இசையமைப்பாளராக செஞ்சுரி அடிக்க போகும் ஜீவி. பிரகாஷ்.; ‘அநீதி’ விழாவில் அறிவிப்பு

இசையமைப்பாளராக செஞ்சுரி அடிக்க போகும் ஜீவி. பிரகாஷ்.; ‘அநீதி’ விழாவில் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அநீதி’ படம் ஜூலை 21ஆம் தேதி தமிழ் – தெலுங்கில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரை பிரபல இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது…

“என் மீது நம்பிக்கை வைத்து மிகவும் இள வயதிலேயே இசையமைப்பாளராக என்னை அறிமுகப்படுத்திய வசந்த பாலன் அவர்களுக்கும் ஷங்கர் சாருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

1993-ல் ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு பாடி பாடகராக அறிமுகமானேன். அதுவும் ஷங்கர் படம். ‘வெயில்’ படத்தில் என்னை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார் வசந்தபாலன். அந்த படத்தை ஷங்கர் தயாரித்திருந்தார்.

விரைவில் இசையமைப்பாளராக 100வது படத்தை தொட உள்ளேன். வசந்த பாலன் ஒரு மிகச் சிறந்த இயக்குநர், நான்கு படங்களில் அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.

‘அநீதி’ திரைப்படம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு அனைவரும் உங்களது ஆதரவை தாருங்கள், நன்றி.” என்றார்.

GV Prakash will hit 100th movie as music composer

வசந்தபாலன் படங்களில் சமூக அக்கறையும் கோபமும் வெளிப்படும்.. – கார்த்திக் சுப்பராஜ்

வசந்தபாலன் படங்களில் சமூக அக்கறையும் கோபமும் வெளிப்படும்.. – கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அநீதி’ படம் ஜூலை 21ஆம் தேதி தமிழ் – தெலுங்கில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரை பிரபல இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது…

“‘வெயில்’ படம் முதலே வசந்தபாலன் அவர்களின் எழுத்துக்கு நான் ரசிகன். ‘அநீதி’ திரைப்படத்தை காணும் வாய்ப்பை சமீபத்தில் நான் பெற்றேன். மிக மிக விறுவிறுப்பான ஒரு திரைப்படமாக ‘அநீதி’ அமைந்துள்ளது.

வசந்த பாலன் படங்களில் சமூக அக்கறையும் கோபமும் எப்போதும் வெளிப்படும். அது இந்த படத்திலும் உள்ளது. அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரின் முழு நடிப்புத் திறமையையும் வெளிக்கொண்டுவரும் வகையில் இப்படம் அமைந்துள்ளது. காளி வெங்கட்டின் மிகச் சிறப்பான பங்களிப்பு ‘அநீதி’ படத்தில் பேசப்படும். இப்படம் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.”

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா பேசியதாவது…

“இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் இரண்டு படங்களில் தற்போது பிஸியாக இருக்கும் வேளையிலும் ‘அநீதி’ படத்தை பார்த்து, ரசித்து, பாராட்டி அதை வெளியிட முன் வந்திருக்கும் இயக்குனர் ஷங்கர் சாருக்கு மனமார்ந்த நன்றி. வசந்த பாலன் சினிமாவை நேசிப்பவர், காதலிப்பவர். அவரது ஒவ்வொரு படத்திலும் இதை நாம் உணர முடியும்.

‘அநீதி’ திரைப்படத்தையும் அவ்வாறே அவர் உருவாக்கியுள்ளார். இப்படத்தை தயாரித்துள்ள அவரது நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள். நடிப்பிலும், குரலிலும் உடல்மொழியிலும் நாம் இழந்துவிட்ட ரகுவரன் மீண்டும் வந்தது போல் அர்ஜுன் தாஸ் உள்ளார். அவர் மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துகிறேன். இப்படம் வெற்றியடைய உங்களது மேலான ஆதரவை தாருங்கள். நன்றி.”

Vasantha Balan movies will have good message says Karthik Subbaraj

‘அநீதி’ படத்தை பார்க்க காரணங்களை அடுக்கும் நடிகர் சித்தார்த்

‘அநீதி’ படத்தை பார்க்க காரணங்களை அடுக்கும் நடிகர் சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அநீதி’ படம் ஜூலை 21ஆம் தேதி தமிழ் – தெலுங்கில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரை பிரபல இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் சித்தார்த் பேசியதாவது…

“இப்படத்தை பணம் செலவிட்டு நீங்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று கட்டாயம் பார்க்கலாம். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒரு படத்தை இயக்குநர் ஷங்கர் வழங்குகிறார் என்றாலே அது மிகவும் சிறந்த படமாகத் தான் கட்டாயம் இருக்கும்.

வசந்தபாலன் இயக்கத்தில் உருவான படம் என்றால் அது சொல்லப்பட வேண்டிய கதையாக தான் இருக்கும். ஜிவி பிரகாஷின் இசையை பற்றி நிறைய பேசலாம். இவ்வாறு ‘அநீதி’ படத்தை பார்ப்பதற்கான காரணங்கள் பல உள்ளன.

வசந்த பாலன் உடன் (‘காவியத்தலைவன்’ திரைப்படத்தில்) பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது எனது பாக்கியம். அநீதி திரைப்படத்தை அனைவரும் ஆதரிக்குமாறு வேண்டுகிறேன், நன்றி.”

இயக்குநர் என். லிங்குசாமி பேசியதாவது…

“இயக்குநர் வசந்த பாலனும் நானும் சாலிகிராமத்தில் ஒரே அறையில் தங்கி இருந்தது முதல் இப்போது வரை நண்பர்கள். என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கு வசந்த பாலனுக்கு உண்டு. ஆகையால் இந்த விழாவை இந்த மேடையை எனது விழாவாகவும் எனது மேடையாகவும் தான் நான் பார்க்கிறேன்.

‘அநீதி’ திரைப்படம் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது. இப்படம் மாபெரும் வெற்றியடைய வசந்த பாலனையும், இதை தயாரித்துள்ள அவரது நண்பர்களையும் வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

Lot of reasons to watch Aneethi says Siddharth

உலக கவனத்தை ஈர்த்த ஷங்கர் ‘அநீதி’ உடன் இணைந்திருக்கிறார் – சித்ரா லட்சுமணன்

உலக கவனத்தை ஈர்த்த ஷங்கர் ‘அநீதி’ உடன் இணைந்திருக்கிறார் – சித்ரா லட்சுமணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அநீதி’ படம் ஜூலை 21ஆம் தேதி தமிழ் – தெலுங்கில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரை பிரபல இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான சித்ரா லட்சுமணன் பேசியதாவது…

“வசந்த பாலன் சினிமாவை மிகவும் நேசிப்பவர் என்பது மட்டுமில்லாமல் திரையுலகை பற்றி அறிந்து வைத்திருப்பவர். மிகவும் கடின உழைப்பாளி ஆன அவர் சிறந்த படைப்புகளை ஏற்கனவே தந்துள்ளார். அந்த வரிசையில் ‘அநீதி’யும் இடம்பெறும் என்று நான் நம்புகிறேன்.

தமிழ் சினிமாவை உலக கவனம் பெற வைத்துள்ள இயக்குநரான ஷங்கர் இப்படத்தை வெளியிடுவது கூடுதல் பலம். அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகிய இருவரும் தங்கள் நடிப்பின் மூலம் இப்படத்திற்கு வலு சேர்த்துள்ளார்கள். ‘அநீதி’ மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.

இயக்குநர் எழில் பேசியதாவது…

“இந்த திரைப்படத்தின் டிரெய்லர் மட்டும் பாடல்கள் மிகவும் அருமையாக அமைந்துள்ளன. இப்படத்தை தயாரித்துள்ள வசந்த பாலன் மற்றும் அவருடைய நண்பர்களுக்கு வாழ்த்துகள். ‘அநீதி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”

இயக்குநர் ஏ. வெங்கடேஷ் பேசியதாவது…

“ஷங்கர் சாரிடம் பணியாற்றிய காலத்தில் இருந்தே வசந்த பாலனும் நானும் நண்பர்கள். வசந்த பாலனுக்கு நண்பர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். அதன் காரணம் என்னவென்றால் நண்பர்களின் மீது அவர் மிகவும் பாசம் காட்டுவார்.

‘அங்காடி தெரு’வில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை எனக்கு வழங்கி நான் தான் அதில் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அவரது அன்புக்கு கட்டுப்பட்டு நான் அப்படத்தில் நடித்தேன். எளிய மனிதர்களின் வாழ்க்கையை திரையில் காட்டுவது அனைவருக்கும் கைவந்ததல்ல, வசந்த பாலனுக்கு இது மிகவும் அழகாக வருகிறது. தொடர்ந்து பல்வேறு மிகச் சிறந்த படங்களை அவர் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

Shankar added more value to Aneethi says Chitra Laxman

ஒரு கதையை வசந்தபாலன் விவரிக்கும் விதமே அலாதியானது.. – தனஞ்செயன்

ஒரு கதையை வசந்தபாலன் விவரிக்கும் விதமே அலாதியானது.. – தனஞ்செயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அநீதி’ படம் ஜூலை 21ஆம் தேதி தமிழ் – தெலுங்கில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரை பிரபல இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் பேசியதாவது…

“‘ஒருவருக்கு நண்பர்கள் அமைவது என்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் இயக்குநர் வசந்த பாலன் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. பள்ளிக்காலம் முதல் ஒன்றாக இருக்கும் நண்பர்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

நண்பர்களுக்கு வசந்த பாலன் அளிக்கும் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது. இயக்குனர் ஷங்கர் இந்தப் படத்தை வெளியிடுவதும் அந்த நட்பின் அடிப்படையில் தான். இந்த விழாவுக்கு பல முன்னணி இயக்குனர்கள் வந்திருப்பதும் அந்த நட்பின் அடிப்படையில் தான்.

ரசிகர்களின் நட்பும் ‘அநீதி’க்கு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். ஒரு படத்தின் கதையை வசந்த பாலன் விவரிக்கும் விதமே அலாதியானது. ‘அநீதி’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.” என்றார்.

Vasantha Balans story narration is super says Dhananjayan

வசந்தபாலனின் நண்பர்கள் தயாரிப்பாளர்களாக மாறியிருப்பது மகிழ்ச்சி – பாக்யராஜ்

வசந்தபாலனின் நண்பர்கள் தயாரிப்பாளர்களாக மாறியிருப்பது மகிழ்ச்சி – பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது.

தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ‘அநீதி’ திரைப்படத்தின் இசை மட்டும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் கூறியதாவது…

“இயக்குநர் வசந்த பாலன் இயக்குநர் ஷங்கரிடம் இருந்து வந்தவர். ‘அநீதி’ திரைப்படம் எப்படி இருக்கும் என்பதற்கு வசந்தபாலனின் முந்தைய திரைப்படங்களே சான்று. ஒரு படத்திற்கு தயாரிப்பாளர் கிடைப்பது மிகவும் கஷ்டம் என்று சொல்வார்கள், இங்கு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து தயாரிப்பாளர்கள் ஆகி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்று அதன் வெற்றி விழாவிலும் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.” என்றார்.

Friends became Producers for friend is good says Bhagyaraj

More Articles
Follows