தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன் முதல் படமான ‘மண்டேலா’ படத்தின் மூலம் தேசிய விருதை வென்றவர் இயக்குனர் மடோன் அஸ்வின். இவரது 2வது படமான ‘மாவீரன்’ படம் கடந்த ஜூலை 14ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.
இதில் சிவகார்த்திகேயன், அதிதி, மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் போது பாசிட்டிவான விமர்சனங்கள் மட்டுமே வந்தன.
இந்த நிலையில் இப்படம் வெளியான 2 நாட்களில் உலகளவில் ரூ.30.4 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது.
தற்போது முதல் 3 நாட்கள் முடிவில் இப்படம் உலகளவில் ரூ.42.4 கோடியை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மட்டும் படம் ரூ.27.4 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த 2023 ஆண்டில் ‘வாரிசு’, ‘துணிவு’ மற்றும் PS2 ‘பொன்னியின் செல்வன் 2’ படங்களுக்கு பிறகு முதல் 3 நாட்களில் அதிக வசூலை ஈட்டிய படம் ‘மாவீரன்’ பெற்றுள்ளதாக சொல்லப்படுகின்றது.
Maaveeran movie three days collection report