தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், காளி வெங்கட், வனிதா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘அநீதி’.
ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை டைரக்டர் ஷங்கர் வெளியிடுகிறார். ஜூலை 21ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் பேசியதாவது…
“இயக்குநர் வசந்த பாலன் மற்றும் அவரது நண்பர்களின் முதல் தயாரிப்பு ‘அநீதி’ திரைப்படம்.
தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக இது இருக்கும். இதில் எனக்கும் ஒரு கதாபாத்திரத்தை வழங்கியுள்ள வசந்த பாலன் அவர்களுக்கு நன்றி. அவரது எதிர்பார்ப்பை எவ்வாறு பூர்த்தி செய்யப் போகிறேன் என்று நினைத்தேன்.
ஆனால் எனது வேலையை அவர் மிகவும் சுலபமாக்கினார். ஒரு குடும்பம் போல ஒட்டுமொத்த குழுவினரையும் அவர் அழகாக வழிநடத்தி சென்றார்.
அர்ஜுன் தாஸ் மிகவும் திறமை வாய்ந்தவர், நடிப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.”
அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எம். கிருஷ்ணகுமார் பேசியதாவது…
“வசந்த பாலன் உள்ளிட்ட இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை ஒன்றாக படித்தோம். பின்னர் வெவ்வேறு துறைகளுக்கு நாங்கள் சென்று விட்டோம். வசந்த பாலன் மட்டும் பள்ளி காலம் முதலே கலை மற்றும் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். இப்படத்தின் மூலம் நாங்கள் இணைவது மிகுந்த மகிழ்ச்சி. இப்படத்தை நாங்கள் உற்சாகத்துடன் தயாரித்துள்ளோம், உங்கள் அனைவரது ஆதரவையும் வேண்டுகிறோம்.”
அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முருகன் ஞானவேல் பேசியதாவது…
“வசந்த பாலனும் நாங்களும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர் வெற்றி பெற்றால் நான் மகிழ்ச்சி அடைவேன், அவரது படங்கள் தோல்வி அடைந்தால் நான் துவண்டு போவேன். அர்பன் பாய்ஸ் நிறுவனத்தை நண்பர்கள் நாங்கள் இணைந்து விளையாட்டாக ஆரம்பித்தோம். ஆனால் இன்று மிகவும் சிறந்த ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளோம் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு ரசிகனாக சொல்கிறேன், ‘அநீதி’ திரைப்படம் உங்களை கதைக்குள் ஈர்த்து விடும். ஒவ்வொரு நடிகரும் தொழில்நுட்ப கலைஞரும் மிகச் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார்கள், அனைவருக்கும் நன்றி.” என்றார்.
Aneethi will be Tamil cinemas important movie says JSK Sathish