தல ஒருத்தர் தான்.; சூப்பர் ஸ்டார் யார்.? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்

தல ஒருத்தர் தான்.; சூப்பர் ஸ்டார் யார்.? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை நேரு ஸ்டேடியத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் வெற்றி விழா ரசிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.

சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் பட்ட த்திற்கு விஜய் போட்டி இடுகிறார் என பரவலாக பேசப்பட்டது. மேலும் ‘வாரிசு’ பட தயாரிப்பாளர், நடிகர் சரத்குமார் ஆகியோர் விஜய்யை சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு பேசி இருந்தனர்.

இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் மன உளைச்சலை உண்டாக்கியது. மேலும் விஜய் ரசிகர்களும் இதனை ட்ரெண்ட் செய்து ரஜினி ரசிகர்களை வெறுப்பேற்றி வந்தனர்.

ஆனால் விஜய் ஏதும் மறுப்பு தெரிவிக்காத நிலையில் நேற்று லியோ வெற்றி விழாவில் சூப்பர் ஸ்டார் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய்.

அவர் பேசும்போது…

புரட்சி தலைவர் ஒருத்தர்தான்.. நடிகர் திலகம் ஒருத்தர்.., புரட்சி கலைஞர் கேப்டன் ஒருத்தர் தான், உலக நாயகன் ஒருத்தர்தான், சூப்பர் ஸ்டார் ஒருத்தர்தான், தல ஒருத்தர்தான்…தளபதி க்கு அர்த்தம் தெரியுமா… நீங்க மன்னர்கள் நீங்க ஆணையிடுற விஷயங்களை நான் செய்யற நான் தளபதி” என்றார்.

Vijay end game for Superstar controversy

நேற்று ‘லியோ’ மேடையில் பேச்சு.; இன்று சோசியல் மீடியாவை விட்டு விலகிய ரத்னகுமார்

நேற்று ‘லியோ’ மேடையில் பேச்சு.; இன்று சோசியல் மீடியாவை விட்டு விலகிய ரத்னகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2017-ஆம் ஆண்டு வைபவ்- பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மேயாத மான்’.

இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார்.

இதைத்தொடர்ந்து அமலாபால் நடிப்பில் ‘ஆடை’ படமும், சந்தானத்தின் ‘குலுகுலு’ படத்தையும் இயக்கி இருந்தார். இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

ரத்னகுமார் படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் உள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றி இருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

இதைத்தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விஜய்யின் ‘லியோ’ படத்திலும் பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது.

இந்நிலையில், இயக்குனர் ரத்னகுமார் தனது X-ட்விட்டர் வலைதளத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எழுதுவதற்காக ஆஃப் லை செல்கிறேன். என் அடுத்த பட அறிவிப்பு வரை சமூக வலைதளத்தில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

நேற்று விஜய்யின் ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில்..

கழுகு உயரே பறந்தாலும் பசிக்காக கீழே வந்து தான் ஆக வேண்டும்” என ரத்னகுமார் பேசியிருந்தார்.. அவரது பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததும் இங்கே கவனிக்கத்தக்கது.

Rathna Kumar on taking a break from social media

பிசினஸ்மேன் டூ டைரக்டர்.; ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் ‘ஈ-மெயில்’

பிசினஸ்மேன் டூ டைரக்டர்.; ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் ‘ஈ-மெயில்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ஈமெயில்’.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையும் சமீபகாலமாக தமிழ், தெலுங்கில் கவனம் பெற்றுள்ளவருமான ராகினி திவேதி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக முருகா அசோக்குமார் நடித்துள்ளார்.

2வது நாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.

மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர்.

காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக இந்த படம் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் உருவாகி உள்ளது.

அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க திரௌபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்கிறார்.

கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 20 படங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வம் மாதப்பன் இப்படத்தின் ஒளிப்பதிவைக் கவனித்துள்ளார்.

வேலையில்லா பட்டதாரி, நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜேஷ் குமார் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

நாயகிக்கு திடீரென ஒரு ஈமெயில் வருகிறது. அதில் குறிப்பிட்ட லிங்க்கை கிளிக் செய்து விளையாடினால் மிகப்பெரிய பரிசு காத்திருப்பதாக சொல்லப்பட, அந்த விளையாட்டிற்குள் இறங்கிய கதாநாயகி எதிர்பாராத விதமாக ஒரு மாஃபியா கேங்கில் சிக்கிக் கொள்கிறார்.

ஈமெயில்

இதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை. சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களில் நடக்கும் மோசடிகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மையப்படுத்தி இந்த படத்தின் கதையை உருவாக்கி உள்ளார்கள்.

இந்த படம் குறித்தும் படப்பிடிப்பு அனுபவங்கள் மற்றும் ரிலீஸ் குறித்தும் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான எஸ்.ஆர் ராஜன் கூறும்போது,

“ஒரு பிசினஸ்மேனாக இருந்துக் கொண்டு படம் தயாரிக்கும் ஆர்வத்தில் சினிமாவிற்கு வந்தேன். ஆனால் இங்குள்ள சூழ்நிலை என்னை ஒரு இயக்குநராகவே மாற்றி விட்டது. என்னாலும் முடியும் என்கிற வெறியுடன் கதை மீதுள்ள நம்பிக்கையில் இந்த படத்தை இயக்கியுள்ளேன்.

ஆரம்பத்தில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் நான் புதியவன் என்பதால் கொஞ்சம் சிரமங்களைக் கொடுத்தனர்.

அதேசமயம் படப்பிடிப்பில் நான் இந்த படத்தை உருவாக்குவதைப் பார்த்து போகப்போக அவர்களே எனக்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தொடங்கினர்.

கதாநாயகியை மையப்படுத்திய இந்த படத்தின் கதையை பல முன்னணி நடிகைகளிடம் கூறினேன். ஆனால் அவர்கள் யாருமே கதை கேட்க கூட முன்வரவில்லை. அதே சமயம் நடிகை ராகினி திவேதி மிகப்பெரிய மனதுடன் கதை கேட்க ஒப்புக்கொண்டார்.

கதையைக் கேட்டு முடித்ததும் சில நாட்கள் கழித்து அழைத்து நீங்கள் கூறிய கதையை அப்படியே படமாக எடுப்பீர்களா என்று மட்டும் கேட்டார். அவர் எதிர்பார்த்தபடியே அவரிடம் சொன்ன கதையை அப்படியே படமாக்கி இருக்கிறேன்.

இடையில் படப்பிடிப்பு சமயத்தில் வெவ்வேறு விதமான பிரச்சனைகளும் இடைஞ்சல்களும் ஏற்பட்டன.

இந்த படத்தின் படப்பிடிப்பை தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மைசூர், கேரளா, கோவா மற்றும் மும்பை என பல இடங்களில் நடத்தினோம்.

மொத்தம் 56 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில் பாண்டிச்சேரியில் 3 நாட்களும் கோவாவில் 7 நாட்களும் மிகப்பெரிய மழை பெய்து எங்களை ஷூட் செய்யவிடாமல் தடுத்தது.

ஈமெயில்

இதனால் கால்ஷீட் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அந்த சமயத்தில் கிக், போலோ சங்கர் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வந்த ராகினி திவேதி எங்கள் மீது உள்ள நம்பிக்கையால் மீண்டும் எங்களுக்கு தேவைப்பட்ட கால்ஷீட்டை கொடுத்து உதவி நடித்தார்.

ஒரு சண்டைக் காட்சியின் போது பாம் பிளாஸ்ட் நடைபெற்று நாயகியின் காலில் ஆறு தையல் போட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் கன்னட திரை உலகினர் சிலர் திரண்டு வந்து பிரச்சனை உருவாவது போன்ற சூழலில் நடிகை ராகினி திவேதி தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டு படப்பிடிப்பில் தொடர்ந்து நடித்து ஒத்துழைப்பு கொடுத்தார்.

அதேபோல முருகா அசோக் குமாரும் காதில் அடிபட்டு ரத்தம் வழிந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தையல் போட்டு அப்படியே படப்பிடிப்புக்கு திரும்பி மூன்று நாட்கள் இடைவிடாமல் நடித்துக் கொடுத்துவிட்டுத் தான் கிளம்பிச் சென்றார்.

இந்த படத்தில் மனோபாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கான இரண்டே காட்சிகள் மட்டும் படப்பிடிப்பு நடக்க வேண்டிய நிலையில் தான் உடல்நிலை சரியில்லை எனக் கூறி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

அதன்பிறகு அவர் உடல் நிலை உடல்நலக் குறைவு காரணமாக எதிர்பாராத விதமாக காலம் ஆகிவிட்டார்.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர் நடித்த காட்சிகளுக்கு அவரையே டப்பிங் பேச வைத்து நிறைவு செய்து விட்டேன்.

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் கன்னடம் என இரண்டு மொழிகளிலும் இந்தப்படம் ரிலீஸுக்கு தயார் நிலையில் படம் இருக்கிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘இனி உத்திரம்’ என்கிற படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குகிறார் இயக்குநர் எஸ்.ஆர் ராஜன்.

இதில் நடிக்க முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தையில் உள்ளோம்., வரும் ஜனவரியில் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது என தனது அடுத்த படத்திற்கான முக்கிய தகவல்களையும் அறிவித்துள்ளார் இயக்குநர் எஸ்.ஆர். ராஜன்.

ஈமெயில்

Email movie speaks about Online Games

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..; ‘உலகம் சுற்றும் வாலிபன் – 50’ கொண்டாடும் MGR ரசிகர்கள்

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..; ‘உலகம் சுற்றும் வாலிபன் – 50’ கொண்டாடும் MGR ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை ஒரு நடிகராகவும் ஒரு அரசியல்வாதியாகவும் தமிழகத்தில் முன்னாள் முதல்வராகவும் பலருக்கு தெரியும். அதே சமயம் அவர் சில படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார்.

எம்ஜிஆர் தயாரித்து இயக்கி நடித்த திரைப்படம் தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. இந்த படம் 1973ஆம் ஆண்டில் வெளியாகி தற்போது 50 ஆண்டுகளை கடந்துள்ளது.

இதில் மஞ்சுளா, லதா, சந்திரகலா, நம்பியார், மனோகர், அசோகன், நாகேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்த இப்படம் வசூல் சாதனைப் படைத்தது. இதன் பாடல்கள் நிலவு ஒரு பெண்ணாகி… பச்சைக்கிளி முத்துச்சரம்… உலகம் அழகு கலைகளின் சுரங்கம்… ஆகியவை தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் பாடல்கள்.

இப்படம் ரிலீசாகி தற்போது 50 ஆண்டுகள் ஆனதை ஓட்டி, இதன் பொன் விழாவை எம்.ஜி.ஆர்.ரசிகர்கள் நவம்பர் 5-ம் தேதி கொண்டாட உள்ளனர்.

தி.நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கத்தில் இந்த விழா நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கி இரவு வரை நடைபெற உள்ளது.

இதில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகை லதா, புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

MGR fans celebrates Ulagam Suttrum Valiban 50 years

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பது இதுதானே…

நான் சுயநலவாதி.. நான் யாருன்னு காட்டனும்ல..; ‘தங்கலான்’ என்பதே அரசியல்தான் – ரஞ்சித்

நான் சுயநலவாதி.. நான் யாருன்னு காட்டனும்ல..; ‘தங்கலான்’ என்பதே அரசியல்தான் – ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’.

ஜிவி பிரகாஷ் இசையமைத்த இந்த படத்தை ஞானவேல் ராஜா தன் ஸ்டுடியோ கீரின் நிறுவனம் சார்பாக தயாரித்திருக்கிறார்.

இன்று நவம்பர் 1ம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஞ்சித் பேசும்போது இந்த படத்திற்காக கடினமான உழைப்பை கொடுத்துள்ளார் விக்ரம்.

அவரின் அர்ப்பணிப்பு சொல்ல முடியாது.

நான் எப்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சுயநலவாதியாக செயல்படுவேன்.. எனக்கு தேவையானதை கேட்டு வாங்கிக் கொள்வேன். அதில் எந்த சமரசமும் செய்து கொள்வது மாட்டேன்.

‘அட்டகத்தி’ படம் முதலில் எனக்கு ஞானவேல் ராஜாவிடம் நல்ல பழக்கம் இருந்து வருகிறது. எங்களின் நட்பு கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறது. அவரிடம் இந்த டீசரை போட்டு காண்பித்த போது இன்னும் எதிர்பார்க்கிறேன் இன்னும் எதிர்பார்க்கிறேன் என கேட்டுக் கொண்டே இருந்தார்.

இதுபோல கேட்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அப்போதுதான் நான் யார் என்பதை காட்ட முடியும்..

ஜிவி பிரகாஷ் ஒரு நடிகராக பிஸியாக இருந்தாலும் இதிலும் ஒரு அளவிட முடியாத பங்களிப்பை கொடுத்துள்ளார். இன்னும் ‘தங்கலான்’ படத்திற்கு நிறைய மேடைகள் இருப்பதால் நிறைய பேசலாம். கண்டிப்பாக ‘தங்கலான்’ படத்தில் அரசியல் இருக்கும் ‘தங்கலான்’ என்பதே ஒரு அரசியல் தான் என பேசினார் பா ரஞ்சித்.

Pa Ranjith speech at Thangalaan teaser launch

அன்னபூரணி அவதாரமெடுத்த நயன்தாரா.; டிசம்பர் 1 முதல் மக்களை சந்திக்கிறார்

அன்னபூரணி அவதாரமெடுத்த நயன்தாரா.; டிசம்பர் 1 முதல் மக்களை சந்திக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாராவின் 75வது படமான ‘அன்னபூரணி- The Goddess of Food’ டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

டிசம்பர் எப்பொழுதும் திருவிழா காலம் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் இந்தியாவில் மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.

அந்த வகையில் இந்தப் படத்தின் நல்ல கதையம்சம் குடும்பப் பார்வையாளர்களை ஈர்க்கும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அன்னபூரணி

இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தமன் எஸ் இசையமைத்திருக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

ஜி துரைராஜ் (கலை), அருள் சக்தி முருகன் (வசனம்), பிரசாந்த் எஸ் (கூடுதல் திரைக்கதை), சஞ்சய் ராகவன் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), லிண்டா அலெக்சாண்டர் (நிர்வாகத் தயாரிப்பாளர்), வெங்கி (பப்ளிசிட்டி டிசைனர்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

அன்னபூரணி

Nayanthara Jai starrer Annapoorani movie release on 1st Dec 2023

More Articles
Follows