நடித்த படம் ‘ரணம்’.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற

நடிகை தான்யா ஹோப் பேசும் போது…

எல்லோருக்கும் வணக்கம். இன்று முழுவதும் ரணம் அணியினருடன் இருந்தது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இந்நிகழ்விற்கு வருகை தந்திருக்கும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கு வணக்கமும் நன்றியும். நான் இப்படத்தில் ஒரு வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

இப்படத்தில் நடித்த சக நடிகர் நடிகைகள்:, பிற தொழில்நுட்பக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். நீங்கள் படத்தைப் பாருங்கள். படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகை சரஸ்மேனன் பேசும் போது,

பத்திரிக்கையாளர்கள், ரணம் படக்குழுவினர் அனைவருக்கும் வணக்கம். ஒரு புராஜெக்டில் நாம் இணைவதற்கு முன்னர் நடிகர் நடிகைகளுக்கு ஆடிஷன் நடக்கும். எனக்கும் சில புராஜெக்ட்கள் காலதாமதமாகி இருக்கிறது.

அப்பொழுது நான் ஒரு வெஃப் சீரிஸில் கிரியேட்டிவ் வொர்க் மற்றும் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த ஸ்பாட்டில் என்னோடு ஒளிப்பதிவாளர் செல்வா மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் உதய் போன்றோர் பணியாற்றி வந்தனர். அப்பொழுதே எனக்குத் தெரியாமல் அவர்கள் என்னை ஆடிஷன் எடுத்திருக்கிறார்கள். எனக்கு அது தெரியாது. எனவே இதன் மூலம் இப்படத்தில். எனக்கு உதவி இயக்குநராக நடிக்கவே ஆடிஷன் இல்லாமலே வாய்ப்பு கிடைத்தது.

ஏற்கனவே நான் நான்கு படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருப்பதால் எனக்கு இக்கதாபாத்திரம் செய்வது எளிதாக இருந்தது. ஷெரிஃப் மற்றும் மது சார் இருவருக்கும் என் நன்றிகள். என்னுடன் நடித்த தான்யா ஹோப் மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

வைபவ் சாரின் காமெடி சென்ஸ் மிகவும் பிடிக்கும். அவரின் 25வது படத்தில் நடித்திருப்பது பெருமை. இசையமைப்பாளர் அரோல் கரோலி அவர்களுக்கு நன்றி. சக்திவேலன் சாருக்கு நன்றி. அவர் வெளியிடும் படங்கள் என்றால் நல்ல படமாக இருக்கும் என்கின்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அது இந்தப் படத்திற்கும் பொருந்தும். இப்பொழுது சக்திவேலன் சார் தான் எல்லோருக்குமான லக்கி சேம்ப் (LUCKY CHAMP).

இப்படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வலிமையோடு படைக்கப்பட்டு இருக்கின்றன. அதனால் எல்லோரும் தியேட்டருக்கு வந்து படத்தைப் பார்த்து பெண்கள் அனைவரும் ஆற்றலைப் பெற்றுக் கொண்டு செல்லுங்கள்.” என்றார்.

தயாரிப்பாளர் மது நாகராஜ் பேசியதாவது,

எல்லோருக்கும் முதற்கண் வணக்கம். நான் எப்போதுமே பேசும் போது, ஒரு Quote சொல்லித் தான் பேசத் துவங்குவேன். ஏனென்றால் எங்கள் டீமில் நாங்கள் எப்போதுமே ஏதாவது Quote சொல்லிக்கொள்வோம், இல்லையென்றால் சொல்லச் சொல்லிக் கேட்போம்.

“TEAM WORK MAKES THE DREAM WORK” என்று அடிக்கடி சொல்வார்கள். இதற்கு அர்த்தம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து ஒரு வேலையை செய்தோமானால் அது கண்டிப்பாக வெற்றி அடையும்.. ஒரு அணியில் இருப்பவர்கள் ஒரே விசயத்தை வேறு வேறு கோணங்களில் பார்ப்பார்கள். எனக்கு குழு உழைப்பின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. என் குழு தான் இங்கே இருக்கிறார்கள்.

”ரணம் அறம் தவறேல்” இந்தப் படம் எப்படி துவங்கிச்சிங்குற சம்பவத்தை உங்களோட பகிர்ந்துக்கணும்னு நெனைக்கிறேன்.. எனக்கு சினிமாத் துறையில் இருந்து முதன் முதலில் அறிமுகமானவர்கள் பாலாஜி மற்றும் லைன் புரொடியூஷர் செல்வம் இந்த இரண்டு பேர் தான்.. ஒரு நல்ல கதை இருக்கிறது படம் தயாரிக்கிறீர்களா..? என்று கேட்டார்கள்.

நான் உடனே அங்கு இருப்பவர்களே படம் எடுக்க தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இதில் நான் வேறு எடுக்க வேண்டுமா…?

நான் இங்கு U.K வில் இருக்கிறேன். நீங்கள் அங்கே இருக்கிறீர்கள் எப்படி எடுப்பது என்று கேட்டேன். எங்களிடம் நல்ல டீம் இருக்கிறது. உங்களுக்கு ஓகே என்றால் உங்களுக்கு எந்த வித சிரமமும் இல்லாத வகையில் படம் தயாரிக்கலாம் என்று சொன்னார்கள். உடனே யார் இயக்குநர்…? ஒரு மூன்று நான்கு படமாவது செய்திருக்கிறாரா…? என்று கேட்டேன். எதிர்தரப்பில் அமைதியாக இருந்துவிட்டு பிறகு இல்லை அவர் அறிமுக இயக்குநர் என்றார்கள். ஸ்கிரிப்ட் அனுப்பினார்கள். எனக்குப் படிக்கும் பழக்கம் இல்லை என்பதால் வாய்ஸ் நோட் அனுப்பச் சொன்னேன். அனுப்பினார்கள். கேட்டேன். பின் என் மனைவி கேட்டார். என்னை மீண்டும் கேட்கச் சொன்னார்கள்,. கேட்கும் போது அதில் பெண்களை முன்னிலைப்படுத்தி அவர்களை Address செய்யும் தன்மை இருப்பதை உணர்ந்தேன். என் மனைவியிடம் அதைக் கூறியவுடன் தயாரிக்கலாம் என்றார். பிறகு எந்த ஹீரோ ஒத்துக் கொள்வார் என்று கேட்டேன். ஏனென்றால் ஹீரோ ஒத்துக் கொள்ளாமல் ஒரு புராஜெக்ட்டை துவங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

பின்னர் வைபவ் அவர்களுக்கு கதை பிடித்திருக்கிறது என்று கூறினார்கள். உடனே இரண்டு தினங்களுக்குள் சென்னை வந்து அவரை சந்தித்தேன். அவர் மிகச் சிறந்த மனிதர், மிகச் சிறந்த நண்பரும் கூட, அன்றிலிருந்து ஸ்பாட்டில் நாங்கள் ஒன்றாகத் தான் சாப்பிடுவோம். அவரின் கதாபாத்திரம் மிக வித்தியாசமான கதாபாத்திரம் என்பதை எல்லோரும் சொல்லிவிட்டார்கள். என்னைப் பொருத்த வரை வைபவ் அவர்களுக்கு இப்படம் கேம் சேஞ்சர் ஆக இருக்கும் என்று நம்புகிறேன். அடுத்து நாயகிகள் என்றவுடன் யாரை தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி வந்தது. ஏனென்றால் கதாபாத்திரங்கள் வித்தியாசமானவை. தான்யா ஹொப் சொன்னது போல் இதுவரை அவர் நடித்திராத போலீஸ் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார். மற்றொரு நாயகி நந்திதா ஸ்வேதா உடல்நலக் குறைபாட்டால் இன்று வர இயலவில்லை. அவரின் வாழ்த்துக்களையும் வருத்தங்களையும் எல்லோருக்கும் தெரிவித்துள்ளார்.

சூட்டிங்கின் போது ஆக்ஷன் காட்சிகளில் கூட சிறப்பாக நடித்திருக்கிறார்,. ஒரு முறை காயம் ஏற்பட்ட போது பேக்-அப் சொல்ல வேண்டியது வருமோ என்று நினைத்தேன். ஆனால் வெறும் முதல் உதவி செய்துவிட்டு மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்தார். அவரின் கேரவன் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு, படியில் அமர்ந்து கொண்டு என்ன நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டே இருப்பார். அவருக்கு நன்றி. சரஸ் மேனன் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். அவர் எப்போதும் சிரித்துக் கொண்டே அவரது வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே கடினமாக உழைத்திருக்கிறார்கள். அதில் முதன்மையாக இயக்குநர் ஷெரீஃப். ஒரு கதை எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்கின்ற அறிவு ஞானம் அவருக்கு இருக்கிறது. பிறகு ஒளிப்பதிவாளர் பாலாஜி. அவர் ஒரு சூப்பர் ஹியூமன், ஒரு ஷாட் எடுக்கும் போது பத்து நிமிடம் வீணடிப்பார். ஆனால் அவர் ஏன் அந்த பத்து நிமிடம் எடுத்துக் கொண்டார் என்பது அந்த ஷாட்டைப் பார்க்கும் போது, அந்த பத்து நிமிடம் வொர்த் என்று தோன்றும். லைன் புரொடியூசர் செல்வத்தை நம்பி சொத்தைக் கூட எழுதி வைக்கலாம். அவ்வளவு நம்பிக்கைக்கு உரியவர். பிறகு கலை இயக்குநர் மணி மொழியன். அவரை நான் அப்பு என்று தான் கூப்பிடுவேன். மழை என்று பார்க்காமல் போலீஸ் ஸ்டேஷன் செட்டப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அவருக்கு நன்றி.

எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் உதய் என்ன நடக்க முடியாது என்று நினைப்போமோ அதை எளிதாக நடத்திக் காட்டிவிடுவார். பிரணதி சைல்ட் ஆர்டிஸ்ட், மற்றும் அவரின் பெற்றோருக்கும் நன்றி. இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்து முன் வந்ததற்கு நன்றி. இப்படம் உருவாக காரணமாக இருந்த என் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவருக்கும் நன்றி. இப்படத்தை எப்படி கொண்டு போய் சேர்க்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது தான் சக்திவேலன் அவர்கள் என் வாழ்வில் வந்தார்கள். He Means lots to me, அவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் இருக்கிறார். இது தொழில் தாண்டிய நட்பு.” என்று பேசினார்.

Even i dont know Audition for me says actress Saras

இப்படி கூட நடக்குமா.? இந்த காலகட்டத்திலா வாழ்கிறோம்.? ‘ரணம்’ குறித்து சக்திவேலன்

இப்படி கூட நடக்குமா.? இந்த காலகட்டத்திலா வாழ்கிறோம்.? ‘ரணம்’ குறித்து சக்திவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் அறம் தவறேல்”.

அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மது நாகராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும் போது,

வெளிநாட்டில் வேலை செய்து செட்டிலாகிவிட்டு, தன் கனவை துரத்தி, தன் ஆசையை நோக்கி வந்து தமிழ்நாட்டில் “ரணம்” அறம் தவறேல் படம் எடுத்திருக்கிறார்கள். அதையும் மூன்று நான்கு வேலைகளில் ஒன்றாகக் கருதாமல், அதற்கென்று பிரத்யேகமான கவனம் கொடுத்து அர்ப்பணிப்புடன் அதை உருவாக்கி இருக்கிறார் மது நாகராஜன். இது சாதாரண விசயம் இல்லை.

சமீபத்தில் தான் அறிமுகம் ஆனார். இன்று என் நெருங்கிய நட்பு வட்டத்தில் ஒருவராக இருக்கிறார். பேசும் போது ஒரு மணி நேரத்தில் முக்கால் மணி நேரம் சினிமாவைப் பற்றிப் பேசுவார். மீதி பத்து நிமிடம் அவரின் குழந்தைகளைப் பற்றிப் பேசுவார். அந்த குழந்தைகள் மேல் எந்தளவிற்கு அன்பும் கவனமும் செலுத்துவாரோ அதே அளவிற்கு சினிமாவையும் நேசிக்கிறார். அவரது புரொடெக்ஷன் பெயரே குழந்தைகளின் பெயரையும் உள்ளடக்கி, மிதுன் மித்ரா மதுநாகராஜன் என்பதன் சுருக்கமாக MMM என்று வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அதுமட்டுமின்றி இது நாயகன் வைபவ் அவர்களுக்கு 25வது படம். அவர் இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். 250 படங்கள் நடிக்க வேண்டும். அவருக்கு வாழ்த்துக்கள். நாயகி சரஸ் மேனன் உடன் பல படங்களில் பணியாற்றிவிட்டேன்… மிகச்சிறந்த திறமைசாலி, அட்டகத்தி நந்திதா, தான்யா ஹோப் என எல்லோருமே மிகச்சிறந்த தேர்வு. அறிமுக இயக்குநர் இப்படத்தை மிகவும் ரேசியாக எடுத்துச் சென்றிருக்கிறார். மர்டர் மிஸ்ட்ரி கதைக்களத்தை புதிய கோணத்தில், இப்படியெல்லாமா இருக்கும் என்று ஆச்சரியப்படுத்தும் தளத்தில் காட்டியிருக்கிறார். படத்தைப் பார்ப்பவர்களுக்கு இப்படிப்பட்ட காலகட்டத்திலா நாம் வாழ்கிறோம் என்பதான எண்ணத்தை ஆழ்மனதில் இப்படம் விதைக்கும். அறம் தவறாமல் நாம் வாழும் போது, அது இந்த சமுதாயத்திற்கு எந்த அளவிற்கு நன்மை பயக்கும் என்பதைப் பற்றிப் பேசும் படமாக இருக்கும். கொஞ்சம் கூட யோசிக்க முடியாத நாம் நினைத்தே பார்த்திராத திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் சேர்த்து சிறப்பாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஷெரீஃப். நல்ல ரைட்டிங் மற்றும் நல்ல இயக்கத்தை இப்படத்தில் நான் பார்க்கிறேன். இப்படம் நமக்குள் மிகச்சிறந்த விவாதங்களை உருவாக்கும். தரமான ஒரு படத்துடன் மிதுன் மித்ரா ப்ரெண்ட்ஸ் உள்ளே வந்திருக்கிறார்கள். இப்படம் வெற்றி அடைய வேண்டும். மிதுன் மித்ரா நிறைய படங்கள் செய்ய வேண்டும். ஒரு வருடம் முழுக்க புதுமுக இயக்குநர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளித்து தொடர்ச்சியாக படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் கம்பெனியாக இது வளர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்” என்று பேசினார்.

கலை இயக்குநர் மணிமொழியன் ராமதுரை பேசுகையில்

ஷெரீஃப் என் தம்பி போன்றவர். பாலாஜி, மது சார் மற்றும் உதய் போன்றோர் இப்படம் மிகச்சிறப்பாக வர உதவி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. உதய் இப்படத்திற்கு ஸ்டிராங் ஆன நிர்வாக தயாரிப்பாளர் என்றார்.

ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா பேசும் போது,

”ரணம்” படத்தை நானும் ஷெரீஃப்-ம் கோவிட் காலத்தில் தான் துவங்கினோம். இரவு பகலாக அமர்ந்து விவாதித்து நாங்கள் இந்தக் கதையை உருவாக்கினோம். அடுத்து இப்படத்தை யார் தயாரிப்பார்கள் என்கின்ற சந்தேகம் எங்களுக்கு வந்தது..? ஏனென்றால் இக்கதையை அவ்வளவு எளிதாக யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இக்கதையில் இருக்கும் ஒரு ப்ளாஷ்பேக் போர்ஷனைப் பார்த்து எல்லோருமே தயங்கினார்கள். மேலும் பல ஹீரோக்களும் கூட அதே காரணத்தினால் இப்படத்தில் நடிக்க தயங்கினார்கள். இதற்கு முன்னர் மது சார் தயாரிப்பில் ஒரு படம் பண்ணப் பேசி, அது நடக்காமல் போய்விட்டது. அப்பொழுது இருந்தே மது சார் ஒரு தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி ஒரு நல்ல நண்பராகப் பழகி வந்தார். அவர் என்னிடம் நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள்; படம் பண்ணலாம் என்று சொன்னார். அப்பொழுது நான் மற்ற தயாரிப்பாளர்களைப் போலத்தான் இவரையும் நினைத்தேன். சொல்லிவிட்டு போய்விடுவார்கள் என்று. அது போல் அவரும் அமெரிக்கா போய்விட்டார். அடுத்து 6 மாத காலம் கழித்து அவர் வரும் போது, அவரை சந்தித்து கதையைக் கூறினோம். ஒரு வாரம் கழித்து மது சார் கதையை ஓகே செய்துவிட்டார். ஏற்கனவே அவரது தயாரிப்பில் துவங்கிய முந்தைய படம் முடிவடையாமல் இருக்கும் போது, இவரைப் போல் யாரும் அவ்வளவு எளிதாக அடுத்த படம் தயாரிக்க ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஆனால் மது சார் சம்மதித்தார். அவரால் தான் இன்று நானும் செரீஃப்பும் இந்த மேடையில் நின்று கொண்டு இருக்கிறோம். அதற்காக அவருக்குப் பெரிய நன்றி.

இப்படம் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை. நாயகன் வைபவ் இக்கதையைக் கேட்டு எனக்குக் கதை பிடித்திருக்கிறது, நான் நடிக்கிறேன் என்று சொன்னார். மிகவும் சந்தோசமாக இருந்தது. ஏனென்றால் சில நாயகர்கள் இப்படத்தில் நடிக்க பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்கள். ஹீரோயின் வேண்டும் என்றார்கள்.. டூயட் வேண்டும் என்றார்கள். இப்படிப்பட்ட சூழலில் இக்கதையை கேட்டவுடன் ஒப்புக் கொண்டார் வைபவ். அதிலும் முக்கியமாக ஹீரோ இப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தான் வர வேண்டும். பிற நாயகர்கள் தயங்கியதற்கு இதுவும் ஒரு காரணம். எல்லோரும் விஷ்வல் நன்றாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் என்னோடு பணியாற்றிய சக தொழில்நுட்பக் கலைஞர்களின் பணி. அவர்களுக்கு நன்றி. அதையும் விட மேலான மற்றொரு காரணம் நீங்கள் முதல் முறையாக வைபவ் அண்ணனை சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் பார்க்கிறீர்கள். அதனால் விஷ்வல்ஸ் உங்களுக்குப் பிடித்திருக்கிறது,.
இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.

இசையமைப்பாளர் அரோல் கரோலி பேசியதாவது…

எல்லோரும் கூறியதைப் போல் எனக்கும் ரணம் ரொம்பவே முக்கியமான திரைப்படம். எல்லோரும் மிக நேர்மையாக கடுமையாக உழைத்திருக்கிறோம். இப்படம் ஒரு நல்ல த்ரில்லராக இருக்கும். தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டதாக இருக்கும். திரைக்கதை கிரிப்பாக இருக்கும். ஒரு வருடத்திற்கு முன்பு இயக்குநர் செரீஃப் இக்கதை குறித்து என்னிடம் பேசும் போது, முழு ஸ்கிரிப்ட் இருக்கிறதா….?? என்று கேட்டிருந்தேன். அவர் உடனே வாய்ஸ் நோட் அனுப்புகிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பினார்.

எனக்கு கொஞ்சம் குழப்பமாகவும், சிறிது ஆச்சரியமாகவும் ஒரு புது அனுபவமாகவும் இருந்தது. வாய்ஸ் நோட் கேட்கும் போது எனக்கு அது உண்மையாகவே Inspring ஆக இருந்தது. கதை மிகவும் பிடித்திருந்தது. இந்த ரணம் திரைப்படத்தின் மூலமாக எனக்கு ஒரு நண்பர்கள் குழு கிடைத்திருக்கிறது.. பாலாஜி, ஷெரீஃப், தயாரிப்பாளர் மது சார், வைபவ், என நிறைய பேர். படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் என்றார்.

Will it happen like this Says Sakthivelan about Ranam

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ முதல் ‘போர்’ வரை.; நடிகை சஞ்சனா நடராஜன்

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ முதல் ‘போர்’ வரை.; நடிகை சஞ்சனா நடராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மொழியை நேர்த்தியாக பேசி, தனித்துவமான கதாபாத்திரங்களில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரக்கூடியவர் நடிகை சஞ்சனா நடராஜன்.

இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தில் அவர் தனது சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்றார். இப்போது அவர் தனது வரவிருக்கும் ‘போர்’ திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்.

டீசரில் அவரது டிரெண்டி & ஃபேஷனபிள் தோற்றம் அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படத்தில் சஞ்சனா தனது கதாபாத்திரத்தைப் பற்றி பேசுகையில்…

‘ரிஷிகா’ என்ற மருத்துவ மாணவியாக நடித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்த படத்தில் தான் நடித்துள்ள ரிஷிகா கதாபாத்திரம் தனது நிஜ வாழ்க்கை இயல்பை ஒத்திருக்கிறது என்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சஞ்சனா.

“நண்பர்கள் குழுவைச் சுற்றி சுழலும் இந்தக் கதை அவர்களின் கடந்த கால சம்பவங்கள் எப்படி தற்போதைய வாழ்க்கையை பாதிக்கிறது என்பதைக் கூறும்.

இது அரசியல் விஷயங்களைப் பேசுவதோடு, சில சமூகப் பிரச்சினைகளையும் சொல்லி இருக்கிறது. படக்குழுவில் உள்ள அனைவரும் உற்சாகத்தோடு வேலை செய்தோம். இயக்குநர் பிஜாய் நம்பியாரும் படத்தை தெளிவான பார்வையோடு கொண்டு சென்றார்.

இந்த படத்தில் எனது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தக் கதை நிஜ சம்பவங்களின் அடிப்படையில் உருவானது” என்று சஞ்சனா நடராஜன் கூறினார்.

Actress Sanchana Natarajan movies updates

நான் இயக்கிய மற்ற படங்களைப் போல் ‘ஜோஷ்வா’ இருக்காது.. – கெளதம் வாசுதேவ்

நான் இயக்கிய மற்ற படங்களைப் போல் ‘ஜோஷ்வா’ இருக்காது.. – கெளதம் வாசுதேவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் தன்னுடைய காதல் கதைகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் கெளதம் மேனன். அப்படி எப்போது வெளியாகும் என ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருந்த ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச்1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். யோகிபாபு, டிடி, கிருஷ்ணா, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி என்று பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

படம் குறித்து இயக்குநர் கெளதம் மேனன் பகிர்ந்து கொண்டதாவது…

“என்னுடைய மற்றப் படங்களைப் போல இல்லாமல் அதிக ஆக்‌ஷன் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜோஷ்வா

கிட்டத்தட்ட 10-12 ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது. இதற்கு முன்பு நான் எந்தப் படத்திலும் செய்யாத ஒரு விஷயம்.

ஆக்‌ஷன் காட்சிகளை ‘ஜவான்’, ‘சிட்டாடல்’ புகழ் யானிக் பென் கோரியோகிராஃப் செய்திருக்கிறார்.

கிளாஸி ஆக்‌ஷன் படமாக வந்திருக்கிறது. ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’, ‘மின்னலே’ என என்னுடைய படங்கள் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டபோது கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. ‘வெந்து தணிந்தது காடு’ படம் மூலம் வேறொரு ஜானரில் என்னை தக்கவைத்துக் கொண்டேன்.

அதுபோல, இந்தப் படமும் முற்றிலும் எனக்கு வேறொரு ஜானர். கொலையாளிகள், கேங்க்ஸ்டரிடம் இருந்து எப்படி கதாநாயகியை இமைப் போல ஜோஷ்வா காப்பாற்றுகிறான் என முழுக்க முழுக்க ஆக்‌ஷனில் வடிவமைத்துள்ளோம்.

இந்தப் படம் மூலம் என்னால் முழுக்க ஆக்‌ஷன் படத்தைக் கையாள முடியும் எனத் தெரிந்து கொண்டேன்” என்றார்.

ஜோஷ்வா

Joshua will be different from my old movies says Gautam Vadudev

சினிமா இயக்குனரானார் சினிமா பையன்..; இனிமே ‘ஜாம் ஜாம்’ தான்

சினிமா இயக்குனரானார் சினிமா பையன்..; இனிமே ‘ஜாம் ஜாம்’ தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு தயாரிக்கும் படங்கள் அனைத்தும் நல்ல கதையம்சத்தோடு பார்வையாளர்களைக் கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனைப் படைத்து தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. வர்த்தக வட்டாரங்கள், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டையும் பெற்ற இந்தத் தயாரிப்பு நிறுவத்தின் அடுத்த பெரிய அப்டேட் இப்போது வெளியாகி இருக்கிறது.

’ஓ மை கடவுளே’ மற்றும் ‘பேச்சுலர்’ என்ற இரண்டு காதல் வெற்றிப் படங்களைக் கொடுத்தது ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம்.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ‘லவ் டிரையாலஜி’யை கொடுக்க தற்போது அடுத்த காதல் கதையாக ‘ஜாம் ஜாம்’ படத்தை அறிவித்துள்ளனர்.

இந்தப் படம் மூலம் பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும் சினிமா பையன் என்ற பெயரில் சமூக வலைதளத்தில் செயல்பட்டு வருகிறார்.

வழக்கமான ரொமாண்டிக் காமெடி எண்டர்டெயினர் படமாக இது நிச்சயம் இருக்காது என்கிறார் இயக்குநர் அபிஷேக் ராஜா. மாறாக, அதிகமான எண்டர்டெயின்மெண்ட்டோடு ரொமான்ஸ் மற்றும் த்ரிலிங்கான தருணங்களும் இந்தப் படத்தில் இருக்கும் என்கிறார்.

’ஜாம் ஜாம்’ படம் மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டுள்ளது. தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டராக இருந்து இயக்குநராக மாறி ’முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ என்ற மலையாளப் படத்தை இயக்கிய அபினவ் சுந்தர் நாயக் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார்.

நவதேவி ராஜ்குமார் ஆடை வடிவமைப்பையும், அழகியகூத்தன் மற்றும் சுரேன் ஜி ஒலிப்பதிவையும் கவனிக்கிறார்கள். இப்படத்திற்கு பிரதீப் ராஜ் கலை இயக்குநராக உள்ளார். மற்ற நடிகர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும்.

ஜாம் ஜாம்

Abishek Raja debut movie titled Jaam Jaam

CCL Chennai Rhinos : நட்போடு இருக்கோம்.. கப்போடு வருவோம்.; ரெடியான ஆர்யா – சாந்தனு – பரத் டீம்

CCL Chennai Rhinos : நட்போடு இருக்கோம்.. கப்போடு வருவோம்.; ரெடியான ஆர்யா – சாந்தனு – பரத் டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Celebrity Cricket லீக் சிசிஎல் சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது, சென்னை ரைனோஸ் அணியினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்*.

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன‌ர்.

திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்பதால், ஆண்டுதோறும் இதற்கான எதிர்பார்ப்பு, மேலும் மேலும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது.

சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார் மற்றும் கங்கா பிரசாத் நிறுவனராக உள்ளார். அதுபோக சென்னை அணியில் விஷ்ணு விஷால், ஜீவா, மிர்ச்சி சிவா, சாந்தனு, விக்ராந்த், பரத், பிர்த்வி, அசோக் செல்வன், கலையரசன், ஆதவ் கண்ணதாசன், என்.ஜே.சத்யா, தாசரதி, ஷரவ் ஆகியோர் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.

23 பிப்ரவரி 2024 தொடங்கும் சிசிஎல் போட்டி 17 மார்ச் 2024 வரை நடைபெறுகிறது. ஷார்ஜா, ஹைதராபாத், சண்டிகர், திருவனந்தபுரம் என நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளது.

சென்னை ரைனோஸ் தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணியை 25 பிப்ரவரி அன்று ஷார்ஜாவில் எதிர்கொள்கிறது.

தென்னிந்தியாவில் Star Network ஒவ்வொரு மொழிகளிலும் தனித்தனியாக போட்டியை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. தமிழில் விஜய் சூப்பர் சேனலில் போட்டிகள் தொடர்ந்து ஒளிப்பரப்ப படவுள்ளது. DD Sports மற்றும் ஜியோ சினிமாஸ் 20 போட்டிகளையும் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

இதுகுறித்து சிசிஎல் நிறுவனர் விஷ்ணு இந்துரி மற்றும் சென்னை ரைனோஸ் அணியினர் பத்திரைக்கையாளர்களை சந்தித்தனர்

இந்நிகழ்வினில்

சிசிஎல் நிறுவனர் விஷ்ணு இந்துரி கூறியதாவது…

சிசிஎல்-ல் மற்ற எந்த அணியை கேட்டாலும், சென்னை தான் எங்களுக்கு பிடித்த அணி என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு இந்த அணியின் மீது அனைவருக்கும் அதிகமான அன்பு இருக்கிறது. ஐபிஎல்லிற்க்கு பிறகு சிசிஎல் தான் அதிக அளவு பிரபலமான, அதிக அளவு பார்வையாளர்களால் பார்க்கப்படும் ஒரு கிரிக்கெட் போட்டியாகும்.

ஏனென்றால் நிறைய Brodcast Channel-கள் இப்போட்டியை ஒளிபரப்புவதில் ஒன்றனிணைந்துள்ளன. இந்த ஆண்டு, இந்த விளையாட்டு மேலும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. விளையாட வரும் அனைத்து நடிகர்களும் பணத்திற்காக இல்லாமல் பெரும் ஆர்வத்தினால் விருப்பத்தினால் மட்டுமே வருகின்றனர். அதற்காக அவர்களுக்கு நாங்கள் நன்றி கூறிக் கொள்கிறோம்.

நடிகர் ஆர்யா கூறியதாவது…

சிசி எல் போன்ற ஒரு போட்டியை ஒருங்கிணைத்து நடத்துவது சாதாரண விஷயம் கிடையாது. ஆனால் ஒவ்வொரு வருடமும் ஆர்வம் குறையாமல் அதை நடத்தி வருகிறார் விஷ்ணு.

அனைத்து நடிகர்களையும் ஒருங்கிணைந்து, அதை புத்துணர்ச்சியோடு நடத்தி வருகிறார். எங்கள் அணியை பொறுத்தவரை அனைவரும் நட்போடு இணைந்து விளையாடுகிறோம்.

நாங்கள் விளையாட்டின் போது சினிமாவை ஒதுக்கி வைத்து, முழுமூச்சாக விளையாட்டை மட்டுமே நோக்கமாக கொண்டு விளையாடுகிறோம்.

ஒவ்வொரு வருடமும் விளையாட்டு முடிந்து, நாங்கள் எங்களது தனிப்பட்ட வாழ்கைக்கு திரும்பினாலும், அடுத்த வருடம் விளையாட்டு துவங்கும் போது, விட்ட இடத்தில் இருந்து தொடருவோம் மிகவும் உற்சாகமாகிவிடுவோம். இது தான் இதன் சிறப்பம்சமே… இது ஒரு ஆரோக்கியமான, அதே நேரத்தில் மகிழ்ச்சி நிறைந்த விளையாட்டு. இதில் பங்குகொள்வது மகிழ்ச்சி.

நடிகர் பரத் கூறியதாவது…

சிசிஎல் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருந்தாலும், தொடர்ந்து இயங்கி கொண்டே வருகிறது, அதற்கு விஷ்ணுவிற்கு தான் நன்றி கூற வேண்டும்.

இந்த வருடம் விளையாட்டு இன்னும் பிரம்மாண்டமாகி இருக்கிறது. சிசிஎல் என்பது, அனைத்து மொழி நடிகர்களையும் சந்தித்து நட்புடன் பழகுவதற்கான ஒரு வாய்ப்பு. நட்போடு இருந்தாலும், இந்த வருடம் கப் எடுப்பதில், நாங்கள் உறுதியோடு இருக்கிறோம். கண்டிப்பாக வெல்வோம்.

நடிகர் சாந்தனு கூறியதாவது..

சென்னை ரைனோஸில் விளையாடுவது வெற்றி, தோல்வியை கடந்து ஒரு மகிழ்ச்சியை பேரின்பத்தை கொடுக்கிறது. மீண்டும் நண்பர்களுடன் இணைந்து பயணிப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது.

விஷ்ணு, ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். அதற்காக அவருக்கு நன்றி. இந்த முறை கப் எடுத்தே தீர வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறோம். எங்கள் உடன் இணைந்து பயணிக்கும் எங்கள் குழுவிற்கு நன்றி.

CCL Chennai Rhinos

Chennai Rhinos team Arya Bharath Shanthanu speech at CCL event

More Articles
Follows