‘தளபதி விஜய்யின் 30 வருட’ ஸ்பெஷல் அப்டேட்டை வெளியிட்ட வாரிசு டீம் !

‘தளபதி விஜய்யின் 30 வருட’ ஸ்பெஷல் அப்டேட்டை வெளியிட்ட வாரிசு டீம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தளபதி விஜய் தற்போது தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் நடிகராக உள்ளார்.

அவரது ரசிகர் பட்டாளமும், நட்சத்திர அந்தஸ்தும் இணையற்ற அளவில் வளர்ந்துள்ளது.

மூன்று தசாப்தங்களுக்கு முன்பு ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

டிசம்பர் 4ம் தேதி அவரது சினிமா வாழ்க்கையில் 30 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதனையடுத்து விஜய்யின் ‘வரிசு’ தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு டிசம்பர் 4 அன்று ஒரு சிறப்பு விருந்தை அறிவித்துள்ளனர்.

வாரிசு இரண்டாவது சிங்கிள், ‘தீ தளபதி’, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

அதிவி சேஷ் நடித்த ‘ஹிட் 2’: முதல் நாள் வசூல் வெளியானது

அதிவி சேஷ் நடித்த ‘ஹிட் 2’: முதல் நாள் வசூல் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘HIT 2’ பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளிலேயே ஒரு க்ரைம் த்ரில்லருக்கான மிகப்பெரிய ஓப்பனிங்கைப் பெற்றது.

வெள்ளியன்று ரூ 11.75 கோடி வசூல் எடுத்தது.

அதிவி சேஷ் நடித்த படங்களிலே அதிக வசூல் எடுத்தது இந்த படம் தான்.

தயாரிப்பாளர் நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் அவரது பேனர் வால் போஸ்டர் சினிமா மகிழ்ச்சியில் நிறைந்து உள்ளது.

சேஷுக்கு ‘HIT 2’ இந்தப் படத்தின் இரண்டாவது வெற்றி.

‘மேஜர்’ திரைப்படம் ஜூன் மாதம் மாபெரும் வெற்றி பெற்றது.

‘வெண்ணிலா கபடி குழு’ பட நடிகர் ஹரி வைரவன் காலமானார்

‘வெண்ணிலா கபடி குழு’ பட நடிகர் ஹரி வைரவன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் விஷ்ணு விஷால் & சூரி ஆகியோர் சினிமாவில் அறிமுகமாகினர்.

இந்த படம் இதில் நடித்த பெரும்பாலான புது முகங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இதில் விஷ்ணு கபடி குழுவில் ஒருவராக நடித்தவர் ஹரி வைரவன். இதில் இவருக்கான காமெடி காட்சிகள் இருந்தன.

இந்த நிலையில் நடிகர் ஹரி வைரவன் 03.12.2022 இன்று அதிகாலை 12.15 மணியளவில் காலமானார்.

கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் கடச்ச நேந்தல் சொந்த ஊரில் இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அவருக்கு மனைவி, ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

 

‘இந்தியானா ஜோன்ஸ் 5’ அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் டிரெய்லர் வெளியானது!

‘இந்தியானா ஜோன்ஸ் 5’ அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் டிரெய்லர் வெளியானது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியானா ஜோன்ஸ் 5 இன் அதிகாரப்பூர்வ தலைப்பு – ‘தி டயல் ஆஃப் டெஸ்டினி’ மற்றும் படத்தின் முதல் டிரெய்லர் இன்று இணையத்தில் வெளிவந்தது.

2 நிமிட வீடியோவில், வயதான டாக்டர் ஜோன்ஸ் ஒரு தொல்பொருள் பேராசிரியராக தனது வாழ்க்கையை வாழ்வதைக் காட்டுகிறது, ஆனால் ஹைலைட் என்னவென்றால், டிரெய்லர் இந்தியானா ஜோன்ஸின் இளைய உருவத்தை காட்டுகிறது.

கதைக்களம் இரண்டு காலகட்டங்களில் நடப்பது போன்று உள்ளது .

இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி ஜூன் 30, 2023 அன்று திரையரங்குகளுக்கு வருகிறது.

பான் இந்தியா படத்தில் தூய்மைப் பணிப்பெண்ணாக ரோகிணி

பான் இந்தியா படத்தில் தூய்மைப் பணிப்பெண்ணாக ரோகிணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் “விட்னஸ்” திரைப்படம், வருகிற டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நமக்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்க்கும் வகையில் உருவாகி இருக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் தீபக் இயக்கி இருக்கிறார்.

மேலும், அவரே ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

விட்னஸ்

தெலுங்கு மற்றும் கன்னடத் திரைத்துறைகளில் மாபெரும் வெற்றிப்படங்களைத் தயாரித்து வெளியிட்ட ‘தி பீப்பிள் மீடியா பேக்டரி’, ஒரு அழுத்தமான, அதே சமயம் உணர்வுபூர்வமான திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறது.

“தி பீப்பிள் மீடியா பேக்டரி” சார்பாக டி.ஜி.விஷ்வபிரசாத். தயாரிக்க, விவேக் குச்சிபோட்லா. இணைந்து தயாரித்துள்ளார்.

ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரோகிணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்க, அழகம்பெருமாள், சண்முகராஜா, ஜி. செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

விட்னஸ்

இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை முத்துவேல் மற்றும் ஜே.பி.சாணக்யா ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.

பிலோமின் ராஜ் எடிட்டராகவும், ரமேஷ் தமிழ்மணி இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். பாடலாசிரியர் கபிலன் பாடல்களை எழுதியிருக்கிறார்.

இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

மேலும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

விட்னஸ்

Rohini starrer Pan India movie Witness

ஐந்து மொழிகளில் வெளியாகும் விட்னஸ்.
#Witness

▶️youtu.be/8l-RpIexc0E

#WitnessTrailer

@Shraddhasrinath @Rohinimolleti
@vishwaprasadtg @vivekkuchibotla @peoplemediafcy @negativespace04 @nuttypillai @Ramesharchi @philoedit @kavikabilan2 @SonyLIV
@venupro @pro_guna

‘இரண்டாம் திருமணம்’ பற்றி மனம் திறந்த மீனா

‘இரண்டாம் திருமணம்’ பற்றி மனம் திறந்த மீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில நாட்களாக மீனா மறுமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வலம் வருகின்றன.

அவரது கணவரின் நண்பரே அவரது வருங்கால மாப்பிள்ளை என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த வதந்திகளுக்கு மீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கணவரின் மறைவு வேதனையில் இருந்து இன்னும் மீளவில்லை என்று அவர் கூறினார். தனியுரிமையை மதிக்கும்படி அனைவரையும் அவர் வலியுறுத்தினார்.

மீனாவுடைய இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்.; நடிகை மீனா உருக்கமான பதிவு

More Articles
Follows