‘மாமன்னன்’ படத்தின் தெலுங்கு டைட்டில் & ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘மாமன்னன்’ படத்தின் தெலுங்கு டைட்டில் & ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான படம் ‘மாமன்னன்’.

இப்படத்தில் உதயநிதி, பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் ஜூன் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘மாமன்னன்’ திரைப்படம் தெலுங்கில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மாமன்னன்’ திரைப்படம் தெலுங்கில் “நாயகுடு” (Nayakudu) என்ற பெயரில் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளீல் வெளியாகிறதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

நாயகுடு

Udhayanidhi’s ‘maamannan’ movie is releasing in telugu too

பிரசாந்த் நீல் – பிரபாஸ் கூட்டணியின் ‘சலார்’ டீசர் படைக்கும் சாதனை

பிரசாந்த் நீல் – பிரபாஸ் கூட்டணியின் ‘சலார்’ டீசர் படைக்கும் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KGF புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘சலார்’.

இப்படத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.

கே.ஜி.எப். படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரித்து வருகிறது.

‘சலார்’ படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலார்

‘சலார்’ திரைப்படத்தின் டீசர் இன்று காலை 5.12 மணிக்கு படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், ‘சலார்’ படத்தின் டீசர் வெளியாகிய 12 மணி நேரத்தில் யூடியூபில் 45 மில்லியன் பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங்கில் உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Salaar – Teaser

Prabhas’ Salaar Teaser Crosses 45 Million Views just 12 hours Of Its Release

3 வருடத்திற்குள் கணவனை விவகாரத்து செய்யும் சிரஞ்சீவி மகளும் நடிகையுமான நிஹாரிகா

3 வருடத்திற்குள் கணவனை விவகாரத்து செய்யும் சிரஞ்சீவி மகளும் நடிகையுமான நிஹாரிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நிஹாரிகா.

இவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகள்.

நிஹாரிகா தமிழில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்திருந்தார்.

சினிமா மட்டுமின்றி சின்ன திரையிலும் நடித்து வருகிறார்.

இவருக்கு 2020-ம் வருடம் குண்டூர் ஐ.ஜி. மகன் சைதன்யாவுடன் திருமணம் நடந்தது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அரண்மனையில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.

இந்தத் திருமணத்தில் சிரஞ்சீவி, ராம்சரண், அல்லு அர்ஜுன் உட்பட பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த திருமணப் புகைப்படங்கள் அனைத்தையும் திடீரென நீக்கினார் நிஹாரிகா.

இதனால் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகச் செய்திகள் பரவின.

இந்நிலையில், ஹைதராபாத் அருகிலுள்ள குக்கட்பள்ளி குடும்ப நல நீதிமன்றத்தில் நிஹாரிகா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“நானும் சைதன்யாவும் பிரிய முடிவெடுத்துள்ளோம். பிரிவையும், புதிய வாழ்வையும் ஏற்க எங்களுக்கு தேவையான ப்ரைவசியை கொடுக்க வேண்டுகிறேன்” என அதில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நடிகை நிஹாரிகா தன் கணவர் சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளது தெலுங்குத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

chiranjeevi daughter Niharika confirms divorced with husband Chaitanya

3வது மனைவியையும் விவாகரத்து செய்யும் பவர் ஸ்டார்.; அடுத்த புது மனைவி யார்.?

3வது மனைவியையும் விவாகரத்து செய்யும் பவர் ஸ்டார்.; அடுத்த புது மனைவி யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருபவர் பவன் கல்யாண். அவர் தனியாக அரசியல் கட்சியும் நடத்தி வருகிறார்.

இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் தம்பி ஆவார்.

சினிமாவில் ஜொலித்த பவன் கல்யாணை அவரது ரசிகர்கள் ‛பவர் ஸ்டார்’ என அழைக்க தொடங்கினர்.

முதலாவதாக பவன் கல்யாண் 1997 ல் நந்தினி என்பவரை திருமணம் செய்தார். அவர்கள் 2 பேருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

நடிகையும், மாடலுமாக இருந்த ரேணு தேசாயுடன், பவன் கல்யாண் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதாக பரவிய தகவல் இருவருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தியது. இதையடுத்து நந்தினியை முறைப்படி பவன் கல்யாண் விவாகரத்து செய்தார்.

அதன்பிறகு ரேணு தேசாயை 2009ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை 3 ஆண்டுகள் நீடித்த நிலையில் 2012ல் விவாகரத்து பெற்றனர்.

அதன்பிறகு ரஷ்யாவை சேர்ந்த நடிகையான அன்னா லெஷ்னேவாவை (Anna Lezhneva) பவன் கல்யாண் 3ம் திருமணம் செய்தார். ‘டீன் மார்’ படப்படிப்பின்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.

அவர்கள் சமீப காலமாக பிரிந்து வாழ்ந்து வருவாதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது அவர்கள் விவாகரத்து செய்ய இருக்கின்றனர் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இருப்பினும் பவன் கல்யாண் தரப்பு வைரலாகும் இந்த செய்தி பற்றி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

Pawan Kalyan and 3rd wife Anna Lezhneva heading for a divorce

நந்தமுரி கல்யாண் ராம் நடிக்கும் ‘டெவில்’ பட அப்டேட்,

நந்தமுரி கல்யாண் ராம் நடிக்கும் ‘டெவில்’ பட அப்டேட்,

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நந்தமுரி கல்யாண் ராமின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய நடிப்பில் தயாராகி வரும் ‘டெவில்’ படத்திலிருந்து பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

நந்தமுரி கல்யாண் ராமின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து, அவர் நடித்து வரும் ‘டெவில்’ படத்தில், அவர் கதாபாத்திரத்தை விவரிக்கும் காணொளியை படக் குழுவினர் வெளியிடப்பட்டிருக்கிறார்கள்.

நந்தமுரி கல்யாண்ராம் தனது திரையுலக பயணத்தின் தொடக்கத்திலிருந்தே தனித்துவமான திரைக்கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்றவர்.

‘டெவில்’ படத்தின் மூலம் மற்றொரு சுவாரஸ்யமான திரைக்கதையைக் கொண்டு வருகிறார்.

கதாநாயகனின் மூர்க்கத்தனத்தைக் குறிக்கும் வகையில் ‘டெவில்’ என பெயரிடப்பட்ட இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

மேலும் ‘பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட்’ என்ற கவர்ந்திழுக்கும் வாசகத்துடன் திரைக்கு வருகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

நந்தமுரி கல்யாண் ராம் பிறந்தநாளை முன்னிட்டு தயாரிப்பாளர்கள் ‘டெவில்’ பற்றிய பிரத்யேக காணொளியை வெளியிட்டனர். இதில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இந்த காணொளியில்
‘டெவில்’ என்ற கொடூரமான மற்றும் புத்திசாலித்தனமான நபர் ஒருவர் திடமான எதிர்பார்ப்புடன் அறிமுகப்படுத்தப்படுகிறார்.

“சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் டெவில் என்று ஒரு பிரிட்டிஷ் ஏஜென்ட் இருந்தார்.” என்று குரல் ஒலிக்கிறது. நந்தமுரி கல்யாண் ராம் அசத்தலாகத் தோன்றி, ஒரு நல்ல ஏஜென்ட் எப்படி இருக்க வேண்டும்? என்பதைப் பற்றிய உரையாடலைப் பேசுகிறார்.

கல்யாண் ராம் பொருத்தமான ரகசிய உளவாளி போல தோற்றமளிக்கிறார், பார்வையாளர்களால் அவருடைய கதாபாத்திரத்தை மட்டுமே உணர முடிகிறது. கல்யாண் ராம் என்ற நடிகராக அல்ல. ஒளிப்பதிவு, பின்னணி இசை, நடிகை சம்யுக்தா மேனனின் தோற்றம்.. என அனைத்தும் தனித்துவம் பெற்று நிற்கிறது.

இயக்குநர் நவீன் மேதாராம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘டெவில்’ திரைப்படத்தில் நந்தமுரி கல்யாண்ராம், சம்யுக்தா மேனன் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீகாந்த் விஸா எழுதியிருக்க, எஸ். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஹர்ஷவர்த்தன் ராமேஷ்வர் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் படத்தொகுப்பு பணிகளை தம்மிராஜு கவனித்திருக்கிறார். பீரியட் டிராமா ஜானரில் பிரம்மாண்டமான ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அபிஷேக் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபிஷேக் நாமா தயாரித்திருக்கிறார். இதனை தேவன்ஷ் நாமா வழங்குகிறார்.

‘டெவில்’ திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை பற்றிய புதிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறது.

டெவில்

Nandamuri Kalyan Ram’s devil Movie Update

வேளாண் வர்த்தக திருவிழா ; உழவருக்கு உதவ மக்களுக்கு கார்த்தி கோரிக்கை

வேளாண் வர்த்தக திருவிழா ; உழவருக்கு உதவ மக்களுக்கு கார்த்தி கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமாரின் புதல்வர்களில், நடிகர் சூர்யா மாணவர்களின் கல்விப் பணிக்காக அகரம் பவுண்டேஷன் நிறுவனத்தை நடத்தி மாணவர்களின் தரத்தை உயர்த்தி வருகிறார்.

இன்னொரு பக்கம் அவரது தம்பி நடிகர் கார்த்தி உழவர்களின் மேம்பாட்டுக்காக உழவன் பவுண்டேஷன் என்கிற அறக்கட்டளை மூலம் நலிவுற்ற விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் வரும் ஜூலை 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வேளாண் வர்த்தக திருவிழா ஒன்றை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்த தகவலை மிகவும் அக்கறையுடன் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ள நடிகர் கார்த்தி.

“நூற்றுக்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களை இந்த வேளாண் வர்த்தக திருவிழாவில் நேரடியாக விற்பனை செய்ய இருக்கின்றனர்.

அனைவரும் குடும்பத்துடன் இந்த திருவிழாவுக்கு வந்து வேளாண் மக்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

Karthi requests goverment people to help the farmer

More Articles
Follows