2.0 படத்துடன் இணையும் சிம்புவின் *வந்தா ராஜாவாதான் வருவேன்*

Vantha Rajava Than Varuven trailer join with 2point0 movieசிம்பு நடிப்பில் உருவாகும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் சுந்தர் சி.

லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

ஐதராபாத்தில் நவம்பர் 30 வரை படப்பிடிப்பை நடத்திவிட்டு பின்னர் பாடல் காட்சிக்காக படக்குழுவின்ர வெளிநாடு செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ள படக்குழு அதற்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளனர்.

தற்போது டப்பிங் பேசும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் சிம்பு. அந்த புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை நவம்பர் 29ஆம் தேதி ரிலீசாகவுள்ள ரஜினியின் 2.0 படத்துடன் இணைத்து திரையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இரண்டு படங்களையும் லைகா நிறுவனமே தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் 2019 பொங்கல் தினத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை திரைக்கு கொண்டு வர லைகா திட்டமிட்டுள்ளது.

Vantha Rajava Than Varuven trailer join with 2point0 movie

Overall Rating : Not available

Related News

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமிசாக்சன், அக்ஷய்…
...Read More
ரஜினிகாந்த், அக்சய்குமார், ‌ஷங்கர், லைகா ஆகியோரது…
...Read More
மேற்கு ஆஸ்திரேலியா டெர்பி மாநில டிராபிக்…
...Read More

Latest Post