தனுஷ்-சௌந்தர்யா ரஜினியை வாழ்த்திய சிவகார்த்திகேயன்

தனுஷ்-சௌந்தர்யா ரஜினியை வாழ்த்திய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and sivakarthikeyanதனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் சினிமாவை தாண்டியும் நட்புடன் பழகி வருகின்றனர்.

இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கிசுகிசுக்கப்பட்டாலும் தங்கள் நட்பை தொடர்ந்தே வருகின்றனர்.

இதை நிரூபிக்கும் வகையில் தனுஷ் தயாரித்து கதை வசனம் எழுதி நடித்துள்ள விஐபி2 படத்தின் ரிலீசை முன்னிட்டு அவருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

மேலும் பட இயக்குனர் சௌந்தர்யா ரஜினிக்கும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Sivakarthikeyan‏Verified account @Siva_Kartikeyan
Best wishes to @dhanushkraja sir @soundaryaarajni @RSeanRoldan & full team on #VIP2 release

ஓவியாவின் காதலுக்கு ஓகே சொன்ன ஆரவ் அம்மா..?

ஓவியாவின் காதலுக்கு ஓகே சொன்ன ஆரவ் அம்மா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aarav and oviyaகமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் புகழ் உச்சிக்கே சென்றுவிட்டார் நடிகை ஓவியா.

இதனால் பல புதிய ரசிகர்களை அவர் பெற்றுள்ளார்.

நிகழ்ச்சியின் போது ஆரவ்வை காதலித்தார்.
ஆனால் அவர் மறுக்கவே, விரக்தியுடன் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்து வெளியேறினார்.

அதன்பின்னர் ரசிகர்கள் முன்னிலையில் கமலை சந்தித்து பேசினார்.

அப்போதும் ஆரவ்வை காதலிப்பதாகவும், அவருக்காக காத்திருப்பதாகவும் சொன்னார்.

இதுகுறித்து நடிகர் ஆரவ் அவர்களின் அம்மா கூறும்போது… ஆரவ் சம்மதித்தால் ஓவியாவை மருமகளாக ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

விஜய் பட விழாவில் ரஜினி-கமல் பங்கேற்பு..?

விஜய் பட விழாவில் ரஜினி-கமல் பங்கேற்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal rajini vijayவரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அட்லி-விஜய்-ஏஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகியிள்ள மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும்‌ ரஜினிகாந்த் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ராமநாராயணன் தொடங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படம் மெர்சல் என்பதால் இருவரும் கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில், ரஜினி, கமல், விஜய் ஆகிய மூவரும் அரசை விமர்சித்து பேசி வருகின்றனர்.

எனவே இவர்கள் மூவரும் ஒரே மேடையில் தோன்றினால் நிச்சயம் அரசியல் அனல் பறக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.

திமுகவில் சேர கமல்ஹாசனை அழைத்த கலைஞர்

திமுகவில் சேர கமல்ஹாசனை அழைத்த கலைஞர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kalaignar and kamal haasanதிமுக சார்பில் சென்னையில் முரசொலி நாளிதழின் பவளவிழா நடைபெற்றது.

அதில் அரசியல் பிரபலங்களும் திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டனர்.

அப்போது கமல் பேசியதாவது…

திராவிடம் என்பது தமிழக, தென்னிந்தியா மட்டுமல்ல. ஜனகனமன… உள்ளவரை திராவிடம் இருக்கும்.
இந்த விழாவுக்கு வரும்போது பலரும் என்னைக் கேட்டார்கள். அந்த கழகத்தில் சேரப் போகிறீர்களா என்று?

சேர வேண்டும் என்று முடிவெடுத்திருந்தால் 1983 ஆம் ஆண்டே சேர்ந்திருப்பேன்.

அப்போது கருணாநிதி எனக்கு ஒரு தந்தி அனுப்பினார், “நீங்கள் ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேரக்கூடாது?” என்று.

அந்த தந்தியை வெளியே காட்ட தைரியமில்லை; அதற்கு பதில் அனுப்பவும் தைரியம் இல்லை.

இன்றுவரை அதற்கு பதில் சொல்லவில்லை. கலைஞரும் இன்றுவரை அதற்கான பதிலை கேட்கவில்லை.

அந்த மரியாதை இந்த மேடையிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் வந்துள்ளேன்.

ஒருவரை ஒருவர் விமர்சித்து கொண்டவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரே மேடையில் இருக்கும் ஒரு புதிய கலாச்சாரத்தை நானும் பயில இங்கு வந்திருக்கிறேன்” என்று பேசினார் கமல்ஹாசன்.

பெயரை மாத்தியாச்சு; சான்ஸ் இல்ல; மீண்டும் இயற்பெயரில் அனுஷா நாயர்.

பெயரை மாத்தியாச்சு; சான்ஸ் இல்ல; மீண்டும் இயற்பெயரில் அனுஷா நாயர்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anusha Nairஆலப்புலாவில் பிறந்து பெங்களூரில் படித்து வளர்ந்தவர் அனுஷா நாயர்.

மூன்றாவது வயதிலேயே காலில் சலங்கை கட்டி நடனமாடிக்கொணடிருந்தவர் பிரபலமான மலையாள டெலிஃபிலிம்களிலும் கதா நாயகியாக வலம் வரவே, சுரேஷ்கோபி ஹீரோவாக நடித்த ‘தாவளம்’ படத்தில் நெடுமுடி வேணுவின் மகளாக சிறந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

இதுவே அனுஷா நாயருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்க காரணமாய் அமைந்தது.

அனுஷா நாயர் ‘மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி’ படக்குழுவினர்களின் கண்ணில் பட அவர்களது அடுத்த படமான ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி ‘யில் மாலினி என்று பெயரை மாற்றி கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

அதை தொடர்ந்து மலையாளத்தில் பகத்ஃபாசில் நடித்த ‘அன்னயும் ரசூலும்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

தமிழில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால் நடனத்தில் கவனத்தை செலுத்தினார்.

பரதம்,குச்சுப்புடி நடனத்தில் தேர்ச்சி பெற்று மேடை நடனத்தில் கவனம் செலுத்தி வந்தவருக்கு பிரபல மலையாள இயக்குநர் ராஜீவ் ரவியிடமிருந்து மீண்டும் நடிக்க அழைப்பு வர மேடை நடனத்துடன் சினிமாவிலும் கவனம் செலுத்த தயாராகி விட்டார் அனுஷா நாயர்.

சினிமாவில் தன் நிஜப் பெயரிலேயே புகழ் பெற விரும்பும் அனுஷா நாயருக்கு தன்னை கதாநாயகியாக்கிய தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமாக வேண்டும் என்பதே ஆசை.

தன்னால் எவ்வளவு சவாலான கதாபாத்திரமானாலும் அதை ஏற்று நடித்து பெயர் வாங்க முடியும் என்ற தன்னம்பிக்கையோடு காத்திருக்கும் அனுஷா நாயர்,

’’நடனமும் நடிப்பும் எனக்கு இரு கண்கள் மட்டுமல்ல, உயிரும் கூட” என்கிறார்.

மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்-நயன்தாரா; டைரக்டர் தெரிஞ்சிருக்குமே

மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்-நயன்தாரா; டைரக்டர் தெரிஞ்சிருக்குமே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and vignesh shivanபொன்ராம் இயக்கும் படத்தில் சமந்தாவுடன் டூயட் பாடி வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் திடீரென ஞானவேல்ராஜா தயாரிக்க, விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.

இதில் நயன்தாராவை நாயகியாக ஒப்பந்தம் செய்ய விக்னேஷ் சிவன் முயற்சித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

விக்னேஷ் சிவனின் நெருங்கிய தோழி நயன்தாரா என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இது உண்மையானால் விக்னேஷ்சிவனின் இந்த செயலில் வியப்பில்லை என்கிறீர்களா? அட. அதுவும் சரிதான்.

வேலைக்காரன் படத்திலும் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows