தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எஸ்ஆர்எம் நிறுவனர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து அவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்தவர் மதன்.
இவர் பச்சமுத்து மீது கொண்ட அன்பின் காரணமாக வேந்தர் மூவிஸ் என்ற சினிமா நிறுவனத்தை தொடங்கி படங்களை விநியோகித்தும், தயாரித்தும் வந்தார்.
ரஜினியின் லிங்கா, விஜய்யின் தலைவா உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் உரிமையை இவர் பெற்று இருந்தார்.
இதனிடையில் கங்கையில் ஜீவசமாதி அடைய போவதாக கடந்த மே மாதம் 28ஆம் தேதி மாயமானார்.
இவரின் இரண்டு மனைவிகள் இது தொடர்பாக புகார் கொடுத்தனர்.
மேலும் எஸ்ஆர்எம் யுனிவர்சிட்டியில் இவர் பண மோசடி செய்ததாக கூறப்பட்டு வந்தது.
தற்போது மணிப்பூர் மாநிலத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
விரைவில் இவர் சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளார் என்றும் பல தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சற்றுமுன் திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் ஜார்ஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி.