தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், காளி வெங்கட், வனிதா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘அநீதி’.
ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை டைரக்டர் ஷங்கர் வெளியிடுகிறார். ஜூலை 21ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த விழாவில் நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது…
“இயக்குநர் வசந்தபாலன் என்னை சந்திக்க வேண்டும் என்று கூறிய போது வில்லன் பாத்திரத்தில் நடிக்க தான் கூப்பிடுகிறார் என்று எண்ணினேன்.
ஆனால் அவர் சுமார் 3:30 மணி நேரம் எனக்கு கதையை பொறுமையாக விவரித்ததுடன் மட்டுமில்லாமல் இதில் நாயகனாக நடிக்க வேண்டும் என்று கூறி என்னை மகிழ்ச்சியில் ஆற்றினார். அடுத்த நாளே இந்த படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமானேன். அவருடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம், மீண்டும் ஒருமுறை அவரது படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இப்படத்தில் அனுபவமிக்க பல நடிகர்களுடன் நடித்தது நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. ‘அநீதி’ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.”
நிர்வாகத் தயாரிப்பாளர் பிரபாகர் பேசியதாவது…
“இயக்குநர் வசந்த பாலன் அவர்களுக்கும் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘அநீதி’ திரைப்படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. அர்ஜுன் தாஸ், துஷாரா, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். வசந்த பாலன் ஒரு தலைசிறந்த இயக்குநர், தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி மிகச்சிறந்த மனிதராகத் திகழ்கிறார். இது அவரை இன்னும் உயரங்களுக்கு இட்டு செல்லும். ‘அநீதி’ திரைப்படத்திற்கு உங்களது முழு ஆதரவை வழங்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
Arjundas reveals how he became hero in Aneethi